காஸ்ட்ரோ மகளோடு டிவிட்டரில் விவாதம்.

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட்பார்கள்.அது தான் டிவிட்டர் ராஜ்யம்.

அதிபர் மகளாக இருந்தாலும் சரி டிவிட்டரில் நிற்க வைத்து கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா கஸ்ட்ரோ இந்த நிலையை தான் எதிர் கொண்டிருக்கிறார்.

மரியேலா கியூபாவின் பாலியல் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் அளித்த பேட்டியில் சில க‌ருத்துக்கள் திரித்தி வெளியிடப்பட்டு விட்டதாக கருதிய மரியேலா அதனை நேர் செய்வதற்காக டிவிட்டரில் தனக்கான பக்கத்தை துவக்கி விளக்கம் அளிக்க முற்பட்டார்.

கியுபாவில் இண்டெர்நெட் பயன்பாடும் குறைவு.இண்டெர்நெட் சுத‌ந்திரமும் மிக மோசம் என்ற கருத்து உண்டு.எனவே டிவிட்டர் போன்ற வெளிப்படையான கருத்து மரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அதிபரின் மகள் அடியெடுத்து வைத்தால் அது நிச்சயம் பெரிய‌ செய்தி தான்.

ஆனால் காஸ்ட்ரோ மகள் டிவிட்டர் செய்கிறார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்துவதற்கு முன் டிவிட்டரில் அவரோடு அதிருப்தியாளர் ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டது தான் பெரிதாக‌ பேசப்பட்டது.

கம்யூனிச நாடான கியூபா தனது மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக ஒரு விமர்சன‌ம் உண்டு.மேற்‌கத்திய நாடுகள் கியூபாவுக்கு எதிராக அடிக்கடி முன்வைக்கும் வாதமும் இது தான்.

கியுப்பாவில் எதிர்ப்பு குரலுக்கோ மாற்று கருத்துக்கோ இடமில்லை என்ற குற்றசாட்டும் கூறப்படுகிறது.இத்தகைய எண்ணம் கொண்டவ‌ர்கள் கியூபாவிலும் உள்ளனர்.அதிருப்தியாளர்கள் என்று சொல்லப்படும் இந்த பிரிவை சேர்ந்தவர் சான்சஸ்.

கியூபா இடமளிக்காவிட்டாலும் எதிர்ப்பு கருத்தை மிக உறுதியாக பதிவு செய்பவராக கருதப்படும் சான்சஸ் அந்நாட்டின் புகழ்பெற்ற அதிருப்தி வலைப்பதிவாள‌ரும் கூட.டிவிட்டரிலும் அவருக்கு பக்கம் உள்ள‌து.

காஸ்ட்ரோ மகள் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கும் செய்தியை கேள்வி பட்டதுமே அவர‌து எதிர்ப்பு குணம் விழித்து கொண்டது.உடனே காஸ்ட்ரோ மகளுக்கு டிவிட்டரில் கேல்வி கனைகளை தொடுக்க தயாராகிவிட்டார்.

காஸ்ட்ரோ மகள் டிவிட்டர் கணக்கை துவக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.எல்லாம் சரி கியூபா மக்கள் தங்கள் சிறைகளில் இருந்து எப்போது வெளியே வருவார்கள் என்று அவர் டிவிட்டர் மூலம் கேள்வி எழுப்பினார்.கியூபா மக்கள் எல்லாவிதங்களிலும் கட்டுப்படுத்தப்படுவதை நையாண்டி செய்யும் வகையில் இவ்வாறு கேள்வி கேட்ட சான்சஸ் ,டிவிட்டரின் பன்முக உலகிறகு நல்வரவு.இங்கே யாரும் என வாயை மூட‌ முடியாது. வெளிநாடு செல்ல தடை விதிக்க முடியாது என்று இரன்டாவது டிவிட்டர் செய்தியை தட்டி விட்டார்.

அதோடு காஸ்ட்ரோ மகளின் ஓரின‌ச்சேர்க்கை ஆதரவு நிலையை மனதில் வைத்து கொண்டு அதெப்படி ஒரு விஷயத்தில் சுதந்திர சிந்தனை இருக்கும் மற்ற விஷயங்களில் இருக்காது.சகிப்புத்தன்மை முழுமையாக அல்லவா இருக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இப்படி கேட்கப்படுவோம் என மரியேலா எதிர்பார்த்தாரா என்பது தெரியவில்லை.ஆனால் அதிருப்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அவர் பதில் அளிக்க வேண்டிய நிலை வந்தது.

சகிப்புத்தன்மை பற்றிய உங்கல் நிலைப்பாடு கடந்த கால ஆட்சியாளர்களின் எண்ணத்தையே பிரதிபலிப்பதாக அவர் பதில் அளித்தார்.தொடர்ந்து கேள்விகள் வந்த போது மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலால் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதாக மரியேலா சன்சசுக்கு பதிலடி கொடுத்தார்.

ஆனால் சன்சசோ அசரவில்லை.கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள எல்லோரும் டிவிட்டரில் வந்தால் அல்லது தான்.நிஜத்தில் சொல்ல அனுமதிக்க்ப்படாத கருத்துக்களை டிவிட்டரில் நாங்கள் உரக்க சொல்லுவோம் என்று அவர் மேலும் ஒரு பதிவை வெளியிட்டார்.

டிவிட்டரில் மட்டும் அல்ல எதிர்காலத்தில் எல்லா இடங்களிலும் மாற்று குர‌லை கேட்க வேண்டிய காலம் வரும் என்றும் ஆவேசமாக சொல்லியிருந்தார்.

டிவிட்டரின் சுதந்திரத்தை பயன்படுத்தி கியூபாவில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் என்ர கருத்தை அதிருப்தியாலரான சான்சஸ் காஸ்ட்ரோ மகளுடனான விவாத‌த்தின் மூலம் உலகிறகு உணர்த்திவிட்டார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s