மொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.

நம‌க்கொரு வெர்ப்லிங் வேணுமடா!

மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த முற்படும் போது இப்படி தான் ஏக்கத்தோடு பாடத்தோன்றும்.அதாவது உலக மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தோடு உதய‌மாகியுள்ள இணையதளமான வெர்ப்லிங்க் போலவே இந்திய மொழிகளை கற்று கொள்ள கைகொடுக்க கூடிய இணையதளம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.

புதிய மொழியை கற்று கொள்ள விரும்பினால் அதற்கு உதவக்கூடிய இணையதளங்கள் பல இருக்கவே செய்கின்றன.வலைப்பின்னல் தன்மையோடு மேம்ப்பட்ட பயிற்றுவிப்பு சேவைகளை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன.

எனவே மொழி கற்பதற்கான இணையதளங்களை புதுமையானது என்று சொல்வதற்கில்லை.இருப்பினும் வெர்ப்லிங்கை மொழி கற்பிக்கும் தளங்களில் புதுமையானது என்று சொல்லலாம்.புதுமையானது மட்டும் அல்ல எளிமையாது.

முதல் விஷயம் வெர்ப்லிங் வீடியோ வழியே புதிய மொழியை கற்க‌ வைக்கிற‌து. வீடியோ வழியே என்றதும் யாரோ எப்போதோ நடத்திய பாடத்தின் வீடியோ தொகுப்பாக இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது.இது நம‌க்காகவே நடத்தபடும் உயிரோட்டமான உடனடி பாடம்.

சொல்லப்போனால் இதனை பாடம் என்று கூட சொல்ல முடியாது.பயிற்சி என்று சொல்லலாம்.உரையாடல் மூலமான உடனடி பயிற்சி.

அதாவது எந்த மொழியை கற்க‌ விரும்புகிறோமோ அந்த மொழி பேசுபவருடன் வீடியோ வழியெ உரையாடலில் ஈடுபட்டு அந்த மொழியின் பேச்சு வழக்கு போன்ற நுணுக்கங்களை நேரடியாக கற்று கொள்ள வைப்பதே வெர்ப்லிங்கின் தனித்தனமையாக இருக்கிறது.

ஆம்,வெர்ப்லிங் புதிய மொழியை கற்று கொள்ள நினைப்பவரை அந்த மொழி பேசுபவரோடு பேசி அந்த உரையாடல் வழியே மொழியை கற்றுக்கொள்ள வழி செய்கிற‌து.

உதாரணமாக பிரெஞ்சு மொழியை கற்று கொள்ள விரும்பினால் இந்த தளம் வழியே பிரெஞ்சு மொழி பேசுபவரோடு உரையாடிப்பார்த்து அந்த மொழியை பயிலலாம்.

அட,சுவார்ஸ்ய‌மான வழியாக் இருக்கிறதே என்று நினைக்கலாம்.உண்மை தான்.இது சுவாரஸ்யமான வழி மட்டும் அல்ல;நடைமுறையில் பயன் மிக்கது.

யோசித்து பாருங்கள்,புதிய மொழியை கற்று கொள்ள எத்தனையோ வழிகள் இருந்தாலும் அந்த மொழி பேசுபவரோடு உரையாடுவது போன்ற சிறந்த வழி வேறு எதுவும் இல்லை தானே!

புத்தகங்களை பார்த்தோ அல்லது மொழி வகுப்புகளுக்கு சென்றோ கறு கொண்டாலும் புதிய மொழியில் வார்த்தைகள்,அர்த்தங்கள்,இலக்கனம் போன்றவை அத்துபடியாகுமே தவிர அந்த மொழியில் சரளமாக பேச திண்டாடவேண்டியிருக்கும்.அந்த மொழி பேசுபவரோடு பேசும் போது தான் அதில் உள்ள வார்த்தைகளின் பயன்பாட்டை அறிய முடியும்.

அதே நேரத்தில் மொழி தெரியாத ஒரு ஊருக்கு மாற்றலாகி சென்றால் எந்த வகுபிலும் சேரமால்,புத்தகத்தை படிக்காமல் அங்குள்ளவர்களோடு உரையாடுவதன் மூலமே தட்டுத்தடுமாறி புதிய மொழியை கற்று கொண்டுவிடலாம்.

நீச்சம் கறு கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரில் குதிப்பதே சிறந்த‌ வழி என்பது போல புதிய மொழி கற்க அந்த மொழிகாரர்களிடம் பேசி பழகுவதை தவிர வேறு சிறந்த வழியில்லை.ஆனால் நாம் கற்று கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்களை தேடிச்செல்வது எப்படி?

இந்த இடத்தில் தான் வெர்ப்லிங் வருகிற‌து.

வெர்ப்லிங் வேற்று மொழி பேசுபவரோடு அந்த மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிற‌வர்களை சேர்த்து வைக்கிற‌து.இருவரும் வீடியோ வழியே உரையாடிக்கொள்ளலாம்.

புதிய மொழி கற்று கொள்ள விரும்புகிற‌வர்கள் இந்த‌ தளத்தில் உறுப்பினரானதும் ,அவர் கற்க விரும்பும் மொழி பேசும் நபரோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிறது.அவரோடு பேசிப்பழக துவங்க வேண்டியது தான்.உச்சரிப்பும்,வார்த்தைகளுக்கான அர்த்தம்,பயன்பாடு போன்ற விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அப்படியே நாள‌டைவில் அந்த மொழியில் பேசும் திறன் பெறுவிடலாம்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வெர்ப்லிங் சரியாக பொருத்தம் பார்த்தே சேர்த்து வைக்கிறது என்பதே.அதாவது ஒரு மொழி பேசுபவரை அதனை கற்று கொள்ள விரும்புகிற‌வர்களோடே சேர்த்து வைக்கிற‌து.எப்படி என்றால் ஒருவர் ஸ்பானிய மொழி கற்க விரும்புவதாக வைத்து கொள்வோம்.அவர் சொந்த மொழி ஆங்கிலமாக‌ இருக்கிறது.அப்போது ஆங்கிலம் ஓரளவு அறிந்த ஸ்பானிஷ் மொழி பேசுபவருடன் தொடர்பை ஏற்படுத்தி த‌ருகிற‌து.

மறுமுனையில் இருப்பவருக்கு ஆங்கிலம் ஒரளவு தெரியும் என்பதால் ஸ்பானிஷ் மொழியில் உரையாடலை எளிதாக துவக்கலாம்.அதே நேரத்தில் அந்த ஸ்பானிஷ்காரரும் தன்னுடைய ஆங்கில மொழி அறிவை இவரோடு பேசி பட்டை தீட்டி கொள்ளலாம்.

ஆக கிப் அன்டு டேக் பாலிசியை போல இருவருமே ஒருஇவருக்கு மறொருவர் தங்கள் மொழியில் பேச கற்று கொடுத்து உதவலாம்.அதற்கேற்பவே வீடியோ உரையாடல் வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பாதியில் இந்த மொழியில் உரையாடினால் அடுத்த பாதியில் அந்த மொழியில் உரையாட வேண்டும்.ஒரு முறை உரையாடிய பின் திருப்தி இருந்தால் மீண்டும் அவரோடே உரையாடலாம்.இப்படி படிப்படியாக‌ பேசி மொழி கற்கலாம். கற்பவர்களின் தன்மைக்கேற்ப உறுப்பினர்களின் மொழி அறிவு மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அந்த அந்த நிலையில் இருப்பவ‌ர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ளலாம்.

புதிய மொழி கற்க அருமையான வழி என்றாலும் இப்போதைக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நினைத்த நேரத்தில் இந்த தளத்தை பயன்படுத்த முடியாது.ஒவ்வொரு நாளும் வகுப்பு போல குறிப்பிட்ட நேரத்திற்கே உரையாடும் வசதி இருக்கிறது.முதலிலேயே பதிவு செய்து கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்தில் உரையாடி கொள்ள‌லாம்.

இந்த தளம் பிரபலமாகி உறுப்பினர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தால் இன்னும் சரளமாக பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.

இதே போல இந்தய மொழிகளுக்காக என்றே ஒரு தளம் துவக்கப்பட்டால் எப்படி இருக்கும்?இந்தியாவில் தான் எத்தனை மொழி பேசுபவர்கள் உள்ளனர்.இந்திய வெர்ப்லிங் மூலம் நாமும் பிற இந்திய மொழிகளை கற்று கொள்ளலாம் அல்லவா?

இ8ணையதள முகவரி;http://verbling.com/

Advertisements

One response to “மொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.

  1. Pingback: பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்! « Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s