ஒபாமாவின் டிவிட்டர் சபை கூட்டம்

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரான ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து டிவிட்டர் வழியே நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல் அதிபராகவும் ஆகியிருக்கிறார்.

டிவிட்டர் டவுன்ஹால் என்று சொல்லப்படும் டிவிட்டர் சபை கூட்டத்தில் பங்கேற்று டிவிட்டர் வழியே தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா பதில் அளித்திருக்கிறார்.இதன் மூலம் அதிபர்களின் டிவிட்டர் பயன்பாட்டில் புதிய அத்யாயத்தை துவக்கி வைத்திருக்கிறார்.

டிவிட்டர் உரையாடலுக்கான மிகச்சிற‌ந்த‌சாதனம் என்றால் நாட்டை ஆள்பவர்கள் அத‌ன் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் க‌ருத்தை அறிவது தானே முறை.அதோடு மக்கள் டிவிட்டர் வழியே கேள்வி கேட்க அனுமதித்து பதில் சொல்லவும் க‌டமைபட்டவர்கள் தானே.ஒபாமா அதை தான் செய்திருக்கிறார்.இதற்காக ஒபாமாவுகு சபாஷ் போடலாம்.

ஒபாமாவின் இந்த டிவிட்டர் சபை நிகழவானது ,அதாவது டிவிட்டர் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு டிவிட்டர் வழியே பதில் அளித்தது புதுமையான முயற்சி தான்.இண்டெர்நெட்டை பிரசாரத்திற்கும் இளைய வாக்காளர்களை கவரவும் அரசியல் த‌லைவர்கள் பயன்படுத்தி வருவது இயல்பானதாக இருக்கும் காலகட்டத்தில் ஒபாமாவின் இந்த முயற்சி சம்பிரதாயமானது என்ற போதிலும் இதன் முக்கியத்துவத்தை மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களை கவர்வதற்கான டீம் ஒபாமாவின் பலவித வியூகங்களில் இந்த டிவிட்டர் சந்திப்பும் ஒன்று.எங்கும் டிவிட்டர் எனப்தே பேச்சாக இருக்கும் நிலையில் டிவிட்டரில் பலவித புதுமைகள் அற்ங்கேறி வரும் நிலையில் ,நட்சத்திரங்களும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் டிவிட்டரை ஒரு தொடர்பு சாதனமாக பயன்பொஅடுத்தி வரும் நிலையில் அதிபர் ஒபாமாவும் அதற்கு தயாராக இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்கான முயற்சியாகவும் இதனை கருதலாம்.

மக்களுடன் அதிபர் நேரடியாக உரையாடுகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையில் இந்த உரையாடல் மிக கவனமாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

அதிபர் டிவிட்டர் வழியே பதில் சொல்ல தயாராக இருக்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.டிவிடர் வழியே கேள்விகள் சம‌ர்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவை அப்படியே அதிபர் பார்வைக்கு வ‌ந்து சேராமல் வடிகட்டப்பட்டன.இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கே அதிபர் பதில் அளித்தார்.

அதோடு அதிபர் தன் கைப்பட டிவீட் செய்யவில்லை.முதல் டிவீட்டை மட்டும் தானே அனுப்பிவிட்டு மற்ற‌வற்றுக்கெல்லாம் பதில்களை டிக்டேட் செய்துள்ளார்.

இநத குறைகளை எல்லாம் மீறி இந்த‌ டிவிட்டர் சந்திப்பு வரவேற்ககூடியதே.காரணம் அதிபரை பெரிய பத்திரிகையாளர்கள் மட்டுமே சந்தித்து கேள்வி கேட்க முடியும் என்ற நிலைக்கு மாறாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் அளிக்க தயாராக‌ இருப்பதை இது உணர்த்தியுள்ளது.டிவிட்டர் அசைக்க முடியாத ஒரு த‌கவல் சாதனமாக நிலைபெற்றுள்ளதால் மக்கள் அதிபரை கேள்வி கேட்கவும் டிவிட்டர் வழி செய்யும் என்று 21 ம் நாற்றாண்டின் ஜனநாயகத்தை இது சுட்டி காட்டியுள்ள‌து.

இனி வரும் காலங்களில் ஒபாமா தொடர்ந்து இதே போன்ற சந்திப்புகளை டிவிட்டரில் நிகழ்த்தலாம்.அப்போது அவர் முக்கிய கேள்விகளை தவிர்ப்பதோ அல்லது ஆவேச வினாக்களை வடிகட்டுவதோ சாத்தியமாகாது.நேர்மையான‌ பதில்களை தந்தே ஆக வேண்டும்.

இப்போது அதிபர் மாளிகைக்கு என்று தனியே டிவிட்டர் முகவரி உள்ளது.அத‌ற்கு 22 லட்சம் பின் தொட‌ர்பாளர்கள் உள்ளனர்.அதிப‌ரே கூட தனது பெயரிலான டிவிட்டர் முகவரியில் மக்களை தொடர்பு கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே டிவிட்டரில் பின் தொடர்பவர்களை கவர் வேண்டும் என்றால் அதிபர் டிவிட்டர் விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வது மட்டும் அல்ல;டிவிட்டரில் தீவிரமாக விவாதிக்கப்படும் பிரச்ச்னைகளுக்கு அதிபர் தாமே முன் வந்து டிவிட்டர் விளக்கமும் தரும் காலமும் வரலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s