நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் இணையதளம்

நண்பர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய உதவுவதற்காகவே திட்டமிடல் இணையதளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? சின்ன விருந்து நிகழ்ச்சிக்கோ,வார இறுதி சந்திப்புக்கோ நண்ப‌ர்களை அழைப்பதையும் வரவழிப்பதையும் மிக அழகாக செய்து முடிக்க உதவுகின்றன இந்த தளங்கள்.

நிகழ்ச்சிகளை திட்டமிடும் போது நண்பர்களை தொடர்பு கொள்வது மட்டும் அல்ல,அவர்களில் யாரால் எல்லாம் வர முடியும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இமெயிலுக்கு மேல் இமெயில் அனுப்புவது,அல்லது செல்போனில் அழைப்புகளின் முலம் சம்மதம் கேட்பது போன்றவற்றுக்கு எல்லாம் அவசியமே இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே எந்த சந்திப்பு நிகழ்ச்சியையும் அழகாக திட்டமிட இந்த தளங்கள் கைகொடுக்கின்ற‌ன.

இப்படி திட்டமிட உதவும் தளங்களில் மிகவும் எளிமையானது வென் ஈஸ் குட் இணையதளம்.

மூன்றே படிகளில் எந்த நிகழ்ச்சிக்கும் நண்பர்களை அழைப்பதை இந்த தளம் சாத்தியமாக்குகிறது.

நிகழ்ச்சியை உருவாக்குங்கள் அன்னும் பகுதியை கிளிக் செய்து,முதலில் நிகழ்ச்சிக்கான நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு யார் எல்லாம் பங்கேற்க விரும்புகிறிர்களோ அவர்களுக்கு இமெயில் மூலம் இந்த தகவலை அனுப்பி வைக்கலாம்.இதற்கான நாட்காட்டியும் இந்த தளத்திலேயே இருக்கிறது.அதில் தேதியை தேர்வு செய்துவிட்டு நேரத்தையும் குறிப்பிடலாம்.நிகழ்ச்சிக்கான தலைப்பு மூலமே நிகழ்ச்சியின் தன்மையை உண‌ர்த்திவிடலாம்.

இமெயில் பெறும் நண்பர்கள் நிகழ்ச்சிக்கான அழைப்பை பார்த்து விட்டு அந்த நாளில் தாங்களால் வரமுடியுமா என்பதை தெரிவிப்பார்கள்.அல்லது தங்கலுக்கு ஏற்ற வேறு ஒரு நாளை பரிந்துரைக்கலாம்.இப்படி எல்லா நண்ப‌ர்களின் பதிகளையும் பார்த்து நிகழ்ச்சிக்கான நாளை முடிவு செயது தகவல் அனுப்பலாம்.

மீட்டிபையர் தளமும் இதே போன்றது என்றாலும் மிகவும் விரிவானது.வென் ஈஸ் குட் தளம் தரும் அதே அம்சங்களை மிக விரிவாக ,கல‌ர்புல்லாக வழங்குகிறது இந்த தளம்.

வரிசையாக ஒவ்வொரு படியாக நிகழ்ச்சியை திட்டமிட துவங்கலாம்.ஒவ்வொரு படிக்கும் ஒரு கட்டம் உள்ளது.

எடுத்தவுடன் என்ன என்னும் கேள்விக்கு பதில் அளிக்க வேன்டும்.அதாவது எந்த‌ நிகழ்ச்சி ஏற்படு செய்யப்பட்டுள்ள‌து என்பதை என்ன கட்டத்தில் குறிப்பிட வேண்டும்.தேவைப்பட்டால் நிகழ்ச்சிக்கான விளக்கத்தையும் சுருக்கமாக குறிப்பிடலாம்.

அடுத்ததாக நிக‌ழ்ச்சி நடக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும்.இடத்தை வரைபடத்திலும் சுட்டி காட்டலாம்.அதன் பிற‌கு நிகழ்ச்சிக்கான தேதியை குறிப்பிட வேண்டும்.பின்னர் யாரை எல்லாம் அழைத்திருக்கிறிர்கள் என்பதையும் குறிப்பிடலாம்.

இந்த நிகழ்ச்சி அட்டவனையை இமெயில் மூலமோ அல்லது பேஸ்புக் வழியாக‌வோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் தரும் பதில்களின் அடிப்ப‌டையில் எல்லோருக்கும் சரியான தினத்தில் நிழ்ச்சியை வைத்து கொள்ளலாம்.

———

http://whenisgood.net/

பின்னூட்டமொன்றை இடுக