புத்தக பிரியர்களுக்கான வலைப்பின்னல் தளம்.

புத்தக புழுக்களுக்கு புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருந்துவிட முடியும்.இப்படி புதிய புத்தகங்கள் பற்றி தெரிந்து கொளவதை சுவாரஸ்யமாக செய்து கொள்ள முடிந்தால் கேட்கவா வேண்டும்.

புக்லைக்ஸ் தளம் இத்தகைய மகிழ்ச்சியை தான புத்தக பிரியர்களுக்கு வழங்குகிறது.

புத்தகங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்று சொல்லக்கூடிய புக்லைக்ஸ் பெயருக்கேற்ப பிடித்த புத்தகங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.இப்படி சகம்புத்த புழுக்கள் பகிர்ந்து கொள்ளும் புத்தகங்கள் மூலம் நாம் படித்து மகிழக்கூடிய புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ள முடியும்.அப்படியே புத்தகம் சார்ந்த நட்பையும் தேடிக்கொள்ளலாம்.

புக்லைக்சை பயன்படுத்துவது மிகவும் எளிது.சுவாரஸ்யமானதும் கூட.

முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பிறகு படித்த புத்தகம பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அதனைப்பற்றிய சுருக்கமான விமர்சனத்தையும் எழுதலாம்.இப்படி படித்த மற்றும் படிக்க விரும்பும் புத்தகங்கள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இதே போல மற்ற உறுப்பினர்களும் அவர்கள் படித்த புத்தகங்களை குறிப்பிட்டு அந்த புத்தகம் தங்களை கவர்ந்ததற்கான காரணத்தையும் தெரிவித்திருப்பார்கள்.அதன் மூலம் மற்றவர்கள் மனம் கவர்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து கொண்டு படித்துப்பார்க்கலாம்.

முதலில் பொதுவாக தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள புத்தகங்களை எல்லாம் வரிசையாக பார்வையிட்டு நம் விருப்பத்திற்கேற்ற புத்தகங்கள் உள்ளதா என்று தேடிப்பார்க்கலாம்.

பிடித்தமான புத்த்கம் கண்ணில் பட்டால் அந்த புத்தகம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதோடு அதனை பகிர்ந்து கொண்டவர் பற்றியும் தெரிந்து கொள்ள முற்படலாம்.

எல்லா உறுப்பினர்களும் அவர்களுக்கான பகுதியில் தங்களை பற்றிய அறிமுகத்தை செய்து கொள்ளலாம என்பதால் அந்த அறிமுகத்தை படித்து பார்க்கும் போது ரசனை ஒத்திருந்தால் அவர்களை நண்பர்களாக்கி கொள்ளலாம்.அதாவது அவர்களை பின்தொடர் துவங்கலாம்.அதன் பிறகு அவர்கள் படிக்கும் புத்தகங்களை எல்லாம் நாமும் படிக்கலாம்.

அது மட்டும் அல்ல அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் என்ன புத்தகம் படிக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.இதன் மூலம் புதிய நல்ல புத்தகங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கும்.

உறுப்பினரின் புத்தக தேர்வு கவரும் பட்சத்தில் அவருக்கு நேரடியாக செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளவும் செய்யலாம்.

இதே போலவே நாம் அறிமுகம் செய்யும் புத்தகங்களை பார்த்து நம்மையும் பலர் பின்தொடரலாம்.

புத்தகங்களை படித்த பின் அவற்றுக்கான விமர்சனங்களில் நமது கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.இதன் மூலம் நல்ல இலக்கிய உரையாடலும் சாத்தியமாகும்.

இதை தவிர புத்தகம் அல்லது எழுத்தாளரின் பெயர்களை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.

நாளிதழ்களில் நூல் விமர்சனங்களை படிப்பதன் மூலமோ அல்லது இலக்கிய கட்டுரைகலை படிப்பதன் மூலமோ புதிய புத்தகங்களை தெரிந்து கொள்வதை காட்டிலும் இப்படி நட்பு வட்டத்தின் மூலம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வது சிறந்த அனுபவமாக அமையும்.

நிஜ வாழ்கையில் இலக்கிய நண்பர்கள் தானே நம்க்கு சிறந்த புத்தகஙக்ளை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.இலக்கிய ஆர்வம் மிக்கவர்கள் சந்தித்து பேசும் போது புதிதாக என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறார் என கேட்டு மகிழ்கிறோம் அல்லவா?அதே போல நமக்கு பிட்த்த புத்தகத்தை ஒருவர் படித்திருப்பது தெரிந்தால் அவரிடம் தொடர்புடைய வேறு புத்தகங்கள் பற்றி பேசி நட்பையும் புத்தகங்களையும் பரிமாரி கொள்வோம் அல்லவா?

அதியே தான் இணைய உலகில் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.இணையம் பரந்து விரிந்தது என்பதால் புதிய நண்பர்கள் கிடைபதும் புதிய புத்தகங்கள் அறிமுகமாவதும் சாத்தியம்.

இந்த தளத்தில் உள்ள ஒரே குறை இது ஆங்கில புத்தகங்களுகானது என்பது தான்.தமிழ் கூறும் நல்லுலகிற்கும் இதே போன்ற தளம் உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் ஏற்படாமல் இல்லை.

இணையதள முகவரி;http://booklikes.com/

One response to “புத்தக பிரியர்களுக்கான வலைப்பின்னல் தளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s