சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையதளம்.

சாப்பிடுவதற்காக என்று ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியதுண்டா?அல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் சாப்பட்டை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கிறதா?ஆம் எனில் ஸ்பூன்டிரிப் இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும்.

மாறாக சுவைக்கும் சுற்றுலாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பவராக நீங்கள் இருந்தால் ஸ்பூன்டிரிப் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும்.

காரணம்,ஸ்பூன்டிரிப் சுவை பயணங்களை மேற்கொள்ள உதவும் இணையதளமாக இருப்பது தான்.அதாவது சுவையின் அடிப்படையில் பயணங்களை மேற்கொள்ள வழி செய்யும் இணைய மேடையாக உருவக்கப்பட்டுள்ளது.

சுவை பயணங்கள் என்றால் உணவுக்காக மேற்கொள்ளப்படும் பயணங்கள்.அதாவது எந்த இடத்திற்கு செல்கிறோமோ அந்த இடத்தின் பிரத்யேக உணவு வகைகளை சுவைத்து மகிழ்வதற்கான பயணங்கள்.குறிப்பிட்ட அந்த உணவு வகைகளை சுவைப்பதற்காக என்றே மேற்கொள்ளும் பயணங்களாகவும் வைத்து கொள்ளலாம்.

இப்படி தேடி தேடி உணவு வகைகளை சுவைத்து பார்க்கும் விருப்பம் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர்.அத்தகைய விருப்பம் கொண்டவர்களை உள்ளூர் உணவு பிரியர்களோடு சேர்த்து வைப்பது தான் ஸ்பூன்டிரிப் தளத்தின் வேலை.

உலகை சுற்றிப்பார்க்க வேண்டும்,ஆனால் உள்ளுர் உணவை சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த தளத்தில் தாங்கள் அடுத்தாக செல்ல உள்ள இடத்தை குறிப்பிட்டு அந்த இடத்தில் வழங்கப்படும் உணவு சுற்றுலா திட்டங்களை தெரிந்து கொண்டு அவற்றில் பங்கேற்கலாம்.

அதற்கேற்ப சுற்றுலா பயணிகளை வரவேற்று உணவளிக்க தயாராக இருப்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராகி தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.அவர்கள் சமையல் கலைஞர்களாகவும் இருக்கலாம்.சமையலில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.உணவை தயாரித்து விருந்தளிக்க விருப்பம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்த பட்டியலில் இருந்து சுற்றுலா பிரியர்கள் தங்களுக்கு பொருத்தமான ஊரை தேர்வு செய்து கொள்ளலாம்.

எந்த ஊரில் என்ன வகையான உணவு வகையை சுவைக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானமாக அறிந்திருப்பவர்கள் ஊரையும்,உணவு வகையையும் குறிப்பிட்டு அதற்கேற்ற திட்டத்தை தேடிப்பார்க்கலாம்.சுற்றுலா செல்ல உத்தேசித்துள்ள காலத்தையும் குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம்.

இதற்கு மாறாக பொதுவாக இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டங்களிலும் பொருத்தமானதை தேடிப்பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.நாடுகளின் அடிப்படையில் இந்த திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த நாட்டிற்கு செல்ல இருக்கிறோமோ அந்த நாட்டில் உள்ள விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்க்க இந்த பட்டியலை பயன்படுத்தி கொள்ளலாம்.உதாரணத்திற்கு ஜப்பான் நாட்டு உணவில் நாட்டம் கொண்டவர்கள் ஜப்பான் நாட்டை கிளிக் செய்து அதில் உறுப்பினர்கள் சமர்பித்துள்ள திட்டங்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே போல விருந்து ரகங்களின் அடிப்படையில்ம் தேர்வு செய்து கொள்ளலாம்.பண்ணை வீட்டில் இருந்து அமர்ந்தபடி உணவை சுவத்து மகிழ்வது ,உயர்தரமான வைன் மதுவை சுவத்தபடு விருந்து சாப்பிடுவது என பலவகையான திட்டங்கள் இருக்கின்றன.இவற்றோடு உணவு சார்ந்த பயனங்களான உணவுலாக்களும் இருக்கின்றன.சுவைப்பதோடு நிறுத்தி கொள்ளலாமல் அதன் செய்முறையையை கற்று கொள்ளும் திட்டங்களும் இருக்கின்றன.

அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ற திட்டத்தை தேர்வு செய்து கொண்ட பின் அந்த நபரோடு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு நம்ம ஊர் உணவு கிடைக்குமா என்று கவலைப்படுபவர்களை விட்டு விடுங்கள்;எந்த இடத்திற்கு சென்றாலும் அங்குள்ள அழகான இடங்களை சுற்றிப்பார்த்தால் மட்டும் போதாது அந்த இடத்தின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களே உணமையில் சுற்றுலாவில் ஆர்வம் கொண்டவர்கள்.அதே போல எந்த உருக்கு செல்கிறோமோ அந்த ஊரின் கைமணத்தை சுவைத்து பார்க்கவிட்டால் அந்த பயணம் முழுமையானதாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சுவை உண்டு.ஒரு மணம் உண்டு.அந்த சுவையையும் மணத்தையும் ரசித்து ருசிக்க வேண்டும் என்று நினைக்கும் உணவு பிரியர்கள் இந்த தளத்தை பெரிதும் விரும்புவார்கள்.

இணையதள முகவரி;http://spoontrip.com/en

Advertisements

3 responses to “சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையதளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s