இணையம் வழி திட்டமிடல்.

நண்பர்களை அழைப்பதும் அவர்களுடன் சேர்ந்து நிகழ்சிகளுக்கு திட்டமிடுவதும் இதைவிட எளிதாகவும் சுவையாகவும் இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய வகையில் இணையம் வழியே திட்டமிடலை மேற்கொள்ள கூடிய அருமையான இணையதளமாக பாஸ்டர்பிளான் அறிமுகமாகியுள்ளது.

பிறந்த நாலை முன்னிட்டு சின்ன கெட் டுகதரா, அல்லது வீக் என்ட் விருந்து நிகழ்ச்சியா ,அல்லது நண்பர்களுக்கான கிரிக்கெட் போட்டியா எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் அதனை அழகாக திட்டமிட்டுக்கொள்ளலாம்.

இதற்காக அழைப்பிதழை அச்சடிக்க வேண்டாம்,வரிசையாக இமெயில் அனுப்பிக்கொண்டிருக்க வேண்டாம்,செல் போனில் ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு பேச வேண்டாம்,எஸ் எம் எஸ் வாயிலாக நினைவூட்டல் அனுப்பவும் தேவையில்லை,எல்லாவற்றையும் இந்த தளம் மூலமே அழகாக திட்டமிட்டு கொள்ளலாம்.

இப்படி திட்டமிடுவதற்காக இணைய அட்டவனை ஒன்றை இந்த தளம் வழங்குகிறது.

அந்த அட்டவனையை உங்கள் பெயரிலானதாக மாற்றி கொண்டு நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.நீங்கள் நடத்தப்போகும் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுவிட்டு அதற்கு யாரை எல்லாம் அழைக்க விரும்புகிறீர்களோ அவர்களின் பெயரை வரிசையாக சேர்த்து கொள்ளலாம்.நிகழ்ச்சி நடக்கும் தேதியையும் குறிப்பிட்டு இந்த அட்டவனையை நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

அதன் பிறகு நண்பர்கள் தங்களால் கலந்து கொள்ள முடியுமா என்பதை இந்த அட்டவனையில் டிக் செய்வதன் மூலமே உறுதி செய்யலாம்.நிகழ்ச்சிக்கான தேதி தங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால் அதையும் தெரிவிக்கலாம்.இப்படி நண்பர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி எல்லோருக்கும் பொருத்தமான தேதியையும் முடிவு செய்யலாம்.

டின்னருக்காக அழைக்கும் பட்சத்தில் நண்பர்கள் தாங்கள் வரும் போது எதை எடுத்து வருகிறோம் என்பதையும் குறிப்பிட முடியும்.

நண்பர்களின் கருத்துகளை அறிந்து கொண்டு வர முடியாத நன்பர்களை நீக்குவதோ அவருக்கு பதிலாக புதிய ஒருவரை சேர்ப்பதோ சாத்தியம்.

நணபர்கள் பதில் அளித்திருப்பதை உடனடியாக இமெயில் மூலம் தெரிந்து கொள்ளவும் முடியும்.

இந்த அட்டவனை மூலம் மிகவும் விரிவாக திட்டமிட முடியும்.இதனை எப்படி பயன்படுத்துவதுஎன்பதை இதில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிகழ்ச்சி அட்டவனை மூலம் சுலபமாக புரிந்து கொண்டு விடலாம்.அதே நேரத்தில் இந்த அட்டவனையை பயன்படுத்த இணையவாசிகள் பெரிதாக எதையும் செய்ய வேன்டியதில்லை.

இவ்வளவு ஏன் ,பொதுவாக இது போன்ற நுட்பமாஅன் சேவையை பயன்படுத்த உறுப்பினராக சேர வேண்டும்.அதற்கு இமெயில் முகவரி போன்றவற்றை சமர்பிக்க வேண்டும்.பின்னர் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த சேவையை பொருத்தவரை உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய தேவையும் இல்லை.நேரடியாக சேவையை பயன்படுத்த துவங்கி விடலாம்.அந்த அளவுக்கு எளிமையானது.

ஏற்கனவே நண்பர்களை மதிய உணவுக்கு அழைக்க லஞ்ச்வாலா போன்ற தளங்கள் உள்ளன.மேலும் சில திட்டமிடல் தளங்கலும் உள்ளன.அந்த வகையில் மறொரு அழகான சேவையாக பாஸ்ட்பிளான் தளத்தை சேர்த்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.fasterplan.com/#!/home

Advertisements

2 responses to “இணையம் வழி திட்டமிடல்.

 1. மிகவும் உபயோகமான தகவல் தான்

  எமக்கு கிடைத்த வரங்களை நாமே கேவலம் செய்வதற்கு ஒரு உதாரணம்
  நடிகர் விஜய்யைக் கேவலப்படுத்தும் Google நிறுவனம்

  மயிர் கூச்செறியும் சாதனை
  மலையில் இருந்து குதித்து பிரித்தானிய வீரர் உலக சாதனை (படங்கள் இணைப்பு)

 2. தங்கள் வலைப்பூவின் பதிவுகள் “தேன்கூடு” திரட்டியால் திரட்டப்படுகிறது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

  தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் “தேன்கூடு” திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s