ஜாகிங்கிற்கேற்ற பாடல் உண்டு.

நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக அமைந்திருக்கும்.காட்சிரீதியாக பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும்.

நாய‌கனும் நாயகியும் காலையில் ஓடிக்கொண்டே பாடுவது போன்ற அந்த காட்சிக்கு கச்சிதமாக பொருந்திய அந்த மெட்டின் தாளலயம் இதயத்தை துள்ளி குதிக்கச்செய்யும்.

ஜாகிங் செய்வதற்கு என்றே போடப்பட்ட மெட்டோ என்று கூட நினைக்கத்தோன்றும்.

பருவமே பாடலைப்போல ஒடிக்கொண்டே கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் தேவை என்றால் ஜாக்.எப் எம் தளத்திற்கு விஜயம் செய்யலாம்.

ஓட்ட பயிற்சியோ நடை பயிற்சியோ வழி துணை போல காதில் பாட்டு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் அதற்கேற்ற பாடல்களை தேடிக்கொள்ள வழி செய்கிற‌து.

அதுவும் எப்படி பயிற்சிக்கான தூரத்தை குறிப்பிட்டு அந்த தூரம் முழுவதும் ரீங்காரமிடும் பாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.நடை பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சிக்கான பாடல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.அல்லது பயனாளிகள் மத்தியில் பிரபலமாக உள்ள பாடல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஓட்டத்தின் போக்கோடு ஒத்துப்போகும் பாடலை கேட்டபடி பயிற்சி மேற்கொள்ளும் சுகானுபவத்தை அளிக்ககூடிய பாடல்களை இந்த தளம் பரிந்துரைப்பது இடை பிரியர்களை மெய்மறக்க வைக்கும்.

பயிற்சி மேற்கொள்பவர்கள் தங்கள் ஓட்டம் மேற்கொள்ளும் வரைபட பாதையை மற்ற‌வர்களோடு பகிர்ந்து கொண்டு வழித்துணையும் தேடிக்கொள்ளலாம்.வரைபடத்தை கிளிக் செய்தால் சென்னை வந்து நின்று வியக்க வைக்கிறது.ஆனால் பருவமே பாடல் வருமா என்று தெரியவிலை.

இசை கேட்பதன் பயனை தனியே பட்டியலிட வேண்டியது இல்லை என்ற போதிலும் பாடலை கேட்டுக்கொண்டே ஓடுவதால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பலன்களையும் இந்த தளம் குறிப்பிடுகிறது.

இணையதள‌ முகவரி;http://jog.fm/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s