உரையாடலை துவங்க உதவும் இணையதளங்கள்

முதல் முறையாக சந்திப்பவர்களிடம் யாதொரு அறிமுகமும் இல்லாமல் சரளமாக பேசும் கலை எல்லோருக்கும் வந்துவிடாது.வரம் வாங்கி வந்தது போல மிகச்சிலர் தான் பார்த்த மாத்திரத்திலேயே நட்போடு பேசத்துவங்கி புதிய நட்பை ஏற்படுத்தி கொண்டு விடுவார்கள்.ஆனால் பலருக்கு புதியவர்களை எதிர்கொள்ளும் போது என்ன பேசுவது,எப்படி பேசுவது என குழப்பமாக இருக்கும்.

இப்படி தய்க்கம் கொண்டவர்கள் எந்த் இடத்திலும் சகஜமாக உரையாட உதவும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அறிமுகம் இல்லாதவரிடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்கான முதல் அடியை பிரேகிங் த ஐஸ் என்று சொல்வார்கள்.இதை குறிக்கும் வகையில் ஐஸ் பிரேக்கர் டேக்ஸ் என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் புதியவர்களோடு பேச்சு கொடுக்க உதவும் அடையாள சீட்டுகளை அச்சிட்டு பயன்படுத்த உதவுகிறது.

பொது இடங்களிலோ விருந்து நிகழ்ச்சிகளிலோ சுற்றி மனிதர்கள் இருந்தாலும் உரயாடலில் ஈடுபடாமல் உம் என முகத்தை வைத்து கொன்டு அம்ர்ந்திருப்பதற்கான காரணம் யாரிடம் என்ன பேசுவது என்பது தெரியாமல் இருப்பது தானே.

அறிமுகம் செய்து கொள்ள ஒரு காரணம்,பேச்சு கொடுக்க ஏதாவது ஒரு ஆர்ம்ப புள்ளி கிடைத்து விட்டால் போதும் உரையாடலை ஆரம்பித்து விடலாம்.எந்த கூட்டத்திலும் எளிதாக கலந்து விடும் தன்மை கொண்டவ்ர்களுக்கு உரையாடலுக்கான துவக்கம் எப்படியோ கிடைத்து விடும்.

அந்த பாக்கியம் இல்லாதவர்கள் அறிமுகம் இல்லாவதவர்களிடம் பேச்சு கொடுப்பதற்கான புதுமையான் வழியை இந்த தளம் வழங்குகிறது.எல்லோருக்குமே ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்க தானே செய்யும்.இந்த விஷயஙகள் குறித்து அறிய முடிந்தால் அதை வைத்தே பேச்சை துவக்கிவிடலாம்.ஆனால் மற்றவர்களுக்கு ஆர்வம் உள்ளவற்றை எப்படி கண்டுபிடிப்பது?

இதை தான் அறிமுக சீட்டு வழியே இந்த தளம் செய்கிறது.அதாவது ஒவ்வொருவரும் தாங்கள் ஆர்வம் கொண்டுள்ள சங்கதியை இந்த சீட்டில் குறிப்பிட்டு அதை உடையில் குத்தி கொள்ளலாம்.பெயர் மற்றும் ஏதாவது ஒரு கேள்வியை தேர்வு செய்து இந்த தளத்தில் சமர்பித்து அறிமுக சீட்டை அச்சிட்டு சட்டையிலோ கோர்ட்டிலோ ஒட்டி கொள்ளலாம்.

விருந்து நிகழ்ச்சி போன்ற இடங்களில் இந்த அறிமுக சீட்டை கொண்டே ஆர்வம் உள்ளவர்கள் பேச்சு கொடுக்கலாம்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே கூட இத்தகைய அறிமுக சீட்டை தயாரித்து வழங்கலாம்.

இண்டெர்நெட் எதெற்கெல்லாம் வழிகாட்டுகிறது எனும் வியப்பை உண்டாகும் இந்த தளத்தை போலவே இன்னும் இரண்டு தளங்கள் உள்ளன.

பிரி நேம் டேக்ஸ் என்னும் தளம் நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் என் பெயர் இது தான் என அறிவிக்கும் அறிமுக சீட்டை அச்சிட்டு ஒட்டி கொள்ள வழி செய்கிறது.வேறு பல வகையான சீட்டுக்கள் இருந்தாலும் இது கட்டண சேவையாகும்.

இதே போலவே பிக்.பர்ஸ்ட் நேம்ஸ் என்னும் தளமும் இருக்கிறது.பலவித எழுத்துருக்களில் கொட்டை எழுத்தில் பெயரை அச்சிட்டு ஒட்டிக்கொள்ளும் வசதியை இந்த தளம் தருகிறது.

இவையெல்லாம் சுவாரஸ்யமான வழியாக தான் உள்ளன ஆனால் அடையாள சீட்டு ஒட்டி கொள்வதெல்லாம் சர்பட்டு வராது என தயங்குபவர்களுக்கு கை கொடுக்க வேறு ஒரு தளம் இருக்கிறது.சேவியோ டிசில்வா என்னும் அந்த தளம் புதிய்வர்களிடம் உரையாடலை துவக்குவதற்கான எளிமையான வழிகளை பரிந்துரைக்கிறது.பல்வேரூ சந்தர்பங்களுக்கு ஏற்ற எளிய வழிகளை இந்த தளம் முன வைக்கிறது.டேட்டிங் செய்யும் போது பேச்சை துவக்குவது எப்படி?இளம் பெண்ணோடு பேசும் போது எப்படி ஆர்ம்பிக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டுகிறது.

கான்வர்சேசஷன் ஸ்டார்ட்டர்ஸ் உரையாடல் கலையில் விரிவான கட்டுரைகளை வழங்கி தய்க்கமில்லாமல் பேசுவதற்கு வழி காட்டுகிறது.கைகுலுக்கி அரிமுகம் செய்து கொண்ட் அபின் என பேசுவது என்று விளக்கும் கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

……..

http://icebreakertags.com/

http://www.freenametags.net/


http://big.first.name/

Advertisements

One response to “உரையாடலை துவங்க உதவும் இணையதளங்கள்

  1. பல மக்கள் அச்சம் பொது முன்னால் பேசி தங்களை வெளிப்படுத்த வேண்டும். அவரது சொந்த அச்சங்கள் மற்றும் எப்படி அவர் தொழில்நுட்பத்தை தழுவிய பிறகு இன்னும் மீண்டதாக பற்றி ரஜினி பேச்சு.
    http://bit.ly/n9GwsR

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s