வீட்டிலேயே அணு உலை செய்த வலைப்பதிவாளர்.

வீட்டிலேயே அணு உலை அமைப்பது மிகவும் சுலபமானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?அல்லது குறைந்தபட்சம் அணு உலை அமைக்க முயல்வது சுலபமானது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஹான்டல் என்னும் அமெச்சூர் விஞ்ஞானி இப்படி தான் வீட்டிலேயே அணு உலை அமைக்க முயன்று கைதாகியிருக்கிறார்.

ரிச்சர்டு அணு உலையை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியது மட்டும் அல்ல‌ அதை அவர் செயல்படுத்திய விதமும் ஆச்சர்யமானது.ரிச்சர்டு அணு உலையை அமைக்கும் முயற்சிக்காக வலைப்பதிவு ஒன்றை துவங்கி தனது செயல்பாடுகளை விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார் .

31 வயதாகும் ரிச்சர்டுக்கு ரசாயனம்,மற்றும் இயற்பியலில் இயல்பாகவே ஆர்வமும் ஈடுபாடும் அதிகம்.அதன் விளைவாக அவர் தனது வீட்டிலேயே அணு உலை ஒன்றை அமைத்து பார்க்க திட்டமிட்டார்.எப்படியே கதிரியக்க சாதங்கள் மற்றும் பொருட்களை வாங்கி சேகரித்தவர் அதற்கான வேலையையும் துவக்கி விட்டார்.

அணு உலைக்கான முயற்சியை துவக்கியதுமே வலைப்பதிவு ஒன்றையும் அவர் துவக்கிவிட்டார்.ரிச்சர்டு அணு உலை என்று தலைப்பிடப்பட்ட அந்த வலைப்பதிவின் முதல் பதிவில் அணு உலையை உருவாக்கும் நோக்கம் பற்றி அவர் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார்.

செயல்படக்கூடிய அணு உலையை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியிருந்தவர் இதன் நோக்கம் மின் உற்பத்தி செய்வதல்ல: வீட்டிலேயே அணு துகளை இரண்டாக பிளக்க முடியுமா என்று பார்ப்பது தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிற்கு ஏதோ சமையல் குறிப்பு போல அணு உலைக்கு தேவையான பொருட்களை பட்டியலிட்டவர் அனு உலை பின்னே உள்ள இயற்பியல் விதிகளையும் விளக்கியிருந்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு படியாக தனது திட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் பகிர்ந்து கொண்டு வந்தார்.

இதனிடையே தான் அவருக்கு தனது செயல் சட்ட விரோதமானதா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் அதிகாரிகலுக்கு ஒரு கடிதமும் அனுப்பி வைத்தார்.வீட்டிலேயே அணுவை பிளக்க முயல்வது சட்ட விரோதமானது இல்லையே என அவர் கூலாக கேட்டிருந்தாலும் அதிகாரிகள் அதை படித்ததும் ஆடிப்போயிருக்க வேண்டும்.

உடனே அதிகாரிகள் காவல் துறையினரை அனுப்பி வைத்து அவரை அகைத்து செய்தனர்.அணு உலை உபகரணங்களும் பறிமுதல் செயப்பட்டன.

ரிச்சர்டு அப்போது அசரவில்லை.தான் கைத்து செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்து தனது திட்டத்தை கைவிடுவதாவும் தெரிவித்திருந்தார்.

அதன் பிற‌கு விடுதலை செய்யப்பட்டவர் தனது அணு உலை முயற்சி குறித்து உள்ளுர் மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளீயான் செய்திகளையும் பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.

அவர்து வலைப்பதிவுக்கு சென்றால் அணு உலையை உருவாக்குவது பற்றிய தகவல்களை படித்து மகிழலாம்.

வலைப்பதிவு முகவ‌ரி;http://richardsreactor.blogspot.com/

Advertisements

3 responses to “வீட்டிலேயே அணு உலை செய்த வலைப்பதிவாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s