டிவிட்டர் வழி கருத்து கணிப்புகள்.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவங்கள் தான் நடத்த முடியும் என்றில்லை.இணையத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தலாம்.வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவில் மிக சுலபமாக எந்த விஷயம் தொடர்பாக வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தலாம்.கருத்து கணிப்பை நடத்தும் வசதியை அளிக்கும் பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன.

இப்போது டிவிட்டர் மூலமும் கருத்து கணிப்பை நடத்தலாம்.டிவிட்டரில் ஒருவருக்கு உள்ள பின்தொடர்பாளர்கள் மத்தியில் எந்த பொருள் குறித்தும் கருத்து கணிப்பு நடத்தி கொள்ள பாலோர்ஸ் இணைய‌தளம் வழி செய்கிறது.

இந்த சேவையை பயன்படுத்தி கருத்து கணிப்பு நடத்துவது மிகவும் எளிதானது.எப்படி டிவிட்டர் பதிவுகளை வெளியிடுகிறோமோ அதே போல டிவிடர் பதிவு மூலம் கருத்து கனிப்புக்கான கேள்வியை எழுப்பலாம்.பின் தொடர்பாளர்களும் டிவிட்டர் பதிவுகளுக்கு பதில் அளிப்பது போல பதில் அளிக்கலாம்.

கருத்து கணிப்புக்கான கேள்வியை டிவிட்டர் பதிவு போல கேட்டுவிட்டு அதற்கான் பதில்களையும் வரிசையாக டைப் செய்யலாம்.பின் தொடர்பாளர்கள் அவற்றுக்கு அளிக்கும் பதில்களை உடனுக்குடன் பார்க்கலாம்.

எந்த விஷயம் தொடர்பாக வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தி கொள்ளலாம்.கருத்து கணிப்புக்கான நேரத்தையும் குறிப்பிடலாம்.

டிவிட்டர் பின்தொடர்பாளர்களோடு ஒருவிதமான நெருக்கத்தை வளர்த்து கொள்ளவும் இந்த கணிப்பு உதவலாம்.குறிப்பிட்ட பொருள் குறித்து டிவிட்டர் உலகின் மனநிலையை அறிய விரும்பினாலும் இந்த தளம் வழியே சாம்பில் பார்த்து கொள்ளலாம்அதோடு இந்த தளத்தின் வழியே சகௌறுப்பினர்கள் நடத்தும் கருத்து கணிப்பு தொடர்பான விவரங்களையும் பார்க்கலாம்.

சமீபத்திய கருத்து கணிப்புகள் ,பிரபலமானவை போன்றவ‌றையும் காணலாம்.கணிப்பு புலிகளுக்கு உண்மையிலேயே சுவாரஸ்யமான தளம்.

http://www.pollowers.com/

Advertisements

One response to “டிவிட்டர் வழி கருத்து கணிப்புகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s