ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனை செய்யப்படுவது போலவே நாம் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் அரங்கேறும் சம்பவங்களை டிவிட்டரில் வர்ணனை செய்யலாம்.

இதற்கு அழகான உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்க ரெஸ்டாரன்டின் நடந்த சம்பவம் ஒன்று டிவிட்டரில் நேரடியாக பகிர்ந்து கொள்ளப்பட்டதை குறிப்பிடலாம்.இளம் கனவன் மனைவியிடையே உண்டான பிணக்கு அல்லது மோதல் என்று அதனை சொல்லலாம்.

மோதலோ பிணக்கோ அந்த நிகழ்வு அதன் அத்தனை சுவையோடும் உயிர்ப்போடு டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதே விஷயம்.

‘ஒரு திருமணம் உடைகிறது’.இப்படி தான் ஆன்டி பாயல் என்னும் குறும்பதிவாளர் அந்த வர்ணனையை துவக்கியிருந்தார்.பர்ஜர் கிங் ரெஸ்டாரன்டில் அமர்ந்திருந்த அவர் அருகே இருந்த மேஜையில் அந்த இளஞ்ஜோடியிடையே ஏற்பட்ட மோதலை கவனிக்க நேர்ந்த போது ,இந்த ரெஸ்டாரன்டில் எனது மேஜை அருகே ஒரு திருமணம் உடைவதை பார்த்து கொண்டிருக்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் குறும்பதிவாக பகிர்ந்து கொண்டார்.

அவருடைய அடுத்த குறும்பதிவு ,அந்த குழந்தைகளின் வயது 21 என்று குறிப்பிட்டது.அந்தை பையனின் புகார்,அம்மா சொல்லும் போது அவள் பாத்திரங்களை தேய்ப்பதில்லை என்பதாக இருக்கிறது என பிணக்கிற்கான காரணத்தையும் அதில் குறுப்பிட்டிருந்தார்.

அடுத்த பதிவு ,அவள் சத்தமாக விசும்புவதையும் அவன் எழுந்து செல்வதையும் குறிப்பிட்டிருந்தது.கூடவே ரெஸ்டாரண்டில் இருந்த யாரும் அவளை தேற்ற முயலவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.

இதற்குள் அவன் திரும்பி வந்திருந்தான்.இந்த தகவலை உடனே தெரிவித்த அடுத்த பதிவு ,நான் உனக்கு துரோகம் செய்யவில்லை என்று அவள் சொன்னதையும் அதை அவன் நம்பாமல் இருந்ததையும் தெரிவித்தது.இருப்பினும் உன்னை நேசிக்கிறேன் என்று அவன் குறுகிறான்.அமர்ந்து கொள்கிறான்,எங்கும் அமைதி நிலவுகிறது இப்படி கதை போல அந்த பதிவு தொடர்ந்தது.

இதை பார்த்த வேறு ஒரு ஜோடி பரஸ்பரம் கட்டித்தழுவி கொள்வது போன்ற ஒரு காட்சியையும் திரைப்படங்களில் கட் செய்து காட்டுவது போல நடுவே ஒரு பதிவில் வர்ணித்தார்.

‘அன்பே,நீ ஒரு நல்ல மனைவியாக் இருக்க வேண்டும் என்று தான் நான் இதனை சொல்கிறேன்’ என்று அவன் விளக்கம் அளிக்கிறான்.யாரும் இதனை நம்பவில்லை என்னும் வர்ணனையோடு பாயல் இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறார்.

அவன் மட்டும் வீடியோ கேம் பார்த்து கொண்டிருக்க அவள் மட்டும் மாமியார் சொல்வதை கேட்டு பாத்திரங்களை தேய்த்து கொண்டிருப்பது நியாயமா என்று அவள் குமுறுகிறாள்.

நீ என்னை நேசித்தால் நான் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்ய வேண்டும் என்கிறான் அவன்.

இந்த வாதத்தால் அவள் வெறுத்துப்போகிறாள்.நான் இதை கேட்க விரும்பவில்லை என்று கூச்சலிடுகிறாள்.அவன் மீது பதிலுக்கு புகார்களை வீசுகிறாள்.நீ ஏன் என்னை திருமணம் செய்து கொண்டாய என அவள் ஆவேசமாக கேட்க ஏன் என்றால் நான் உன்னை காதலித்தேன் என அவன் பதில் சொல்கிறான்.காதலித்தேன் என இறந்த காலத்தில் சொல்லப்பட்டதை அவள் விரக்தியுடன் சுட்டிகாட்டுகிறாள்.

இதனிடையே அவர்கள் மோதலுக்கான மையகாரணமாக இருவரும் பரஸ்பரம் துரோகம் இழைத்திருப்பதாக சந்தேகிப்பதை பாயல் சுட்டிக்காடுகிறார்.

அவள் அவனை வெளியேறுமாறு கத்துகிறாள்.அவன் அப்படியே அமர்ந்திருக்க அவள் வேறு மேஜைக்கு சென்று விடுகிறாள்.

இதனிடையே மற்றவர்கள் கவனிப்பதி அவள் கவனித்திருக்க வேண்டும்.வெளியே சென்று பேசலாம் என்கிறாள்.அவனோ கடுப்பாக,ஏன் இங்கேயே பேசலாம் எலல்லோரும் உனைப்பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்கிறான்.

தொடர்ந்து அவள் ஆடை அணியும் விதத்தை அவன் குறை கூறுகிறான்.அவள் எனக்கு பிடித்தபடி அணிகிறேன் என்கிறாள்.அவன் அதை நான் தீர்மானிக்க வேண்டும் என்கிறான்.

மேலும் கொஞ்சம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் அமைதியாகின்றனர்,ரெஸ்டாரண்டில் மெல்லிய பின்னணி இசை கேட்பதாக பாயல் வர்ணிக்கிறார்.

இதற்குள் அவள் எதையோ சொல்ல அவன் சிரிக்க அவளும் சிரிக்கிறாள்.மற்றவர்களும் சிரிக்கின்றனர்.

அவன் குழந்தை பிறப்பது பேசுகிறான்.அவள் வெளியேறுகிறாள்.அவன் பின் தொடர்ந்து ஓடுகிறான்.

அவள் மீண்டும் உள்ளே வருகிறாள்.அவனும் வருகிறான்.அவள் மன்னிப்பு கேட்க வன் தோளை குலுக்குகிறான்.அவளை கட்டியனைத்தபடி வெளியேறுகிறான்.

அவர்கள் இருக்கைகள் காலியாக இருக்கின்றன,அவர்கள் வாழ்க்கையில் உள்ள அன்பை போல என்று பாயல் கவித்துவமாக முடிக்கிறார்.

இப்படியாக டிவிட்டரில் அந்த இளம் தம்பதியின் ஊடலை(!)அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அந்த தம்பதி இதனை எதிர்பார்த்திருந்தால் பொது இடத்தில் இப்படி சன்டையிட்டுருப்பார்களா?

இது டிவிட்டர் கால கதை சொல்லலா அல்லது டிவிட்டர் கால அத்துமீறலா?

2 responses to “ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s