அதி நவீன கதை எழுதலாம் வாருங்கள்;அழைக்கும் தளங்கள்.

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தானாம் என்ற கதை சொல்லும் பாணியில் இருந்து இலக்கியம் எப்போதோ எங்கேயோ முன்னேறி வந்துவிட்டது.சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேரத்தியான கதை சொல்லும் முறைகள் பின்பற்றப்பட்டு நவீன கதை சொல்லும் முறை செழுமையாகி இருக்கிறது.

என்ன தான் நேர்த்தியாக நடையில் எழுதப்பட்டிருந்தாலும் தீவிர இலக்கியம் உடபட தற்போதைய கதை சொல்லும் முறையே காலாவதியாகிவிட்டது என வாதிடும் நவீன இலக்கிய விமர்சகர்களும் இருக்கின்றனர்.நமக்கு பழக்கப்பட்ட இந்த ஒற்றை கோட்டிலான (லீனியர்)கதை சொல்லலில் இருந்து விலகி நான் லீனியர் முறையில் கதை சொல்ல முன்னேற வேண்டும் என்கின்றனர்.

நான் லீனியர் என்றால் வழக்கமான ஆரம்பம்,முடிவு என்றெல்லாம் இல்லமால் புதிய உத்திகளை பயன்படுத்தி முற்றிலும் புதிய பாணியில் கதை சொல்வது.அப்படியே புதிய அனுபவத்தை ஏற்படுத்தி புதிய புரிதலையும் தரவல்லது!

இது சரியா தேவையா என்ற விவாதம் இலக்கிய உலகில் நடைபெற்று வருவது ஒரு புறம் இருக்க ,இந்த பதிவு இலக்கிய விவாதம் தொடர்பானது அல்ல!ஆனால் கதை சொல்லல் தொடர்பானது.இணையத்தை பயன்படுத்தி சும்மா புதுசாக கதை சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அழகான இணையசேவைகளை அறிமுகம் செய்யவே இந்த பதிவு.

இணையத்தில் கதை எழுதுவது சுலபமானது தான்.ஒன்றுமே வேண்டாம்,ஒரு வலைப்பதிவை துவக்கி கதை எழுத துவங்கிவிடலாம்.இவ்வளவு ஏன் கூட்டு முயற்சியாக சக இணையவாசிகளோடு இணைந்து கதை எழுதும் கிரவுட் சோர்சிங் வகை தளங்களும் இருக்கின்ற‌ன.

ஆனால் அவை எல்லாமே பழைய பாணியிலான கதை சொல்லல் தான்.

கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்றில்லாமல்,ஒரு சில டிவீட்கள்,புகைப்படங்கள்,வீடியோக்கள்,பேஸ்புக் பதிவுகளை ஒரு பொது சரட்டில் இணைத்து அழகாக கதை சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்?அதாவது இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் குறும்பதிவுகள் (டிவீட்கள்)பேஸ்புக் பதிவுகள்,யூடியூப் விடீயோக்கள்,பிளிக்கர் புகைப்படங்கள் இவறை எல்லாம் கொண்டே ஒரு அழகான கதை சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்?

வரிகளின் விவரிப்பாக இல்லாமல் டிவீட்டாக,புகைப்படங்களாக,விடியோக்களாக விரியும் இந்த கதை அற்புதமாக தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் ஸ்பாடிபை தளம் அதை தான் சாத்தியமாக்குகிறது.

அடிப்படையில் இந்த தளம் சமூக ஊடகம் என்று சொல்லப்படும் டிவிட்டர்,பேஸ்புக் போன்ற தளங்களில் சக இணையவாசிகளால் பகிரப்படும் தகவல்களை கதையாக தொகுத்து அளிக்க உதவுகிற‌து.

கொலேஜ் என்று ஒரு கலவையான ஓவிய முறை உண்டல்லவா!ஓவிய மற்றும் வண்ண துண்டுகளை ஒன்று சேர்த்து அந்த கலவையால் ஒரு சித்திரத்தை உருவாக்குவது போலவே டிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்கள்,பிளிக்கர் புகைப்படங்கள்,யூடியூப் விடியோக்கள் ஆகியவற்றை கலந்து கதை சொல்ல ஊக்குவிக்கிறது இந்த தளம்.

இதற்கு பொருத்தமான கதை பாகங்களை நீங்கள் சமூக ஊடக தளங்களில் இருந்து இந்த தளத்தின் வாயிலாகவே தேடி எடுத்து கோர்த்து கொள்ளலாம்.இப்படி ஒரு கதையை சொலிப்பாருங்கள்.அல்லது ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள கதையை படித்தும் பார்த்தும் கண்டும் பாருங்கள்.புதுமையான உணர்வு ஏற்படும்.

இந்த இணைய கல்வையை ஆர்வம் இருந்தால் நீங்களே கூட தேடி எடுத்து கதையை உருவாக்கலாம் தான்.ஆனால் பல இடங்களில் இருந்து தேடி எடுத்து அதை ஒன்று சேர்ப்பதில் உள்ள சுமைகளை இந்த தளம் இல்லாமல் செய்து அந்த பணியை சுலபமாக்குகிற‌து.

எல்லாம் சரி,எதற்காக இந்த கதை சொல்லல?இணைய பகிர்வுகள் விழலுக்கு இறைத்த நீராகிவிடக்கூடது என்ற எண்ணம் தான் காரண‌ம் என்கிற‌து ஸ்டோரிபை.

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் ஒவ்வொரு நொடியிலும் எத்தனையோ தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த பகிர்வுகளும் பதிவுகளும் இணைய மகா கடலில் காணாமல் போய் வீணாவதை தவிர்க்கும் வகையில் அவற்றில் சிற‌ந்தவற்றை தெர்வு செய்து கதையாக பகிர்ந்து கொள்வது நல்லது தானே என்று ஸ்டோரிபை கேட்கிற‌து.

இப்படி சமுக ஊடக‌ பகிர்வுகளை கொண்டு உருவாக்கப்படும் கதைகளுகலை சுட்டிக்காட்டும் வலைப்பதிவு பகுதி ஒன்றும் இந்த தளத்திலேயே இருக்கிறது.அழகான காதல் கதை உள்ளிட்ட சுவாரஸ்ய உதாராங்களும் தரப்பட்டுள்ளது.

அதே நேர‌த‌தில் சிரியா மக்கள் எழுச்சி போன்றவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.இத்தகைய மக்கள் எழுச்சி சார்ந்த கதைகள் டிவீட்டகவும் யூடியுப் விடீயோவாகவும் சொல்லப்படும் போது அது ஒரு சரித்திர ஆவணமாக கூட திகழலாம்.

இதே போலவே யாகி எனும் தளமும் உருவாக்ப்பட்டுள்ளது.

இணையத்தை கொண்டு புதிய கதையை சொல்லுங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் ,பகிரப்பட்ட கதைகளை பொழுதுபோக்கு,செய்தி,கலாச்சாரம் என பல தலைப்புகளின் கீழ வகைப்படுத்தி தருகிற‌து.

அதோடு பயனாளிகள் ஒருவரை ஒருவர் பின்தொடரும் வசதியும் இருக்கிறது.
—————
http://www.yahki.com/

http://storify.com/

Advertisements

4 responses to “அதி நவீன கதை எழுதலாம் வாருங்கள்;அழைக்கும் தளங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s