டாட் காம் பெயருக்கு மாறிய இந்திய கிராமம்.

இணைய உலகில் கிராமங்களோ தனி மனிதர்களோ தங்கள் பெயரை மாற்றி கொண்டு டாட் காம் நிறுவனங்களின் பெயர்களை சூட்டிக்கொள்வதுண்டு.அந்த வகையில் இந்திய கிராமம் ஒன்றும் தன‌து பெயரை டாட் காம் பெயராக மாற்றி கொண்டுள்ளது.

இந்திய தலைநகர் டெல்லி அருகே உள்ள ஷிவ் நகர் என்னும் அந்த கிராமம் ஸ்நேப் டீல் டாட் காம் என தனது பெயரை மாற்றி கொண்டுள்ளது.

ஸ்நேப் டீல் டாட் காம் இந்தியாவின் ‘குருப்பான்’ என்று வர்ணிக்கப்படும் இ காமர்ஸ் தளம்.குருப்பான் இணையவாசிகள் கூட்டாக சேர்ந்து பொருட்கலை தள்ளுபடி விலைக்கு வாங்க உதவும் இணையதளம்.இந்த மாதிரியை பின்பற்றி மேலும் பல இணையதள‌ங்கள் இதே பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளன.

இந்தியாவிலும் இந்த மாதிரியை பின்பற்றி பல தளங்கள் உதயமாகியிருக்கின்றன.அவற்றுக்கெல்லாம் ஸ்நேப் டில் தான் முன்னோடி என்று சொல்லலாம்.கூட்டாக சேர்ந்து வாங்கும் ஆற்றலை இந்திய இனையவாசிகள் மத்தியில் பிரபலமாக்கிய ஸ்நேப் டீல் ந‌கர்புற மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விளங்குகிறது.

சிறிய‌ நகரங்களில் எல்லாம் கூட இந்த சேவை பிரபலாமாகி வருகிற‌து.ஆனால் நகரவாசிகளுக்கு கூட ஸ்நேப் டீல் மீது இல்லாத ஈடுபாடு டெல்லி அருகே உள்ள ஷிவ் நகர் கிராமத்திற்கு உண்டாகி இந்த‌ கிராமம் தனது பெயரையே ஸ்நேப் டீல் டாட் காம் என மாற்றி கொண்டுவிட்டது.

இத்தனைக்கும் கிராமவாசிகள் யாரும் ஸ்நேப் டீல் சேவையை பய‌ன்ப‌டுத்தி பலன் பெற்ற‌வர்கள் அல்ல;இவ்வளவு ஏன் கிராமவாசிகளில் எத்தனை பேர் இண்டெர்நெட்டை பயன்படுத்த தெரிந்தவர்கள் என்று தெரியாது.அப்ப்டியிருந்தும் இந்த கிராம மக்கள் ஸ்நேப் டீல் தளத்திற்கு நன்றி கடன் பட்டிருப்பதாக உணர்ந்து அதனை வெளிப்படுத்தும் விதமாக பெயரையே மாற்றி வைத்துள்ளனர்.

இந்த நன்றி உணர்வுக்கு காரணம்,கிராமத்தின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் 15 அடி பம்புகளை நிறுவனம் அமைத்து தந்திருப்பது தான்.

இதற்கு முன் இந்த கிராம மக்கள் குடிநீருக்காக தினமும் மைல் கணக்கில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.இப்போது இப்படி நடை பய‌ணம் மேற்கொள்ளாமலேயே தன்ணீர் கிடைக்க அடி ப‌ம்புகல் வழிசெய்துள்ளதால் கிராமவாசிகள் உற்சாகமாகியுள்ளனர்.

எல்லாம் ஸ்நேப் டீல் தளத்தின் நிறுவனர் குனால் பாஹலின் நல்லெண்ணத்தின் பயனாக தான்.

குனாலுக்கு இப்படி கிராமத்தின் குடிநீர் தேவையை போக்க வேண்டும் என்ற எண்னம் ஏற்பட்டதன் பின்னே சின்னதாக ஒரு கதை இருக்கிற‌து.

ஒரு முறை குனாலும் அவரது குழுவினரும் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சக ஊழியர் ஒருவர் தான் டெல்லி அருகே உள்ள ஷிவ் நகர் கிராமத்திலிருந்து வருவதை கூறி நல்ல குடிநீர் வசதி கூட‌ இல்லாத தனது கிராமாத்தின் போதாமைகளை கூறி வருந்தியிருக்கிறார்.குடிநீருக்காக கிரமாவாசிகள் மணிக்கனக்கில் மைல்கண‌க்கில் நடந்து செல்ல வேண்டியிருப்பது குறித்தும் அவர் தெரிவித்தார்.

இதை கேட்டதுமே அந்த கிராமத்தின் குடிநீர் தேவையை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று குணால் தீர்மானித்தார்.2 லட்சம் ரூபாயில் கிராமம் முழுவதுமாக 15 பம்புகளை அமைக்க முடியும் என தெரிந்து கொண்ட அவர் உடனடியாக அதற்கான ஏற்பாட்டினை செய்தார்.

இ காம‌ரஸ் பிரிவில் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்று வருவாயை ஈட்டி வந்த நிலையில் வருமானத்தில் சிறு பகுதியை கிராம மக்களின் தாகம் தணிக்க பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று குணால் நம்பினார்.

ஆனால் இந்த செயல் கிராமவாசிகளின் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.தன்ணிருக்காக அலைய வேண்டிய தேவையில்லாதது கிராம மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது.மற்ற வேலைகளில் அவர்களால கவனம் செலுத்த முடிந்தது.

இந்த அடிப்படை தேவை தங்களுக்கு சாத்தியமாகும் என்று அவர்கள் நினைத்ததில்லை.காரண‌ம் மக்கள் பிரதிநிதிகள் தேர்தகுக்கு வருவதும் வாக்குறுதி தந்து விட்டு மறந்து போவதுமே அவர்க‌ள் அனுபவமாக இருந்தது.இந்த நிலையில் ஸ்நேப் டீல் நிறுவனம் சார்பில் தன்ணீர் பம்புகள் அமைத்து தரப்பட்டதால் நெகிழ்ந்து போயினர்.நன்றி பெருக்கின் மிகுதியால் கிராமத்தின் பெயரையே ஸநேப் டீல் நகர் என மாற்றிவிட்டனர்.

இத்தனைக்கும் குணால் இது போன்ற எந்த பிரதி பலனையும் எதிர்பார்காமல் தான் கிராம மக்களுக்கு உதவியிருந்தார்.ஆனால் அரசாங்கமே செய்ய முயற்சிக்காத ஒரு விஷயத்தை குணால் செய்த்து தந்ததால் கிராம மக்கள் தாங்களாகவே முன் வந்து நிறுவனத்திற்கு இப்படி ஒரு அங்கீகார‌த்தை தந்தனர்.

பொதுவாக இணைய நிறுவன‌ங்கள் மூலம் கோடிஸ்வரர்களான நிறுவன அதிபர்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த பிறகு தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு நன்கொடையை வாரி வழங்குவது வழக்கமாக இருக்கிரது.ஆனால் குனாலை பொருத்தவரை வளரும் நிலையிலேயே கொடை வள்ளலாகவும் மாறியிருக்கிறார்.

3 responses to “டாட் காம் பெயருக்கு மாறிய இந்திய கிராமம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s