இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை.
அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் இமெயில் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது.
இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான இணைய முகவரி ஒன்றை தருகிறது.யாருக்கு இமெயில் சென்று சேர வேண்டுமோ அவருக்கு இந்த இணைய முகவரியை மட்டும் அனுப்பி வைக்கலாம்.இமெயில் அழியே அல்லது மெசேஜிங் மூலம் இந்த ரகசிய குறியீட்டு முகவரியை அனுப்பலாம்.
இதனை பெறுபவர் மட்டுமே அதனை கிளிக் செய்து படிக்க முடியும்.அவரும் கூட ஒரே ஒரு முறை தான் இந்த செய்தியை படிக்க முடியும்.காரணம் அவர் படித்து முடித்தபிரகு இந்த செய்தி காணாமல் போய்விடும்.அதாவது தன்னை தானே அழித்து கொண்டுவிடும்.
எனவே யாருக்கு அனுப்ப பட்டதோ அவரை தவிர யாரும் இந்த செய்திய படித்துவிட முடியாது.
இந்த அளவுக்கு மிகவும் ரகசியமான இமெயில் அனுப்பும் அவசியம் ஏற்படுகிறதோ இல்லையோ இப்படி படித்தவுடன் மறைந்துவிடும் இமெயில் சேவையை சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தலாம்.
Don’t Publish it too much. Will become a handy tool in the hands of extremists and terrorists.
Pingback: ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம். « Cybersimman's Blog·
Pingback: wrfonline.co.uk » ரகசியமான செய்திகளை அனுப்ப ஒரு இணையதளம்·