இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம்

இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அத‌ன் பெயர் ஷார்ட்பெயில்.

டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயிலின் இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் இமெயில் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து.

அதாவது பெயருக்கேற்ப இது இமெயில் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது.ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீள‌மாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது.அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விஷயத்தை சொல்லி விட வேண்டும்.

டிவிடரில் எப்படி அதிகப‌டசம் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு இருக்கிற‌தோ அதே போல ஷார்ட்மெயிலில் 500 எழுத்துக்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

நீங்கள் அனுப்பும் செய்திகள் எப்போதுமே சுருக்கமாக சொல்ல வந்ததை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சேவையை இன்பாக்ஸில் வந்து குவியும் படிக்கப்படாத இமெயில்களால் திணறிப்போகிற்வர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.அதோடு இமெயில் சுமை என்ப‌தும் இல்லாமல் போய்விடும்.

அது மட்டும் அல்ல இமெயிலோடு ஒட்டி கொண்டு வரும் இணைப்புகள் புகைப்ப‌டங்கள் போன்றவற்றுக்கும் இங்கு இடமில்லை.இது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும் தான் !

ஷார்ட்மெயிலை நீங்கள் பயன்படுத்த துவங்கினீர்கள் என்றால் உங்கலுக்கு வரும் மெயில்களும் ஷார்ட் அண்டு ஸ்வீட்டாக இருந்தாக வேண்டும்.அதாவ‌து அவையும் 500 எழுத்துகளுக்குள் இல்லை என்றால் திருப்பி அனுப்பபட்டுவிடும்.500 எழுத்துகளுக்குள் தொடர்பு கொள்ளுங்கள் என்னும் செய்தியோடு.

இமெயிலை எளிமையாக்க மட்டும் அல்ல அதனை சிறந்த முறையில் நிர்வ‌கிக்கவும் இது பேருதவியாக இருக்கும்.எந்த மெயில் வந்தாலும் உடனே படித்து பார்த்து விடலாம்.தள்ளிப்போடுவதோ மெயில்களை குப்பை போல சேரவிடுவதோ நேராது.

டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப ஷார்ட்மெயில் ரத்தின சுருக்கமாகியிருப்பதோடு சமூக வலைப்பின்னல் வசதியின் சாயலையும் கொண்டுள்ளது.

ஷார்ட்மெயிலில் செய்திகளை அனுப்பும் போதே அது அந்தரங்கமானதா அல்லது பொதுவில் பகிரக்கூடியதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.அந்தரங்கமானது என்றால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர் மட்டுமே பாக்க முடியும்.பொது என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.பதில் அனுப்பலாம்.இப்படி இமெயில் வாயிலாகவே உரையாடலில் ஈடுபடலாம்.

பேஸ்புக் பயன்ப‌டுத்துபவர்கள் சுவர் செய்தி மூலமே நண்பர்களை தொடர்பு கொண்டுவிடுவதால் இமெயிலின் தேவையே இல்லாமல் போவதாக சொல்லபடுகிற‌து.ஷார்ட்மெயில் பிரபலமானால் இதன் மூலமே நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யமுடியும் என்ப‌தால் பேஸ்புக் தேவையில்லாமல் போகலாம்.

ஷார்ட்மெயிலில் முகவரி பெறுவதும் மிகவும் சுலபமானது.டிவிட்டர் கணக்கு வைத்திருப்பாவர்க‌ள் அதன் மூலமே புதிய முகவரி பெறலாம்.ஐபோன் ஆன்டிராய்டு போன்களுக்கு ஏற்ற வடிவிலும் வருகிறது.

இமெயிலை புதுப்பிக்க வந்த புதுமையான் சேவை இந்த ஷார்ட்மெயில் என்று மனதார பாராட்டலாம்.

ஷார்ட்மெயில் பெற முகவ‌ரி;http://shortmail.com/

Advertisements

7 responses to “இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s