இணையதள சூட்சமம் அறிவோம் வாருங்கள்

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என்றும் எதுவுமே இல்லை.இங்கு எல்லாமே பொதுவானது தான்.

ஓபன் சோர்ஸ் கோட்பாடும் அதன் நட்சத்திர அடையாளமான  லின்க்ஸ் சாப்ட்வேரும் இதற்கு சரியான உதாரணம்.இன்னும் எண்ணற்ற உதாரணங்களும் இருக்கவே செய்கின்ற‌ன.

டூல்செஸ்ட்.மீ தளத்தை இதன் நீட்சியாக‌வே கருதலாம்.இந்த இணையதள‌ம் ஒரு இணையதளத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப சூட்சமங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிற‌து.அதாவ்து இணையதளத்தை வடிவமைக்கவும் அதில் உள்ள தகவல்களை இடம் பெற வைக்கவும் பயன்ப‌டுத்தப்பட்ட சாப்ட்வேர் மற்றும் இதர சாப்ட்வேர் கருவிகள் என்ன என்னவென்பதை தளத்தை உருவாக்கியவர்கள் பகிர்ந்து கொள்வதற்கான இணைய மேடையாக இந்த தளம் அமைந்துள்ள‌து.

இணையதளத்தின் உருவாக்கத்தில் உள்ள தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது எத்தனை மக்த்தானது என்பது புரியும்.காரணம் இந்த தளத்தின் வாயிலாக இணையவாசிகள் குறிப்பிட்ட இனையதளம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

அந்த தளம் எந்த இயங்கு தள‌த்தில் உருவாக்கப்பட்டது ,அதை வடிவமைக்க கையாளப்பட்ட இணைய மொழி எது,துணை நின்ற சாப்ட்வேர் எவை போன்ற தொழில்நுட்ப விவரங்களை உறுப்பினர்கள் இந்த தளத்தின் வாயிலாக வெளியிடலாம்.

இணைய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவ‌ர்களுக்கு இந்த தகவல்கள் பெரும் வரப்பிரசாதாமாக அமையும்.இணைய வடிவமைப்பு தொடர்பான புதிய நுட்பங்களை தெரிந்து கொள்ள இந்த தளம் கை கொடுப்பதோடு இத்தகைய தகவல்களை பகிர்வதன் மூலம் வடிவமைப்பாளர்களோடு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு அட்பையும் வளர்த்து கொள்ளலாம்.

இந்த தளத்தின் உறுப்பினர்கள் பட்டியலை பார்த்து அவ்ர்களின் இணையதளம் பின்னே உள்ள தொழில்நுட்ப தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொருவரும் தங்களது ஆரவத்திற்கு ஏற்ப உறுப்பினர்களை பிந்தொடரலாம்.

அதே நேரத்தில் சாதாரன இணையவாசிகளும் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவ‌ர்களாக இருந்தால் இந்த விவரங்க‌ளை படிப்பதன் மூலம் இணையதள உருவாக்கத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ள முடியும்.

முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த‌ தளம் என்றாலும் இணையம் எப்படி அறிவையும் ஞானத்தையும் ஜனநாயக மயமாக்கியிருக்கிற‌து என உண‌ர்த்தும் தளம்.

கொஞ்சம் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் இன்று இணையதள‌ உருவாக்கம் உள்ளிட்ட தொழில்நுடப் விஷயஙக்ளை கற்று கொள்வதற்கான வழிகாட்டிகளும்,பாடங்களும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.அந்த தகவல்களை பயன்ப‌டுத்தி கொள்ள உந்துசக்தியாக இந்த தளம் அமைந்துள்ள‌து.

இணையதள முகவரி;http://www.toolchest.me/

Advertisements

8 responses to “இணையதள சூட்சமம் அறிவோம் வாருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s