காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மைல்கல் பாத்திரங்களை பட்டியலிட்டால் இதயம் முரளியையும் அதில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இதயம் திரைப்படம் மறக்க முடியாத காவியம் என்று சொல்ல முடியாது.ஆனால் அந்த படத்தில் மருத்துவ மாணவரான முரளி ஹவுஸ் கோட்டை கையிலும் காதலை நெஞ்சிலும் சுமந்தபடி ஆனால் அந்த காதலை சொல்ல முடியாமல் தன்னம்பிக்கை மிக்க அழகான ஹீரா பின் தயக்கத்தோடு அலைந்து கொண்டிருந்தது காதலி சொல்ல தயங்குபவர்களுக்கான அடையாளமாக இருப்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.அதனால் தான் இதயம் முரளியை அழுத்தமான பாத்திர பதிவாக கொள்ளலாம்.

நிற்க இன்று ,முரளி ரேஞ்க்கு காதலை சொல்ல முடியாமல் தயங்குபவர்கள் இருக்கின்றனரா என்று தெரியவில்லை.பெண்ணோடு பேசவே தயங்கியபடி காதலை மனதுக்குள் வைத்து மருகும் ‘ஒரு தலை ராகம்’ யுகம் முடிந்து விட்டதாகவோ தோன்றுகிற‌து.

கடந்த தலைமுரையைவிட இந்த தலைமுறை ஆணும் பெண்ணும் சுதந்திரமாக பேசி திரிவதை பார்க்க முடிகிறது.

மீண்டும் நிற்க,இது காதல் ஆராய்ச்சி பதிவல்ல;காதலுக்கு உதவும் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு.சொல்ல முடியாத காதலை சொல்வதற்கான இணையம் விடு தூது வகையிலான கிரஷ் எய்டர் என்னும் சுவாரஸ்யமான‌ இணையதளம் பற்றிய பதிவு.

காதலை தெரிவிப்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழி என்று இந்த தளம் தன்னை சுயவரனணை செய்து கொள்கிறது.அதோடு அந்தரங்கம் சார்ந்த உறவுக்கு உதவும் தளம் என்றும் கூறிக்கொள்கிறது.மனதில் உள்ள காதலை சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் நேசிப்பவரிடம் அந்த காதலை ரகசியமாக வெளியிட வழி செய்வதே இந்த தளத்தின் நோக்கம்.

அதாவது இதயம் முரளியை போல காதலை சொல்ல முடியாமல் தயங்கி,தவிப்பவர்களுக்கு கை கொடுக்கும் நோக்கத்தில் இந்த தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது.இதயம் முரளி போல் கோழை காதலர்கள் நிஜ வாழ்க்கையில் குறைவே என்றாலும் நேசிக்கும் பெண் கன் முன்னே இருந்தாலும் காதலி அவளிடம் சொல்ல முடியாமல் தவிப்பவ‌ர்கள் இருக்கவே செய்கின்றனர்.

இந்த தவிப்புக்கு காரணம் காதல் உணர்வு பரஸ்பர்மானதா என்று உறுதியாக தெரியாமல் இருப்பது.காதலி சொன்னவுடன் ,புன்னகை பூங்கொத்தொடு ஏற்று கொள்ளாமல் நான் அந்த நினைப்பில் பழகவில்லை,நண்பியாகவே பழ‌கினேன் என்று சொல்லி விட்டால் என்னாவது என்னும் தயக்கம் இருக்கலாம் அல்லவா?

அலுவலக சூழலில் அல்லது நெருக்கமான நட்பு வட்டாரத்தில் அன்ப்போடு பழகுபவர்களுக்கு இந்த குழ‌ப்பம் வரலாம்.காதலிப்பதை சொல்லி அது நிராகரிக்கப்பட்டு விட்டால் நட்பை கொச்சை படுத்திய குற்றத்திற்கு ஆளாகி விட்டோமே என்ற அச்சம் வாட்டி வதைக்கலாம்.ஆனால் சொல்லாமலே இருந்து ஒரு வேளை அந்த தோழிக்கும் நேசம் இருந்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமும் கூடவே இருக்கும்.

இருவருக்கும் அறிமுகமான மூன்றாவது ந‌ண்பரின் உதவியை நாடலாம் என்றாலும் அதுவும் சங்கடமானதே.

இது போன்ற சூழ்நிலையில் யார் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்தமலேயே மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவதற்கான சுலப வழியை இந்த தளம் முன்வைக்கிறது.

இந்த‌ தளத்தில் காதலிக்கும் ஆனால் பதிலுக்கு காதலிக்கப்படுகிறோமா என தெரியாதவர்கள் தங்கள் மனதில் உள்ள நேசத்தை தெரிவிக்கலாம்.காதலிப்பவரின் இமெயில் முகவரியை குறிப்பிட்டு அவர்கள் மீதான‌ காதலை விவரிக்கும் காதல் வாசகத்தை இந்த தள‌த்தில் சமர்பிக்கலாம்.புகைப்படம் மற்றும் வீடியோவுடன் கலர்புல்லாகவும் காதல் செய்தியை உருவாக்கலாம்.

இமெயிலில் காதல் செய்தியை பெறுபவர் மனதிலும் அதே உணர்வு இருந்து அவர்கள் காதலை எற்றுக்கொண்டால் காதல் தூது வெற்றி பெற்றதாக கருதப்பட்டு காதலை சொன்னவரின் விவரம் தெரிவிக்கப்படும்.அது வரை செய்திய அனுப்பியவரின் இமெயில் முகவரி ரகசியமாகவே இருக்கும்.எனவே காதலிக்கப்பட்டவருக்கு அத்தகைய உணர்வு இல்லாவிட்டால் அதை அனுப்பியது யார் என்ற விவரத்தை அறிய முடியாது.

இதன் மூலம் காதலை சொல்ல தயங்குபவர்கள் தாங்கள் காதலிக்கப்படுகிறோமா இல்லையா என்பதை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தமாலேயே மனதை மட்டும் வெளிப்படுத்தி பாதுகாப்பான முறையில் அறிந்து கொள்ள முடியும்.

டேட்டிங் கலாச்சார‌ம் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.

இந்த தளத்தில் இது வரை வெற்றி கதைகள் என்று எதுவும் இல்லை.காதல் செய்திகலூம் அதிகம் இல்லை.இந்த இணையம் விடு தூது தளம் வெற்றிபெற தேவையான அளவுக்கு காதலர்களை கவருமா என்பதும் தெரியவில்லை.ஆரம்பித்த வேகத்தில் இந்த தளம் காணாமலும் போகலாம்.ஆனால் எல்லாவற்றுக்கும் இணையதளம் துவக்கலாம் என்பதற்கான அழகான‌ உதாரணமாக இதனை கருதலாம்.

இணையதள முகவரி;http://www.crushaider.com/

Advertisements

One response to “காதலை (ரகசியமாக)சொல்ல ஒரு இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s