ஒரு மைல்கல் சாதனையும் டிவிட்டர் பதிவும்.

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார்.

இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான போது உண்டாக்கிய நிம்மதியையும் மகிழ்சியையும் நினைத்து கூட பார்க்க முடியாது.ஒரு மாபெரும் பின் தொடரலின் நிறைவாக அது அமைந்தது.மனித முயற்சியின் புதிய சிகரம் தொடப்பட்ட தருணமாகவும் அமைந்தது.

டிவிட்டரில் பின் தொடர்வதற்கே புதிய அர்த்ததையும் அளித்தது.

நூறு வயதான பவுஜா சிங் டொரோன்டோ மாரத்தான் ஓட்டத்தை பூர்த்தி செய்ததை உலகிற்கு உணர்த்திய குறும்பதிவு தான் இந்த வாசகம்.பவுஜாவால் முடியுமா என்னும் கேள்வியோடு படபடப்போடும் ஆர்வத்தோடும் காத்திருந்த குறும்பதிவாளர்களுக்கு பவுஜா மனித குலத்தை ஒரு படி முன்னேற செய்துவிட்டார் என்று உணர்த்திய பதிவும் கூட!

ஆம்ஸ்டிராங்கின் ஒரு அடி எப்படி மனித குலத்திற்கே ஒரு பாய்ச்சலாக அமைந்ததோ அதே போல நூறு வயதான பவுஜா சிங்கின் ஓட்டம் மனிதகுலத்தின் முயற்சிக்கே புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.வயதில் சதமடித்த நிலையில் மராத்தான் ஓட்டத்தை பூர்த்தி செய்த முதல் மனிதராக அவர் திகழ்கிறார்.

நூறு வயதை கடந்து வாழ்வது என்பதே ஒரு சாதனை தான்.அப்படியிருக்க நூறு வயதில் மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று 42 கிமீ தூரத்தையும் ஓடிக்கடப்பது என்றால் அது சாதனையிலும் சாதனை தான்.

இதனை பெரியவர் பவுஜா நிகழ்த்திய பிறகு உலகமே கொண்டாடுகிறது.வியந்து பாராட்டுகிறது.ஆனால் அவர் அந்த சாதனை ஓட்டத்தில் சவால்களை சந்தித்து கொண்டிருந்த நிலையிலேயே பலரும் டிவிட்டரில் அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தனர்.எல்லோர் மனதிலும் எதிர்பார்ப்பும் கூடவே படப‌டப்பும் !

இப்படி பவுஜாவின் ஒட்டம் பற்றிய செய்திக்காக டிவிட்டரில் ஆர்வத்தோடு காத்திருந்தவர்களில் குஷ்வந்த சிங் முக்கியமானவர்.இவர் அந்த குஷ்வந்த சிங் அல்ல;பத்திரிகையாளர்.பவுஜாவின் சுயசரிதையை ‘தலைப்பாகை சூறாவளி’என்னும் பெயரில் எழுதியவர்.

குஷ்வந்த் சிங் 2005 ம் ஆண்டில் பவுஜா சிங்கை சந்தித்து பேட்டி கண்டிருந்தார்.சாதனை சீக்கியர்கள் பற்றிய புத்தகத்திற்கான எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் போது பவுஜா சொன்ன முதல் வாசகமே தனக்கு தூங்க அல்லது ஓடவோ நடக்கவோ மட்டுமே தெரியும் என்பது தான்.

அதன் பிறகு அவரது சுயசரிதையை எழுததுவங்கினார்.அப்போது பவுஜா அதிக வயதில் மராத்தான ஓட்டத்தை நிறைவு செய்த வெள்ளைக்காரனின் சாத‌னையை முறியடிக்க வேண்டும் என்பது பற்றி கூறியிருக்கிறார்.

அதை நிறைவேற்றும் முயற்சியாக டொரோன்டோ மராத்தான் போட்டியில் கலந்து கொண்டார்.

பவுஜாவின் ஓட்டத்தை டெல்லியில் இருந்தபடி குஷ்வந்த் சிங் டிவிட்டரில் பின் தொடர தொடங்கினார்.மராத்தான் பாதையில் இருந்த படி பவுஜாவின் முன்னேற்றம் பற்றி டிவிட்டரில் வெளியாகி கொண்டிருந்த தகவல்களை அவர் ஆர்வத்தோடு கவனித்து கொண்டிருந்தார்.

மராத்தான் போட்டியின் இயக்குனர் ஆலன் புருக் வெளியிட்ட பவுஜா ஓடத்துவங்கிவிட்டார்,இன்னும் சில நிமிடங்களில் பவுஜா ஜுரம் உலகை பிடித்து கொள்ளப்போகிறது என்னும் முதல் பதிவு ஒரு மகத்தான முயற்சிக்கான முன்னோட்டமாக அமைந்தது.

குஷ்வந்த் சிங் பவுஜாவை சதிந்த்த அனுப்வம் பற்றி அசை போட்டபடி டிவிட்டரையே பார்த்து கொண்டிருந்தார்.

பவுஜா முதல் பத்து கிமீ தூரத்தை கடந்து விட்டதாக வெளியான குறும்பதிவு அவரது சிந்தனையை கலைத்தது.பவுஜா உறுதியோடு ஓடிக்கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.குஷ்வந்த் சிங்கிறகு இது மகிழ்சியை அளித்தாலும் உணமையான சவால் இனி தான் காத்திருக்கிற‌து என்பதை அறிந்திருந்தார்.முதல் பாதி தூரத்தை பவுஜா எப்படியும் பூர்த்தி செய்து விடுவார்.போக போக தான் கடினம் என்பதால் படபடப்போடு டிவிட்டரையே பார்த்திருந்தார்.

தொடர்ந்து பவுஜா எங்கே இருக்கிறார் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறார் என தகவல் அளிக்கும் குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருந்தன.

பவுஜா 36 கிமீ க்கு வந்துவிட்டார் என ஒரு குறும்பதிவு கூறியது.இன்னொரு பதிவோ அவர் மிகவும் களைப்பாக இருப்பதாக விவரித்தது.

துராம் குறைய குறைய பவுஜாவுக்கு இனும் 3 கிமீ தான் உள்ளது,2 கிமீ தான் உள்ளது என குறும்பதிவுகள் வேகத்தை கூட்டின.இன்னும் 1 கிமீ தான் உள்ளது,400 மீட்டர் தான் உள்ளது என தொடர்ந்த அந்த பதிவுகள் இதே எல்லைகோட்டை நெருங்கிவிட்டார் என எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின.

அதன் பிற‌கு தான் அவர் 100 வயதில் அதனை நிஅக்ழ்த்திவிட்டார் எனும் குறும்பதிவு பளிச்சிட்டது.அப்போது குஷ்வந்த மற்றும் அவரை போல பவுஜாவை பின்தொடர்ந்தவர்களின் மனம் களிப்பில் துள்ளிக்குதித்தது.

மனித முயற்சியின் சிகர‌த்தை ஒரு முதியவர் தொட்டு விட்டார் என்பதை உணர்ந்து அவர்கள் நெகிச்சி அடைந்தனர்.மறு நாள் நாளிதழ்களில் இந்த சாதனை செய்தி வெளியான‌ போது உலகமும் வியந்து போனது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s