இது தொழில்நுட்ப தொலைக்காட்சி

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இலக்கிய டிவியில் இலக்கிய கூட்டங்களின் நேரடி ஒளிபர‌ப்பை கண்டு ரசிக்கலாம்,எழுத்தாள‌ர்களின் நேர்முகத்தை கேட்டு மகிழலாம்,வாசக‌ர் சந்திப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை பார்க்கலாம் என்றெல்லாம் இலக்கிய பிரியர்கள் நினைத்து மகிழலாம்.கூடவே இதெல்லாம் நடக்கிற கதையா என்றும் ஆதங்க‌ப்படலாம்.

மெகா சீரியல்கள் தவிர வேறுவிதமான நிகழ்ச்சிகள் டிஆர்பி க்கு உதவாது என்று கருதப்படும் நிலையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்று தொலைக்காட்சி மட்டும் அல்ல நம்மூர் டிவிகளில் இலக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதே கடினம் தான்.

இலக்கிய பிரியர்களும் தனி இலக்கிய டிவி என்று பேராசைப்படுவதெல்லாம் இல்லை.

ஆனால் இலக்கிய டிவியை இணையத்தில் உருவாக்கி கொள்வது சாத்தியமே.அந்த டிவி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள உதவியாக தொழில்நுட்ப டிவியாக துவங்கப்பட்டுள்ள டெக்டாக்ஸ் டிவியை மேற்கோள் காட்டலாம்.

தொழில்நுட்ப மாநாடு மற்றும் கருத்தரங்க உரைகள் ஆகியவர்றின் தொகுப்பு ,தொழில்நுடப் பயிலரங்குகளின் பதிவு,நிபுணர்கள் உரையின் நேரடி வீடியோ ஒளிபரப்பு என சகலமும் தொழில்நுட்ப மயமாக இருக்கிறது டெக்டாக்ஸ்.டிவி.

தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த டிவியில் தொழில்நுட்பம் சார்ந்த பயனுள்ள வீடியோ தொகுப்புகளையும் உரைகளையும் கேட்டு பயன்பெறலாம்.

தொழில்நுட்பத்திற்கான தனி தொலைக்காட்சி போல வியக்கவும் லயிக்கவும் வைத்தாலும் அடிப்படையில் இந்த டிவி மிகவும் எளிமையானது.குறிப்பிட்ட தலைப்பிலான செய்திகளை ஒரே இடத்தில் திரட்டிதரும் வலைத்திரட்டிகளை போல இந்த டிவி தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை திரட்டித்தருகிறது.

தொழில்நுட்ப கருததரங்குகள் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றில் தொழில்நுட்ப நிபுணர்களின் சிந்டனையை கிளறக்கூடிய உறைகளையும் விவாதங்களையும் கேட்பதற்கான வாய்ப்புள்ளது.பல்வேறு பல்கலைகளும் இதர அமைப்புகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றன.

ஆர்வத்தோடு இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களும் கணிசமாக இருக்கின்றனர்.இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனவர்கள் அல்லது வாய்ப்பு கிடைக்காதவர்கள் வசதிக்காக நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் வீடியோவாக்கப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன.நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளப்ப்படுகின்றன.ஒரு சில அமைப்புகல் இவ்ற்றை நேரடியாக இனையத்தில் ஒளிபரப்பவும் செய்கின்றன.

இப்படி தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் சார்ந்த வீடியோக்களின் தொகுப்ப்பாக டெக்டாக்ஸ்.டிவி திகழ்கிறது.

தொழில்நுட்பத்தில் நாட்டம் கொண்டவ‌ர்கள் இதில் இடம் பெறும் தொழில்நுட்ப வீடியோக்களை பார்த்தால் துள்ளி குதிப்பார்கள் .

பல்கலைகழங்களின் சொற்பொழிவுகளுக்கோ கருத்தரங்குகளுக்கோ போக வாய்ப்பில்லாதவ‌ர்கள் அங்கு நிகழ்த்தப்படு உரைகளை இங்கே பார்த்தும் கேட்டும் மகிழ‌லாம்.

தொழில்நுட்ப வீடியோக்கள் சமீபத்தில் பதிவேற்றப்பட்டவை,மிகவும் பிரபலமானவை,இப்போது பார்த்து கொண்டிருப்பவை என மூன்று விதமான தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.பார்த்து ரசித்த வீடியோவை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல விரைவில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளின் நேரடி இணைய ஒளிபரப்பிற்கான‌ அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன.

கல்லூரி மாணவர்கள்,ஆய்வு மாண‌வர்ள் மற்றும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு இந்த தொழில்நுட்ப டிவி ஒரு வரப்பிரசாதம் தான்.

தொழில்நுட்ப வீடியோக்களுக்கு என்று தனியே ஒரு இடம் உருவாக்ப்பட்டுள்ளதால் நிகச்சி ஏற்பாட்டாளர்கள் புதிய உற்சாகத்தோடு அவற்றின் வீடியோ ப‌திவை வெளியிடும் வாய்ப்புள்ளது.தொழில்நுட்ப வீடியோக்களை பார்த்து ரசிபவர்கள் அவற்ரை பகிர்ந்து கொள்வதால் மேலும் பல ரசிகர்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.இதன் காரணமாகவே கருத்தரங்களும் உரைகளும் நேரடியாக ஒளிபர்ப்படலாம்.

இதே அற்புதம் இலக்குயத்திலும் நிக்ழலாம்.ஆனால் அதற்கு முதலில் இலக்கிய கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட் துவங்க
வேண்டும்.நிகழ்ச்சிகளை வெப்காஸ்டிங் செய்ய வேண்டும்.யூடியூப்பில் இல‌க்கியம் சார்ந்த கோப்புகள் கணிசமாக சேர்ந்தால் அதை கொண்டு ஒரு இணைய டிவியை துவக்கி விடலாம்.

இணையதள முக‌வரி;http://www.techtalks.tv/

Advertisements

2 responses to “இது தொழில்நுட்ப தொலைக்காட்சி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s