ரகசியங்களை பகிர வாருங்கள்;அழைக்கும் தளம்.

எல்லோரிடமும் ரக‌சியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம்.

சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை

.சிலர் இறையை விழுங்கிய மலைப்பாம்பு போல ரகசியத்தை அப்படியே மனதில் போட்டு புதைத்து விட்டு அதனால் சலனமோ சங்கடமோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.சிலருக்கோ ரகசியம் என்பது நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளாக உருத்திக்கொண்டே இருக்கும்.

இப்படி யாரிடமாவது சொல்லிவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு தீவிரமான ரகசியத்தை நெஞ்சில் சுமந்திருப்பவர்களும் சரி,மற்றவ‌ர்களோடு பகிர்ந்து கொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு லேசான ரகசிய‌த்தை மனதில் அசை போட்டு கொண்டிருப்பவர்களும் சரி விஸ்பர்டு இணையதளத்தை நிச்சயம் விரும்புவார்கள்.

காரனம் இந்த இணையதளம் மனதில் உள்ள ரகசியங்களை உலகோடு பகிர்ந்து கொள்ள வழி செய்கிற‌து.அதுவும் சுலபமான,சுவாரஸ்யமான முறையில்.

யாரிடம் ரகசியம் அல்லது உள்ளத்தை உருத்திக்கொண்டிருக்கும் விஷயம் இருக்கின்றனவோ அவர்கள் இந்த‌ தளத்தில் உறுப்பினராகி அதனை இங்கு இறக்கி வைத்து விடலாம். சித்திர கதை புத்தகத்தில் படவிளக்கத்திற்கான வரிகள் இடம்பெறும் குமிழ் போன்ற அழகான பகுதியில் உறுப்பினர்கள் ரகசியத்தை வெளியிடலாம்.

அதற்கென பொருத்தமான தலைப்பு கொடுத்து பகிர்ந்து கொள்ளலாம். ரகசியங்களை பகிர்ந்து கொள்வது சரி,ஆனால் அதனால் பிரச்னையோ சங்கடமோ ஏற்பட்டுவிட்டால்?இப்படி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.காரணம்,ரகசிய வாக்கெடுப்பு போல இந்த தளம் வழியே ஒருவர் தன்னைப்பற்றிய விவரத்தை வெளியிடாமலேயே ரகசியத்தை ‍பகிர‌லாம் என்பது தான்.

யாரிடமாவது சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கும் விஷயத்தை இந்த தளத்தில் பின்விளைவுகள் பற்றிய கவலை இல்லாமல் வெளியிடலாம்.பின்னர் மறந்துவிடலாம். சரி,இந்த பகிர்வால் என்ன லாபம்.இவற்றை படிக்கப்போவது யார்? யாரோ ஒருவர் அவற்றை படிக்கப்போகிறார்.அது தான் இந்த தளத்தின் சுவாரஸ்யம்.

அதாவது யாரோ ஒருவர் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை யாரோ ஒருவர் படிக்கப்போகிறார்.யார் படிக்கப்போகிறார் என்பது பகிர்ந்து கொண்டவருக்கு தெரியாது.அதே போல யார் பகிர்ந்து கொண்டார் என்பது படிப்பவருக்கும் தெரியாது.ஒரு ரகசியம் பகிரப்பட்டவுடன் இந்த தளம் அதனை தோராயமாக யாரோ ஒருவருக்கு அனுப்பி வைக்கிறது.அவர் அதனை படித்து பார்ப்பதோடு அது குறித்து ஏதாவ‌து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள‌ விரும்பினால் அதனை பதிலாக அனுப்பி வைக்கலாம்.

இதே போலவே வேறு யாரோ ஒருவர் பகிர்ந்து கொண்ட ரகசியமும் நமக்கு வந்து சேரும்.நாமும் அதனை படித்துவிட்டு கருத்து அனுப்பி வைக்கலாம்.ஆறுதலாகவோ,ஆலோசனையாகவோ கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் பிறகு சம்பந்தப்பட்டவ‌ர்கள் விரும்பினால் தங்களுக்குள் பரஸ்பர‌ம் தொடர்பு கொள்ளலாம்.இல்லை என்றால் அந்த ரகசியத்தை படிக்கமலேயே திருப்பி அனுப்பி விடலாம்.அது வேறு யாரவாது ஒருவருக்கு மீண்டும் அனுப்பபடும். நாம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை எங்கோ மூளையில் உள்ள யாரோ ஒருவர் படிக்க போகிறார் என்பதும் அவர் யார் என்றே தெரியாத புதிரும் தான் இந்த தளத்தின் அடிப்படை சுவாரஸ்யம்.

யாரவது எப்போதாவது பார்த்து படித்து தொடர்பு கொள்ளட்டும் என்ற எண்ணத்தோடு பாட்டிலில் ஒரு செய்தியை அடைத்து வைத்து அதை கடலில் தூக்கிவீசி விடும் விளையாட்டு பற்றி தெரியுமா?பாட்டில் இன் ஏ மெசேஜ் என்று சொல்லப்படும் இந்த சுவாரஸ்யமான விளையாட்டை உந்துதலாக கொண்டு இணையத்தின் வீச்சை ஆதார்மாக கொண்டு மனதில் உள்ள ரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கான சுவாரஸ்யமும் புதிர் த‌ன்மையும் இணைந்ததாக இந்த தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது.

பகிர்வதையும் வெளியீட்டையும் இணைய வாழ்கையின் மையமாக பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவை தளங்கள் மாற்றியுள்ள நிலையில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை யாரென்றே தெரியத யாரோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான் இந்த‌ தளத்தின் சிறப்பு.

மனதில் உள்ளத்தை சொல்லுங்கள்.உலகின் எங்கே முளையில் யாரோ ஒருவர் அதனை கேடக தயாக இருக்கின்றனர் என்று சொல்லி அழைக்கிரது இந்த தளம். இணையதள முகவரி;http://www.whisbird.com/

Advertisements

3 responses to “ரகசியங்களை பகிர வாருங்கள்;அழைக்கும் தளம்.

 1. பத்தி பிரித்து எழுதுங்கள் … வாசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. இறுதி சுட்டியை கிளிக் செய்யும்படி கொடுக்கவும். 😦

  இவ்வளவு பதிவு எழுதி விட்டர்கள். எப்படி இணையத்தில் படைப்புகளை வடிவமைப்பது என்பதை கொஞ்சம் கற்று கொள்வது நல்லது.

  • எல்லா பதிவுகளையும் பத்தி பிரித்தே எழுதுகிறேன்.சில‌ நேரங்களில் பிரவுசர் பிரச்ச‌னையால் பத்தியில்லாமல் போகிறது.அதனை உடன் சரி செய்து விடுகிறேன்.

   இணைப்புகளிலும் பிரவுசர் பிரச்ச்னை தான்.பையர்பாக்ஸ் பயன்ப‌டுத்தும் போது இணைப்பு கொடுக்க முடியவில்லை.சில நேரங்கலில் ஐ யு கைகொடுப்பதில்லை.சரி செய்ய முயல்கிறேன் நண்பரே.

   அன்புடன் சிம்மன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s