ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ் தளத்தை விஷேசமானது என சொல்லலாம்.காரணம் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் பாடங்களை கற்று கொள்ள கிளாஸ்பைட்ஸ் வழி செய்வது தான்.

என்ன தான் ஆங்கிலம் கற்க வேண்டும்,ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும்,ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மணிக்கணக்கில் பாடங்களை கேட்கவே ,இலக்கணத்தை அறிந்து கொள்ளவோ பலருக்கும் பொறுமை இருக்காது.

முதல் பாடத்தை புரிந்து கொண்டு மனதில் பதிய வைப்பதற்குள் அடுத்த பாடம் ஆரம்பமாகிவிட்டால் மிரண்டு போய் விடுவார்கள்.ஆசிரியர் எளிதாக சொல்லி கொடுத்தாலும் கூட கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

ஆர்வம் இருந்தும் கூட பலர் இந்த தடைகளை தாண்டி ஆங்கில மொழியை கற்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.

இந்த பிரச்சனைக்கு தான் கிளாஸ்பைட்ஸ் குறும்பாடங்கள் மூலம் அழகாக தீர்வு காண்கிறது.விடியோ வடிவிலான குறும்பாடங்கள்.

கல்வி உலகில் இப்போது குறும்பாடங்களை தான் நிபுணர்கள் கற்பதற்கான எளிய வழியாக முன்வைக்கின்றனர்.குறும்பாடங்கள் என்றால் பாடங்களை சின்ன சின்னதாக பிரித்து ஒரே நேரத்தில் ஒரு அம்சத்தை மட்டும் கற்றுத்தருதல் என புரிந்து கொள்ளலாம்.அதிக நேரம் தேவைப்படாமல் குறிகிய கால அளவில் பயிற்றுவிப்பதை இந்த பாடங்கள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

குறுங்கல்வி (மைக்ரோ லேர்னிங்)என்று சொல்லப்படும் இந்த வகை பயிற்றுவிக்கும் முறை இணையம் வழி கல்வி கற்பிப்பதிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கிளாஸ்பைட்ஸ் தளத்தில் காணகூடிய குறும்பாட வீடியோக்கள்ள எல்லாமே 2 நிமிடம் முதல் அதிக பட்சமாக 10 நிமிடம் வரை மட்டுமே ஓட்டக்கூடியவை .சராசரியாக பார்த்தால் 5 நிமிடங்கள் ஒடக்கூடியவை.எதையுமே வீடியோ கிளிப்பாக சிக நிமிடஙக்ள் பார்த்து ரசித்து பகிர்ந்து கொள்ளும் யூடியூப் தலைமுறைக்கு இந்த குறும் வீடியோக்கள் ஏற்றவை தான் இல்லையா?

மாணவர்கள் யூடியூப் வீடியாவை பார்த்து ரசிக்கும் உணர்விலேயே இந்த பாடங்களையும் பார்த்து மனதில் நிறுத்தி கொள்ளலாம்.

ஒவ்வொரு பாடத்திலும் ஏதாவது ஒரு அம்சத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கும்.வார்த்தை உச்சரிப்பு ,இலக்கண பயன்பாடு,கேள்வி கேட்கும் போது பயன்படுத்த வேண்டிய சொற்கள் என ஏதாவது ஒரு அம்சம் மட்டுமே ரத்தின சுருக்கமாக கற்றுத்தரப்படும்.

மாணவர்களுக்கு நிச்சயம் இந்த கிளிப்கள் சுமையாக இருக்காது.ஆனால் சுவையாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட நேரத்தில் தான் பாடம் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எப்போது விருப்பமோ அப்போது படித்து கொள்ளலாம்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.ஒரு பாடம் முடிந்த பின் அடுத்த குறும்பாடத்துக்கு போகலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் ஆங்கிலத்தில் சின்னதாக ஒரு தேர்வில் பங்கேற்க வேண்டும்.இது கூட மாணவர்களுக்கு எந்த நிலையிலான பாடஙக்ள் தேவை என்று பரிந்துறைப்பதற்காக தான்.அதன் பிறகு மாணவர்கள எந்த நிபந்தனையும் இல்லாமல் இஷ்டம் போல கற்கலாம்.

கிளாஸ்பைட்சின் சிறப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை.ஒரு விதத்தில் இது இணைய வகுப்பறை போல தான்.அதாவது இங்கு மாணவர்கள் நண்பர்களை தேடி கொள்ளலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு பாடம் தொடர்பான குறிப்பு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அந்த வகையில் இதனை கற்பதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.

உறுப்பினராக சேரும் போதே மாணவர்கள் தங்களை பற்றிய விவரங்களை சமர்பித்து தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.பேஸ்புக்கில் உள்ளது போலவே இந்த பக்கத்திலும் சுவர் உண்டு.இதில் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளவரை பகிர்ந்து கொள்ளலாம்.இதை பார்த்து சக மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.இவர்களும் மற்ற மாணவர்களின் சுவரில் உள்ளவரை படித்து உறையாடலாம்.

பாடங்கள் தொடர்பான கருத்து பரிமாற்றம் என்பதால் படிப்பதிலும் ஒரு ஈடுபாடு ஏற்படும்.சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.கொஞ்சம் சோர்ந்து போனால் கூட மற்றவர்கள் ஊக்கபடுத்தலாம்.புதிய பாடங்களை சுட்டிக்காட்டலாம்.

பாடம் படிக்கும் உணர்வே இல்லாமல் ஏதோ இணைய நண்பர்களோடு உறையாடும் மகிழ்ச்சியான சூழலில் ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளலாம்.

கூரும்பாடங்களை படிக்க துவங்கிய பின் மானவர்கள் தங்கள் முன்னேற்றத்தை தெரிந்து கொள்லவும் சுவையான வழிகள் இருக்கின்றன்.உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசி வீடியோவில் பதிவு செய்து அதனை இங்கு சமர்பித்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் அதை பார்த்து திருத்தங்களை சொல்வார்கள்.இலக்கண பிழை உச்சரிப்பு போன்ற்வற்றை இப்படி பட்டை தீட்டி கொள்ளலாம்.வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வலைபதிவு பக்கங்களை படித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.வலைப்பதிவு எழுதியும் சமர்பிக்கலாம்.தேர்வு எழுதியும் சோதித்து பார்க்கலாம்.

இதைவிட இனிய வழி ஆங்கிலம் கறக இருக முடியுமா என்ன

இந்த தளத்தில் இன்னுமொரு சிறப்பம்சம் நம்மவர்கள் இதில் அதிக பேர் உறுப்பினராக உள்ளனர்.

இணையதள முகவரி;http://classbites.com/

Advertisements

30 responses to “ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.

 1. வணக்கம். இணைய தளத்தின் பயன்பாட்டை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தும் ஓரிருவரில் தாங்கள் ஒருவராக, இந்திய அரசமைப்பு கோட்பாடு 51அ&இன்படி, நாட்டு மக்களுக்கு நல்ல விடயங்களைத்தேடி தரும் கடமையாளனாக கடமையாற்றுவது, தங்களின் தனித்துவத்தையே காட்டுகிறது.

  யான் ஓர் சட்ட ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், திறனாய்வாளர் ஆவேன்.

  No law, no life. Know law, know life! என்பதை அடிப்படை கொள்கையாக, தத்துவமாக கொண்டு ஒவ்வொருவரும் தனது வழக்கில் தானே வாதாட வேண்டும் என்ற தனது பத்து வருட கடமையுணர்வு திட்டத்தில், சட்டத்தை பல்வேறு நிலைகளில் படித்தும், பயன்படுத்தியும், பாடம் நடத்தியும், பலனடைந்தவர்களின் அனுபவங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஐந்து நூல்களை எழுதியுள்ளேன். இணையத்தில் வாரண்ட் பாலா – Warrant Balaw என தேடினாலே என்னைப்பற்றி மேலும் பல விபரங்களை அறியலாம்.

  இணையத்தின் வழியாக உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எனது கருத்துக்களை கொண்டு செல்ல தங்களின் ஒத்துழைப்பை நல்குகிறேன். தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்காததால் இதையெல்லாம் சம்பந்தமே இல்லாமல் இங்கு சொல்ல நேர்ந்து விட்டது. பொறுத்துக் கொள்ளவும். நன்றி!

 2. Pingback: ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.·

 3. ஐயா வணக்கம்.
  நான் ஆங்கில வார்த்தைகளை ஒரளவு வாசிப்பேன் ஆனால் அர்த்தம் தெரியாது.
  எனக்கு ஆங்கிலம் சரளமாக பேசனும். அதை நன்றாக வாசிக்கனும். தெளியுற எழுதனும். என்கிற ஆசை என்னுள் இருந்துகொண்டே இருக்குது. இதற்க்கு நீங்கள் தான் கற்றுதற வேண்டும் ஐயா!
  நன்றி! வணக்கம்.

  • தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.ஆங்கிலம் கற்க உதவும் இணையதளங்கள் அநேகம் உள்ளன.முயன்று பாருங்கள்.நானே பல தளங்கள் பற்றி எழுதியுள்ளேன்.குறிப்பிட்ட தேவை இருந்தால் கேட்கவும்.

   அன்புடன் சிம்மன்.

 4. வணக்கம் !
  உங்கள் தளத்தினை நீண்டகாலமாக வாசித்ட்து வருபவர்களில் நானும் ஒருவன். அனைத்துமே நல்ல பயனுள்ள பதிவுகள்தான். தொடரட்டும் உங்கள் பணி
  நன்றி.

 5. Pingback: ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம். | Cybersimman's Blog·

 6. அனைவருக்கும் அவசியமான பதிவு மாணவர்களுக்கும் ஆங்கிலம் கற்க நினைக்கும் இல்லத்தரசிகள் தொழிலதிபர்களுக்கும் உபயோகமானது நன்றி

 7. Pingback: காணாமல் போனது கிளாஸ்பைட்ஸ். | Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s