மும்பை குண்டு வெடிப்பும் இணைய உதவியும்.

மீண்டும் மும்பையில் குண்டுவெடிப்பு.மீண்டும் உயிர்பலிகள்.

இந்தியாவின் நிதி தலைநகரம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காவதிலும் முதலிடம் வகிப்பது வேதனையை அளிக்கிறது.இந்த வேதனைக்கு மத்தியிலும் ஆறுதல் என்னவென்றால் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் இணையம் முன்னணியில் இருந்தது தான்.

மும்பையின் ஜாவேரி பசார் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடித்து பலரை பலியாக்கிய செய்தி வெளியாகத்துவங்கி பதட்டம் உண்டான நிலையில் குண்டுவெடிப்பு தகவல்களை மறுஒலிபரப்பு செய்வதிலும்,நேசக்கரம் நீட்டுவதிலும் இணையவாசிகள் ஈட்டுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க முற்பட்டனர்.

குண்டுவெடிப்புக்கு முதலில் விழித்து கொண்டது குறும்பதிவு சேவையான டிவிட்டர் தான்.குண்டுவெடிப்பு பற்றிய குறும்பதிவுகள் தொடர்ச்சியாக வெளியாகி வெகு விரைவிலேயே பிரவாகம் போல பாயத்துவங்கின.
இந்த குறும்பதிவுகள் குண்டுவெடிப்பு பற்றிய தகவல் பகிர்வாக மட்டும் அமையாமல் ஆறுதல் வார்த்தைகளாகவும் உதவுக்கான கரங்களாகவும் அமைந்திருந்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயாராக இருந்த செஞ்சங்கள் தங்குமிடம் தேவைபடுபவர்கள் தங்களை நாடலாம் என அழைப்பு விடுத்தனர்.இன்னும் சிலர் குண்டுவெடிப்பில் சிக்கியவர்கள் போக்குவரத்து இல்லாமல் தவித்தால் அவர்கள் இருப்பிடம் செல்ல வாகன உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் சரியாக தெரியாத நிலையில் சம்பவ இடத்தில் இருந்த உறவினர்களின் நிலை அறியவும் பலர் பதட்டத்தோடு டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.உறவினரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து அவர் பதுகாப்பாக இருக்கிறாரா என்று தெரியுமா என்றும் கேட்டனர்.

இதனிடையே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க இரத்ததானம் செய்ய முன்வந்த பலர் தங்கள் இரத்த வகையை குறிப்பிட்டு தேவை என்றால் தொடர்பு கொள்ளவும் என அழைப்பு விடுத்திருந்தனர்.

மேலும் பலர் குன்டுசெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.பாலிவுட் நடசத்திரங்களும் பிரபலங்களும் இதில் அடக்கம்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான குறும்பதிவுகள் அனைத்தும் #நீட் ஹெல்ப்,#மும்பை பிலாஸ்ட்,போன்ற ஹாஷ்டேகுடன் ஒருங்கிணைப்பட்டன.

டிவிட்டரில் பொங்கி வழிந்த உணர்வுகளையும் உதவிக்கான அழைப்புகளையும் பார்த்து நெகிழ்ந்தவர்களில் ஒருவரான டெல்லியை சேர்ந்த நிதின் சாகர் என்பவர் தானும் நேசக்கரம் நீட்ட வேண்டும் என துடித்தார்.

மேப் மை இன்டியா என்னும் தொழிநுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய சாகர் டிவிட்டரை தீவிரமாக பயன்படுத்தி வருபவர்.டிவிடரின் தன்மையையும் நன்கறிந்தவர்.தகவல் பகிர்வு மற்றும் உதவிகளை அறிவிக்க டிவிட்டர் சிறந்த சாதனம் என்றாலும் ஒரு கட்டத்தில் குறும்பதிவு வெள்ளத்தில் பயனுள்ள தகவல்கள் மூழ்கிவிடும் அபாயம் உண்டென்பதையும் அவர் அறிந்திருந்தார்.

எனவே டிவிட்டரில் வெளியாகும் தகவல்களை எளிய முறையில் ஒருங்கிணைப்பது அவசியம் என நினைத்த சாகர் தானே அதற்கான செயலிலும் இறங்கினார்.கூகுல் டாக்குமென்ட் சேவையை பயன்படுத்தி மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான ஸ்பிரெட் ஷீட் பக்கம் ஒன்றை உருவாக்கினார்.

மும்பை ஹெல்ப் என்னும் பெயரில் அமைக்கப்பட்டிருந்த அந்த பக்கத்தில் உதவுக்கான தொலைபேசி எண்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.பயனுள்ள தகவல்களை யார வேண்டுமானாலும் இடம் பெறகூடிய வகையில் அந்த பக்கத்தை உருவாக்கியிருந்தார்.வெவ்வேறு இடங்களில் வெளியாகும் தகவல்கள் இங்கு சம்ர்பிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்னும் நம்பிக்கை அவருக்கு இருந்தது.

இந்த நம்பிக்கையோடு டிவிடர் பக்கத்தில் இது பற்றிய இணைப்பை கொடுத்துவிட்டு சாகர் தனது வேலையில் மூழ்கிவிட்டார்.சில மணிநேரங்கள் கழித்து மும்பை ஹெல்ப் பக்கத்திற்கு வந்த பார்த்தவர் வியந்து போய்விட்டார்.5 எண்களோடு அமைக்கப்பட்டிருந்த அந்த பக்கத்தில் இப்போது 200 க்கும் மேற்பட்ட தகவல்கள் இனைக்கப்பட்டிருந்தன.இந்த அளவுக்கு உதவிகள் குறித்த தகவல்கள் குவியும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.இதனால் நெகிழ்ந்து போன அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்குவதாக நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து உதவிகள் குவிந்து கொண்டிருந்தன.நெருக்கடிக்கு மத்தியில் மக்கல் காட்டிய நேச உணர்வு திக்குமுக்காட வைத்ததால் நன்றி சொல்ல வார்த்தையின்றி எங்கும் அமைதி நிலவட்டும் என்று இரவு ஒரு மணி அளவில் டிவிட்டரில் பதிவிட்டார்.

ஒரு கட்டத்தில் இந்த பக்கத்தில் வீணான செய்திகள் இடம்பெற துவங்கியது வேதனையானது என்று தான் சொல்ல வேண்டும்.விஷமிகள் சிலர் அவதூறு செய்திகளையும் பதிவேற்றினர்.வேறு வழியில்லாமல் சாகர் இந்த பக்கத்தை மூடிவிடுவதாக அறிவித்தார்.இந்த பக்கத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதால் இந்த சேவையை நிறுத்தி கொள்வதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் பல் இணையவாசிகள் அவரை இமெயில் மூலம் தொடர்பு கொன்டு அவரது முயற்சியை பாராட்டி நன்றி தெரிவித்து சேவையை தொடருமாறு ஊக்கம் அளித்தனர்.இந்த பாராட்டுக்கள் சாகரை ஒரு நாயகன் அந்தஸ்த்துக்கு உயர்த்தியுள்ளன.

நான் நேரடியாக எந்த உதவியும் செய்யவில்லை.ஒரு சில கிளிக்குகளில் ஒரு உதவி பக்கத்தை அமைத்தேன் ,அது இந்த அளவுக்கு மகத்தானதாக உருவாகிவிட்டது என சாகர் அடக்கத்தோடு இந்த முயற்சி பற்றி கூறியுள்ளார்.
எதிர்காலத்திலும் இத்தகைய தொழில்நுட்ப நேசக்கரத்தை நீட்ட தயராக இருப்பதாக சாகர் தெரிவிக்கிறார்.
——-
http://twitter.com/#!/nitinsgr

Advertisements

2 responses to “மும்பை குண்டு வெடிப்பும் இணைய உதவியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s