பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது.

ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.

புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது.

இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தருகிறது.

இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து.பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.

உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம்.

இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.

ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.

பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.

அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது.

இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.

இணையதள முகவரி;http://www.polyspeaks.com/

வெர்ப்லிங் பற்றிய எனது முந்தைய பதிவு இதோ;https://cybersimman.wordpress.com/2011/09/10/learning/

4 responses to “பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

    • பயனர் பதிவு இல்லாதது நம்பகத்தன்மையாக கருதப்பட வேன்டியதில்லை.பயனர் பதிவு செய்யப்படாதது சில நேரங்களில் இணையவாசிகளுக்கு வழங்கப்படும் எளிமையான சேவையாக கருதப்படுகிறது.தவிர இணைய அரட்டை என்பதே பயனும் அதே நேரத்தில ஆபத்தும் கொண்ட‌து தான்.பாதுகாப்பு குறித்து இணையவாசிகளே விழிப்புடன் இருக்க வேண்டும்.

      அன்புடன் சிம்மன்

  1. பிங்குபாக்: பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!·

  2. பிங்குபாக்: பயனுள்ள வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் வலைப்பதிவு. « chalkpiece·

பின்னூட்டமொன்றை இடுக