விருந்தினர்களோடு சேர்ந்து நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் தளம்.

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் மேலும் ஒரு இணையதளம் தான் என்றாலும் குவான்டூவை மற்ற திட்டமிடல் தளங்களில் இருந்து ஒரு படி மேலானது என்று சொல்லலாம்.காரணம் இந்த தளம் விருந்தினர்களோடு சேர்ந்து நிகழ்ச்சிகளை திட்டமிட வழி செய்கிறது.

அதாவது நிகழ்ச்சியை திட்டமிடும் போதே விருந்தினர்களின் எதிர்ப்பார்ப்பையும் அறிந்து கொள்ள வழி செய்கிறது.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குவான்டூ மூலமாக மூன்றே படிகளில் திட்டமிட்டு விடலாம்.

முதல் படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை உருவாக்குவது.அல்லது நிகழ்ச்சியை உருவாக்குவது என்றும் வைத்து கொள்ளலாம்.

இது மிகவும் எளிதானது.நிகழ்ச்சிக்கு ஒரு தலைப்பு கொடுத்து அதன் வகையை குறிப்பிட்டு ,நாள் நேரம் மற்றும் நேரத்தை தெரிவித்து அழைப்பிதழை தாயர் செய்து விடலாம்.நிகழ்ச்சியின் தன்மை பற்றிய விரிவான விளக்கத்தையும் இடம் பெற வைக்கலாம்.தொடர்புக்கான தொலைபேசி எண்ணையும் சேர்க்கலாம்.

இந்த அழைப்பிதழை அப்படியே இமெயில் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.அல்லது இதற்கான இணைய முகவரி ஒன்றை பெற்று கொண்டு அதனை பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வு மூன்றாவது படி.

இடைபட்ட இரண்டாவது படி தான் சுவாரஸ்யமானது.

முதல் படியில் நிகழ்ச்சியை உருவாக்கிய பிறகு அந்த விவரங்களோடு புதிய பக்கம் ஒன்று தோன்றும்.அந்த பக்கத்தில் வரிசையாக பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.இந்த அம்சங்கள் மூலமாக விருந்தினர்களோடு உரையாடி அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.

விருந்தினர்கள் தங்களால் வர முடியமா இல்லையா என்பதை தெரிவிக்கலாம்.வேறு ஏதேனும் மாற்றம் குறித்தும் தெரிவிக்கலாம்.

அதே போல நிகழ்ச்சியில் பரிமாறப்பட வேண்டிய பாணங்கள்,உணவு போன்றவர்றையும் குறிப்பிட்டு அவற்றில் மாற்றம் தேவையா என்றும் அறிந்து கொள்ளலாம்.நிகழ்ச்சியில் ஏதேனும் விளையாட்டு உண்டா என்பதையும் குறிப்பிட்டு கருத்து கேட்கலாம்.இதர குறிப்புகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்.

நிகழ்ச்சிக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்தும் கருத்துக்களை கேட்டறியலாம்.முக்கியமாக நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டை குறிப்பிட்டு அதை கூட்டுவதா அல்லது குறைப்பதா என்றும் முடிவு செய்து கொள்ளலாம்.

இப்படி திட்டமிடும் போதே விருந்தினர்களின் கருத்துக்களை கேட்டு அதனடிப்படையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதால் அனைவருக்குமே திருப்தி அளிக்கும் வகையில் நிகழ்ச்சி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.நிகழ்ச்சியின் போது அல்லது நிகழ்சி முடிந்த பிறகு அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்று அலுத்து கொள்ளும் நிலை ஏற்படாது.

எனிவைட்டும் இதே போன்ற சேவை தான்.ஆனால் விருந்தினர்களின் கருத்துக்கலை அறிய அதிக வசதி கிடையாது.மற்றபடி ஒருவர் நடத்த விரும்பும் நிகழ்ச்சியை உருவாக்குவது எளிதானதே.

நிகழ்ச்சிக்கு ஒரு தலைப்பு கொடுத்து மற்ற விவரங்களை இடம் பெற வைப்பதற்கான அம்சங்கள் கவான்டூ போன்றதே என்றாலும் விருந்தினர்களை அழைப்பதில் கூடுதல் வசதிகள் இருக்கின்றன.இமெயில் மூலம் மட்டுமே விருந்தினர்களை அழைக்கலாம்.அல்லது பொது நிகழ்ச்சி என்றால் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என அழைப்பிதழையும் பகிர்ங்மாக்கலாம்.

அதே போல விருந்தினர்கள் தங்கள் பங்கிற்கு யாரையாவது அழைத்து வரலாம என்பதையும் குறிப்பிடலாம். அதாவது விருந்தினர்களும் அழைப்பிதழை அவர்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம்.நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்கின்றனர் என்ற விவரத்தையும் சக விருந்தினர்கலுக்கு தெரிவிக்கலாம்.எல்லாவற்றுக்கும் ஒரு கட்டம் உள்ளது.அதில் கிளிக் செய்து தேவையான அம்சத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

விருந்தினர்கள் தங்கள் பங்கிற்கு ஏதாவது பொருட்களை கொண்டு வர வேண்டுமா என்பதையும் குறிப்பிடலாம்.

இவற்றையெல்லாம் அழகாக செய்ய முதலிலேயே அழைப்பிதழுக்கான வடிவமைப்பையும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு நிகழ்ச்சிக்கேற்ப பலவிதமான வடிவமைப்பு மாதிரிகள் உள்ளன.

இணையதள முகவரி;http://www.kuandoo.com/index.php

.http://anyvite.com/

Advertisements

2 responses to “விருந்தினர்களோடு சேர்ந்து நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் தளம்.

    • நிச்சயமாக. இன்னும் எண்ணற்ற தளங்கள் இதே போல் உள்ளன.மதிய உணவு மூலம் உறவு வளர்க்கு உதவும் தளங்கள் சார்ந்த எனது பதிவுகளை முடிந்தால் படித்து பாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s