சல்மான் ருஷ்டிக்கு வந்த டிவிட்டர் சோத‌னை.

சல்மான் ருஷ்டியை போன்ற சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளரை பார்த்து நீங்கள் தான் உண்மையான ருஷ்டியா? என்று எல்லோரும் கேட்க துவங்கினால் எப்படி இருக்கும்?இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை,நீங்கள் தான் ருஷ்டி என்பதை நிருபித்து காட்ட முடியுமா?என்று பரிட்சை வைப்பது போல கேள்விகள் கேட்டால் எப்படி இருக்கும்?

இப்படியெல்லாம் நடக்ககூடும் என்று நம்புவதற்கே கஷ்டமாக இருந்தாலும் ருஷ்டி இத்தகைய சோதனைக்கு தான் ஆளாகியிருக்கிறார்.

ருஷ்டியை இலக்கிய ரீதியாக அறிந்திறாதவர்கள் கூட சர்ச்சையின் நாயகர் என்ற வகையில் அவரை அறிந்திருக்க கூடும்.சாத்தானின் கவிதைகள் நாவலுக்காக அவருக்கு எதிராக பாத்வா பிறப்பிக்கப்பட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்த நேர்ந்தது பரவலாக எல்லோரும் அறிந்தது தான்.

அப்படியிருக்க ருஷ்டியிடம் நீங்கள் ருஷ்டி தானா என கேட்க முடியுமா?என்று வியப்பு ஏற்படலாம்.

எல்லாம் டிவிட்டரால் வந்த சோதனை தான்.அல்லது டிவிட்டரில் வந்த சோதனை.

மிட்னைட் சில்டரன் போன்ற மகத்தான நாவல்களை எழுதிய சல்மான் ருஷ்டி 21 ம் நூற்றாண்டில் தன்னை இணைத்து கொள்ளும் வகையில் சமீபத்தில் உலகையே 140 எழுத்துக்களில் அடக்கிவிடும் டிவிட்டரில் அடியெடுத்து வைத்தார்.

ஆனால் டிவிட்டரில் அவரால் அவரது பெயரில் நுழைய முடியவில்லை.காரணம் யாரோ ஒருவர் ஏற்கனவே டிவிட்டரில் ருஷ்டியாக நுழைந்துவிட்டார்.அதாவது சல்மான் ருஷ்டியின் பெயரில் டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

டிவிட்டர் உலகில் இப்படி பிரப்லங்கலின் பெயரில் தூண்டு போட்டு வைத்து கொள்வது மிகவும் ச‌கஜம்.இது கூட பரவாயிலை சில நேரங்களில் யாரோ ஒருவர் பிரபலங்கள் போலவே டிவிட்டரில் செயல்பட்டு எல்லோரையும் ஏமாற்ற முயல்வது உண்டு.

ருஷ்டி பெயரிலும் இப்படி யாரோ டிவிட்டரில் ஏற்கனவே நுழைந்துவிட்டதால் உண்மையான ருஷ்டி வேறு பெயரில் (சல்மான் ருஷ்டி1)என்னும் பெயரில் டிவிட்டர் கணக்கை துவக்கி குறும்பதிவிட வேண்டிய நிலை உண்டானது.

ருஷ்டி டிவிட்டர் பக்கம் வரமாட்டாரா என்று ஏங்கி கொண்டிருந்த இலக்கிய ரசிகர்கள் இதனால் உற்சாகமானார்கள். பலரும் ஆர்வத்தோடு ருஷ்டியை பிந்தொடர்வும் செய்தார்கள்.இருப்பினும் சிலருக்கு இயல்பான ஒரு சந்தேகம் வந்தது.இந்த கணக்கின் பின்னே இருப்பவர் சல்மான் ருஷ்டி தானா என்பது தான் அந்த சந்தேகம்.

டிவிடரில் பிரபலங்களின் பெயரில் போலிகள் ஒலிந்து கொள்வது சக்ஜமாக இருக்கும் நிலையில் சாட்சாத் ருஷ்டியே டிவிட்டர் செய்யத்துவங்கினாலும் அது நிஜமான ருஷ்டி தானா என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானது தானே.

செப்டம்பர் 15 ம் தேதி ருஷ்டி டிவிட்டர் செய்யத்துவங்கினார்.அவருடைய முதல் குறும்பதிவு டிவிட்டருக்கு வரத்தூண்டுகோளாக இருந்த கிறீஸ்டா டிசோசா என்பவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தது.ருஷ்டி தனது பாணியில் லேசான‌ கிண்டலோடு இந்த நன்றியை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வாசகர்கள் பலர் ருஷ்டியை ஆர்வத்தோடு பின்தொடரத்துவங்கினாலும் சில‌ருக்கு மறுமுனையில் இருப்பது ருஷ்டி தானா என்ற சந்தேகம் இருந்தது.அவர்களில் சிலர் இதை ருஷ்டியிடமே டிவிட்டர் மூலம் கேட்கத்துவங்கி விட்டனர்.

இது என்னடா வம்பா போச்சு என்று கூட ருஷ்டி நினைத்திருக்கலாம்.ஆனால் அதற்குள் இன்னும் சிலர் ருஷ்டியை சோத்தித்து பார்க்க தீர்மானித்து விட்டனர்.அதாவது எழுத்தாளர் ருஷ்டியால் மட்டுமே பதில் தரக்கூடிய கேள்விகளை கேட்டனர்.

உதாரண‌த்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரபல் பாகிஸ்தான் கவிஞர் பயஸ் அகமது எங்கே ஒளிந்து கொண்டார் என்று கேட்டார்.

ருஷ்டியின் நாவலில் வரும் சம்பவம் தொடர்பான இந்த கேள்விக்கு சரியான பதில் அளித்த ருஷ்டி தான் சோதிக்கப்படுவது பிடிக்காமல் இதையெல்லாம் முடித்து கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இன்னொருவரோ ருஷ்டியின் முழு பெயர் மற்றும் அவருக்கு நெருக்கமான பெண்ணின் செல்லப்பெய‌ரை சொல்லுமாறு கேட்டிருந்தார்.

இப்படி ஒவ்வொருவரும் ருஷ்டி தானா என்று உறுதி செய்து கொள்வதில் அக்கறை காட்டினர்.எப்போதுமே கொஞ்சம் ஞான் செருக்கு உள்ள ருஷ்டி இந்த கேள்விகளுக்கு எல்லாம் பொருமையாகவே பதில் அளித்தார்.ஆனால் ஒரு கட்டத்தில் கடுப்பாகி இந்த கேள்விகள் எல்லாம் போதும் என்று தன‌து அறிமுக குறிப்பிலேயே தெரிவித்துவிட்டார்.

இதனிடையே ருஷ்டி தனது பெயரை திருடிக்கொண்டவ‌ருக்கு ஒரு குறும்பதிவை எழுதினார்.அதில் யார் இந்த போலி என்று ஆவேசமாக கேட்டிருந்ததோடு தனது பெயரை விடுவிக்குமாறும் கேட்டிருந்தார்.இப்போதும் கூட ருஷ்டி பின்தொடர்பாள‌ர்களில் பலருக்கு சந்தேகம் தீரவில்லை.

அதன் பிறகு தான் யார் என்பதை காட்ட தீர்மானித்த ருஷ்டி ஒரு சிறுகதையை குறும்பதிவுகளாக வெளியிடத்துவங்கினார்.இதைவிட வேறு அத்தாட்சி வேண்டுமா என்ன?

இதற்குள் டிவிட்டர் நிர்வாகம் தலையிட்டு ருஷ்டியின் பெயரை மீட்டு தந்து அவரே உண்மையான ருஷ்டி என்று சான்றிதழும் வழங்கியது.ருஷ்டி டிவிட்டர் கண‌க்கு தொடர்பான‌ குழப்பமும் ஒருவழியாக‌ முடிவுக்கு வ‌ந்தது.

ஆனால் ஒன்று ருஷ்டியின் டிவிட்டர் பதிவுகள் சுவாரஸ்யமாகவே இருக்கின்றன.சக டிவிட்டராள‌ர்களோடு அவர் சகஜமாக‌ உரையாடி வருகிறார். தனது மாஜி காதலி பதமா லட்சுமிக்கு கூட வர வாழ்த்து தெரிவித்திருந்தார்.நடிகை ஒருவரோடு புதிர் விலையாட்டு போட்டியில் ஈடுபட்டார்.

ருஷ்டியின் ஆளுமையையும் சிந்தனை போக்கையும் நேரடியாக அறியும் வகையில் அவரது குறும்பதிவுகள் அமைந்துள்ள‌ன.

தனது அடுத்த நாவல் பற்றியோ புதிய காதல் பற்றியோ கூட அவர் டிவிட்டரில் அறிவிக்ககூடும்.எதற்கும் ருஷ்டியை பின்தொடருங்கள்.
——

http://twitter.com/#!/SalmanRushdie

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s