இன்று ஒரு சொல் அறிவோம்;அழைக்கும் இணையதளம்

தினம் ஒரு சொல்லை அறிமுகம் செய்து ஆங்கில அறிவை மேம்படுத்தி கொள்ள கைகொடுக்கும் இணையதளங்களில் ‘பிரேஸ்’ தளத்தை விளையாட்டானது என்று சொல்லலாம்.

இந்த தளம் நாள்தோறும் ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்து அதற்கான அர்த்தத்தையும் இடம் பெறச்செய்கிறது.இதன் மூலம் தினமும் ஒரு புதிய சொல்லை தெரிந்து கொள்ளலாம் .ஆனால் இதற்கு தினமும் இந்த தளத்திற்கு வருவதை வழக்காமாக கொள்ள வேண்டும்.அதோடு சொற்களின் பொருளை மனதில் நிறுத்தி கொள்ள முயல வேண்டும்.

இது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதால் தானோ என்னவோ இந்த தளம் இணையவாசிகளை தினமும் வரவைப்பதற்காக சுவாரஸ்யமான வழியை கையாள்கிறது.

அதாவது இணையவாசிகள் அன்றைய சொல்லை பயன்ப்டுத்தி ஒரு வாசகத்தை எழுதி சம்ர்பிக வேண்டும்.அந்த வாசகம் குறிப்பிட்ட அந்த சொல்லின் அர்தத்தை முழுவதுமாக உணர்த்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.இப்படி சம்ர்பிக்கப்படும் வாசகங்கள் மீது சக இணையவாசிகள் வாக்களிப்பார்கள்.அதிக வாக்குகள் பெறும் வாசகம் தேர்வு செய்யப்பட்டு முகப்பு பக்கத்தில் இடம் பெறும்.

புதிதாக அறிமுகம் செய்து கொண்ட சொல்லை பயன்படுத்தி பார்ப்பது அந்த சொல்லை மனதில் பதிய வைக்கும் என்பதோடு வெற்றிகரமான வாசகத்தை சம்ர்பிக்கும் ஆரவம் போட்டி மனப்பானமையை உண்டாக்கி சுவாரஸ்யத்தை அளிக்கலாம்.

ஏற்கனவே வெற்றி பெற்ற வாசகங்களையும் பார்க்கும் வசதி உள்ளது.இதன் மூலமும் புதிய சொற்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் பார்க்கும் வாசகங்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்லலாம்.டிவிடர் கணக்கு மூலம் இதில் உறுப்பினராக வேண்டும் என்பதால் உங்கள் டிவிடர் நண்பர்கள் யாரேனும் இதனை ப்யன்படுத்தும் பட்சத்தில் அவர்களின் வாசகங்களையும் பார்க்கலாம்.

ஆர்ட்விகுலேட் தளம் புதிய சொற்களின் அர்தத்தை தெரிந்து கொண்டு அதனை டிவிட்டர் குறும்பதிவாக பகிர்ந்து கொள்ள செய்வது போல இந்த தளமும் புதிய சொற்களை வாசகமாக்க வாய்ப்பு அளித்து சொல் வங்கியை வளமாக்கி கொள்ள உதவுகிறது.

இரண்டுமே சொல் வங்கியை வளமாக்கி கொள்ள ஏற்ற தளங்கள் தான்.ஆனால் சொற்களுக்கான சரியான பய்ன்பாட்டை அறிந்து கொள்ள விரும்பினால் அதற்கு ஸ்பிரிங் எக்சாம்பிலர் தளம் உதவியாக இருக்கும்.

சரியான பயன்பாடு என்றால் சொற்களுக்கான அதிகார பூர்வ பயன்பாடு என்று வைத்து கொள்ளுங்களேன்.அதாவது நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் அந்த சொல் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதாகும்.இந்த தளம் இத்த்கைய பயன்பாட்டை தான் சுட்டிக்காட்டுகிறது.

எந்த சொல்லின் பயன்பாட்டை அறிய வேண்டுமே அந்த சொலை இங்கு சம்ர்பித்தால் அந்த சொல் பயன்பாட்டிற்கான உதாரணங்கள் வரிசையாக பட்டியலிட்படுகிறது.அந்த வாசகங்கள் இடம் பெற்ற பத்திரிகைகள் பற்றிய விவரமும் இடம் பெறுகிறது.அதோடு குறிப்பிட்ட சொற்களின் பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களும் தரப்படுகிறது.

நாளிதழ்களில் இருந்து அறிவியல் சஞ்சிகைகள் வரை ஆயிரக்கணக்கான இதழ்களில் இருந்து உதாரணங்கள் எடுத்தாலப்படுவதால் சொற்களின் விரிவான பயன்பாட்டை அறியலாம்.

எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் போன்றோருக்கு மிகவும் ப்யனிள்ளதாக இருக்கும் இந்த சேவை.

இணையதள முகவரி;www.phrays.com

http://springerexemplar.com/index.aspx

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s