யாரோ அனுப்பும் தபால்;ஒரு ஆச்சர்ய இணைய‌தளம்.

இமெயில் வந்த பிறகு தபால் மூலம் கடிதங்களை அனுப்புவது அவுட்டேட்டாகி விட்டது தான்.இருந்தாலும் இன்றும் கூட தபாலில் கடிதங்களை அனுபுகிறவ‌ர்களும் பெறுபவர்கலும் இல்லாமல் இல்லை.திருட்டு பூனை போல வந்தது தெரியாமல் வந்து நிறகும் இமெயிலை காட்டிலும் சைக்கில் மணியோசை ஒலிக்க தபால்காரர் கையால் கொடுக்கப்படும் அஞ்சல் அட்டையை பெறுவது தனி இன்பம் தான்.

அதனால் தான் இந்த இமெயில் யுகத்திலும் கூட அஞ்சல் வழியே கடிதங்களை பெற விருபுகிற‌வர்கள் இருக்கின்றனர்.

ஆனால் தபாலில் கடிதம் பெற விரும்பினால் போதுமா,அஞ்சல் வழியே யாராவது அவற்றை அனுப்ப வேண்டுமே.இந்த குறையை போக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இணையதளம் தான் போஸ்ட் கிராஸிங்.

புக் கிராஸிங் தளத்தை அறிந்தவர்களுக்கு இந்த போஸ்ட் கிராஸிங் தளத்தின் கோட்பாடு எளிதாக புரிந்துவிடும்.

புத்தக பகிர்வில் புதுமையான சேவையான புக் கிராஸிங் பொது இடத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைப்பதன் மூலம் உறுப்பினர்கள் அவற்றை முன் பின் அறியாதவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.இப்படி பொது இடங்களில் வைக்கப்பட்ட புத்தகங்கள் அதனை கன்டெடுக்கும் யாரோ ஒருவரால படிக்கப்பட்ட பின மிண்டும் வெட்டவெளியில் வேறு யாரோ ஒருவருக்காக வைக்கப்படுகிற‌து.

எதிர்பாராத இடத்தில் புத்தகத்தை கண்டெடுக்கும் ஆச்ச‌ர்ய‌ உணர்வை அளிக்கும் இந்த தளம் இன்று உலகளாவிய இணைய இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.

புக் கிராஸ்ங் புத்தகங்களுக்காக செய்வதை போஸ்ட் கிராஸிங் தபால்களுக்காக செய்கிற‌து.

அதாவது இந்த தளம் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து தபால் அட்டையை பெற வழி செய்கிற‌து.

தபால் அட்டையை பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பிறகு முதலில் யாருக்காவது தபால் அனுப்ப வேண்டும்.யாருக்கு அனுப்புவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம்.இந்த தளத்தில் கோரிகை வைத்தாலே யாராவது ஒரு உறுப்பினரின் முகவ‌ரி தரப்படுகிறது.அந்த உறுப்பினருக்கு தபாலை அனுப்பி வைத்துவிட்டு காத்திருந்தால் வேறு உறுப்பினரிடம் இருந்து தபால் வந்து சேரும்.

உலகின் எந்த முளையில் இருந்து வேண்டுமானாலும் இப்படி தபால் வராலாம்.இன்னொரு நாட்டின் தபால் தலையுடன் ஒரு கடிதத்தை பெறுவது சுவாரஸ்யம் தானே.அந்த சுவாரஸ்யத்தை தான் போஸ்ட் கிராஸிங் அளிக்கிறது.

வையம் தழுவிய அளவில் உறுப்பினர்களை பெற்றுள்ள இந்த தளம் ஒரு தனிமனிதரின் தபால் மீதான ஈடுபாட்டால் உருவானது.போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாவ்லோ மகால்தியஸ் என்னும் அந்த வாலிபர் உறவினர்களிடம் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் தபால் முலம் கடிதங்களை பெறுவதில் தனி ஆர்வம் மிக்கவர்.த‌ன்னை போலவே பலருக்கும் இந்த ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொண்ட பாவ்லோ தபால் மீது ஆர்வம் கொன்டவர்கள் அதனை பரிமாறி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக போஸ்ட் கிராஸிங் இணையதளத்தை உருவாக்கினார்.

அதன் பிறகு உலகம் முழுவதும் உள்ள தபால் ஆர்வலர்களை அவர்களின் மற்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து தபால் மூலம் இணைப்பதற்கான பாலமாக இந்த தளம் செயல்ப‌ட்டு வருகிற‌து.

உலகம் முழுவதும் உறுபினர்களை பெற்றுள்ள இந்த‌ தளம் தபால் மூலம் புதிய நட்பை சாத்தியமாக்கி வருவதோடு,மற்ற மொழிகள் ,கலாச்சாரம் தொடர்பான தகவல்க‌ளை தெரிந்து கொள்ளவும் வழி செய்கிற‌து.தாபால் பரிமாற்றம் சார்ந்த் சந்திப்புகளுக்கும் இத்தளம் கை கொடுத்டு வருகிற‌து.இயற்கை பேரிடர் நேரங்களில் நல்லெண்ணத்தை பரவச்செய்யவும் உதவி வருகிறது.

பலவேறு நாடுகளில் இருந்து அனுப்ப பட்ட தபால்களின் எண்ணிக்கை போன்ர புள்ளி விவரங்களும் தளத்தில் இடம் பெற்றுள்ளன.இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.அதே போல இப்போது எந்த நாட்டில் இருந்து யாரெலாம் தபால் அனுப்பியுள்ளனர்.யாரெலாம் தபால் பெற்றுள்ளனர் எனர் விவரமும் தொடர்ந்து இடம் பெறுகிற‌து.

உறுப்பினர்கள் இந்த தளம் தரும் சுவாரஸ்யமான அனுபவத்தால் நெகிழ்ந்து போய் உள்ளனர்.ஒருவர் இந்த தளம் தின‌ந்தோறும் கிறிஸ்துமஸ் விழாவின் உற்சாகத்தை தந்திருப்பாதாக குறிப்பிட்டுள்ளார்.இன்னொருவர் இந்த தளம் உலகிற்கான வாயிலை திறந்து வைத்துள்ளாதாக கூறியுள்ளார்.

தாபல் அட்டையை பெறுவது இதமான உணர்வை தருவதாக கூறியுள்ள இன்னொருவர் அறிமுக இல்லாத ஒருவரோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது இர‌ட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாக கூறியுள்ளார்.

நீங்களும் இந்த புதிய உலகில் நுழைய தயாரா?

இணையதள முகவரி;http://www.postcrossing.com/

Advertisements

9 responses to “யாரோ அனுப்பும் தபால்;ஒரு ஆச்சர்ய இணைய‌தளம்.

  1. தங்களின் இந்த இடுகை மிகுந்த மகிழ்ச்சியிளிக்கிறது. கணினி வந்தபிறகு கையெழுத்து என்பதே மறந்துபோய் விட்ட நிலையில் இது புதிய உற்சாகத்தை தரும். நல்ல பகிர்வு. இதனை பதிவர்களுக்காக ஆகஸ்ட் 15 அன்று வெளிவரவிருக்கும் பதிவர் தென்றல் இதழில் வெளியிட விருப்பம். தங்களின் அனுமதி வேண்டுகிறேன். விவரங்களுக்கு thagavalmalar.blogspot.com

  2. ஆச்சரியம் மட்டுமில்லை மிக வித்தியாசமான, வினோதமான இணையத்தளம்! நானும் அஞ்சல் சேவையோடு உணர்வுப்பூர்மான நெருக்கம் உடையவன்தான். ஆனால் வெளிநாட்டு நண்பர்களோடு அஞ்சல் வழியே நட்பு பாராட்டுவது அதிக செலவு பிடிக்கும் விஷயம்! ஆனால் அஞ்சல் தலைச் சேகரிப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி இது! இதேபோல் நீங்கள் கூறியிருக்கிற ‘புக் கிராசிங்’குக்கென ஏதாவது இணையத்தளம் இருக்கிறதா? இருந்தால் அதைப் பற்றியும் எழுதுங்களேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s