சமையல் குறிப்பு தேடியந்திரம்.

சமையல் குறிப்புகளை தேடித்தருவதற்கென்றே பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருந்தாலும் ‘பன்ச்போர்க்’ தேடியந்திரத்தை வழக்கமான தேடியந்திரம் என்று சொல்வதற்கில்லை.

சமையல் குறிப்புகளை வழங்கும் பிரபலமான தளங்களில் இருந்து தேவையான சமையல் குறிப்புகளை சுலபமாக தேடித்தரும் இந்த தளம் அதனை நிறைவேற்றி தரும் விதத்தில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.அதாவது சமையல் குறிப்புகல் தொடர்பாக சமுக வலைப்பின்னல் சேவைகளான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிரப்படும் தகவல்களை அடிப்படையில் அவற்றை இந்த தளம் பட்டியலிடுகிறது.

எந்த வகையான உணவு குறித்த சமையல் குறிப்பு தேவையோ அது தொடர்பான குறிச்சொல்லை டைப் செய்ததுமே இந்த தளம் பொருத்தமான குறிப்புகளை தேடி எடுப்பதோடு நின்று விடமால் அந்த குறிப்புகள் பற்றி பேஸ்புக்கிலும் ,டிவிட்டரிலும் நடைபெறும் உரையாடலின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி தருகிறது.

எனவே எதோ சில சமையல் குறிப்புகள் வந்து நிற்காமல் சமையல் பிரியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள குறிப்புகளே முன்னிறுத்தபடுகின்றன.

இப்போது தான் இணையவாசிகளுக்கு எல்லாவறையும் பேஸ்புக் அல்லது டிவிட்டரில் பகிர்ந்து கொள்கின்றனர் அல்லவா?சமையல் கலையில் ஆர்வம் கொண்டவர்கள் புதிய சமையல் குறிப்புகள் குறித்தும் இதே போல சமூக உரையாடலில் ஈடுபடுகின்றனர்.இநத பதிவுகளை கணக்கில் எடுத்து கொண்டு பிரபலமான சமையல் குறிப்புகளை பட்டியலிட்டு தருகிறது பன்ச்போர்க்.

சமையல் குறிப்பின் செல்வாக்கை தெரிந்து கொள்வதோடு அவை குறித்து பகிரப்பட்ட குறும் பதிவுகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படுகிறது.அழகான் படங்களோடு சமையல் குறிப்புக்கான ஈனைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு பக்க்த்தில் நாவில் நீர் உற வைக்கும் வகையில் உணவு பொருட்களின் வனமயமான் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்த தேடியந்திரத்தில் அந்த படஙக்ளை கிளிக் செய்தும் சமையல் குறிப்புகளை படிக்கலாம்.செல்வாக்கு மிக்கவை மற்றும் புதியவை என்றும் குறிப்புகள் இடம் பெறுகின்றன.

தேவையான சமையல் குறிப்புகளை தேடிப்பெற்லாம் என்பதோடு அவற்றை தங்களுக்கான பக்கத்தில் உறுப்பினர்கள் சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் உள்ளது.

http://punchfork.com/

Advertisements

2 responses to “சமையல் குறிப்பு தேடியந்திரம்.

  1. மிகவும் நல்ல வலைப்பதிவு. மேலே கட்டுரையைப் படித்துவிட்டு வலைப்பதிவினுள் நுழைந்தால் வெளியே வரவே மனதில்லை. டைம் ஒடிக்கொண்டே இருப்பதும் தெறியவில்லை. இது ஒன்றே போதுமே அத்தாட்சிக்கு. விதவிதமாய்,அழகழகாய்,வேண்டியவர்களுக்கு ருசிருசியாய்.

  2. Pingback: சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம். « Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s