நட்சத்திரங்களின் இணைய ஜாதகம்.

ஒரு திரைப்படம் பற்றியோ,நட்சத்திரம் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் நேராக இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் என்று சொல்லப்படும் ஐஎம்டிபி தளத்திற்கு சொல்லலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

குறிப்பிட்ட நட்சத்திரம் பற்றி அந்தரங்கமான தகவல்கல் தேவை என்றால் அவர்களுடைய சொந்த இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

இப்போது வலைப்பின்னல் யுகம் என்பதால் நட்சத்திரங்கள் பற்றிய சமீபத்திய தகவலை தெரிந்து கொள்ள நினைத்தால் அவர்களின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் அல்லது மைஸ்பேஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். யூடிப்பில் தங்களுக்கென தனி சேனல் வைத்திருக்கும் பிரபலங்களும் இருக்கின்றனர்.

எனவே ரசிகர்கள் தங்களுது அபிமான நட்சத்திரங்கள் தொடர்பான தகவல்களையோ செய்திகளையோ தேடிப்பெறுவது சாத்தியம் தான்.

ஆனால் என்ன பிரச்சனை என்றால் நட்சத்திரங்களின் இணையதள முகவரி ,பேஸ்புக் பக்கம் போன்றவற்றைசரியாக அறிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கூகுலில் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.இணையதள முகவ்ரியில் துவங்கி ஒவ்வொன்றாக கண்டுபிடித்தாக வேண்டும்.

இத்தகைய தேடலில் ஈடுபட்டவர்களுக்கு இதில் உள்ள கஷட்டங்கள் தெரியும்.இணையதள முகவரியை தேடும் போது நட்சத்திரங்களின் இணையதளமா அல்லது அவரது சார்பில் ரசிகர்கள் உருவாக்கிய தளமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

டிவிட்டரிலும் போலி பக்கங்கள் இருக்கலாம். இப்படி இணையத்தில் அங்கும் இங்கும் தேடி அலைவதற்கு மாறாக ஒரே இடத்தில் நட்சத்திரங்களின் இணையதளம் ,பேஸ்புக்,டிவிட்டர்,இமெயில்,யூடியூப் என அனைத்து இணைப்புகளும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆதங்கம் இருக்குமாயின் ‘தி அஃபிசியல் ஸ்டோரி ஆப்’ இணையதளம் இந்த கச்சிதமாக நிறைவேற்றி தருகிறது.

இந்த தளத்தில் எந்த நட்சத்திரத்தை பெயரை டைப் செய்து தேடினாலும் அவர்களி இனைய ஜாதகத்தை அழகாக முன் வைத்து விடுகிறது.இணைய ஜாதகம் என்றால் இணையதளம்,பேஸ்புக் டிவிட்டர்,யூடியூப் என நட்சத்திரங்களின் இணைய இருப்பு அனைத்தும் அடங்கும்.

இவற்றோடு நட்சத்திரங்களின் ஐஎம்டிபி பக்கமும் இடம் பெறுகிறது. நட்சத்திரங்களை தொடர்பு கொள்வதற்கான இமெயில் முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக இந்த இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் ஒரே இடத்திலேயே நட்சத்திரங்கள் தொடர்பான எல்லா தகவல்களையும் திரட்டிவிடலாம். இந்த இணைப்புகளின் கீழே நட்சத்திரம் தொடர்பான சமீபத்திய செய்திகளின் தொகுப்பும் இடம் பெறுகிறது.அதன் கீழ் நட்சத்திரத்தின் டிவிட்டர் பதிவுகளும் இடம் பெறுகிறது.

மிகவும் அழகான அதே நேரத்தில் எளிமையான வடிவமைப்பில் இந்ததகவல்கள் இணைய ஜாதகமாக அமைதிருப்பது ரசிகர்களை நிச்சயம் கவரும்.

எந்த நட்சத்திரம் பற்றி தகவல் தேவையோ அவரது பெயரை டைப் செயது தேடிக்கொள்ளலாம். திரைப்பட நட்சத்திரங்கள் மட்டும் அல்லாது மாடல்கள்,தடகள வீரர்கள்,டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,பிரபலமான சமையல் கலைஞர்கள் ஆகியோர் பற்றிய இணைய ஜாதகமும் இங்கே இடம் பெற்றுள்ளன.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலேயே பிரபலங்களில் பிரபலமாக இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றது.அவற்றில் கிளிக் செய்தால் நட்சத்திரங்களின் பிரத்யேகபக்கத்திற்கு செல்லலாம்.

இதே போல செய்திகளின் அடிப்படையிலும் நட்சத்திரங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அதை பார்த்தும் நட்சத்திரங்களை அணுகலாம்.

இணையவாசிகள் தங்கள் வசம் உள்ள தகவலகலையும் இடம் பெற வைக்கலாம்.ஆனால் அதற்கு உறுப்பினராக வேண்டும்.

இணையதள முகவரி;

http://theofficialstoryof.com/

Advertisements

6 responses to “நட்சத்திரங்களின் இணைய ஜாதகம்.

  1. நானும் பிரபலமானவன்தான்……..

    நானும் பிரபலமானவன்தான்……..

    நானும் பிரபலமானவன்தான்……..

    அதனால என்னோட ஜாதகம் கண்டிப்பா அதுல இருக்கும். தேடிப்பாருங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s