இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்.

டெய்லிலிட் தளமும் இமெயில் வாயிலாக தவணை முறையில் புத்தகம் படிக்க உதவும் தளம் தான்.உண்மையில் டெய்லிலிட் போல என்று டிப்ரீட் பற்றி தான் சொல்ல வேண்டும்.காரணம் டெய்லிலிட் இந்த பிரிவில் முதலில் தோன்றி முன்னோடி தளம்.

டெய்லிலிட் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் அது வழங்கும் அம்சங்களை பார்க்கும் போதும் முன்னோடி தளம் என்றெ சொல்லத்தோன்றும்.

எந்த புத்தகத்தை படிக்க விருப்பமோ அதனை டெய்லிலிட்டின் பட்டியலில் இருந்து தேர்வு செய்து இமெயில் முகவரியை சமர்பித்து விட்டால் தினமும் புத்தகத்தின் ஒரு பகுதி இமெயிலில் வந்து சேரும்.இமெயிலில் மடும் அல்ல ஆர் எஸ் எஸ் முறையிலும் புத்தக தவணையை பெறலாம்.அது மட்டும் அல்லாமல் எப்போதெல்லாம் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்ட நாட்களையும் குறிப்பிடலாம்.கம்ப்யூட்டரில் அல்லது கையில் இருக்கும் செல்போனில் என்று புத்தகம் படிக்கும் வசதி கொண்ட எந்த சாதனம் வழியாகவும் புத்தக தவணையை பெறலாம்.

வெளியூர் பயணங்களின் போது அல்லது விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட புத்தகத்தை படித்து முடிக்க விரும்பினாலும் இந்த‌ வசதியை பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.சுஜாதாவின் கணேஷ் வசந்த் கதைகளில் கனேஷ் வெளியூர் பயணங்களின் போது தவறாமல் ஏதாவது ஒரு புத்தகத்தை சுட்கேசில் எடுத்து வைப்பார்.ஒரு கதையில் நீண்ட நாளாக படிக்க நினைத்த டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் புத்தகத்தை கனேஷ் எடுத்து வைப்பதாக சுஜாதா எழுதியதாகவும் ஞாபகம்.

டெய்லிலிட் மூலம் நீங்களும் கூட வெளியூர் பயணத்தின் போது எந்த் ஒரு புத்தகத்தையும் படித்து முடித்து விடலாம்.இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது அலுவலக் நேரத்தில் வேலை பளுவுக்கு இடையே கொஞ்சம் ரிலாக்சாக படித்து மகிழலாம்.(வேலை பாதிக்கப்படாமல்)

புத்தகத்தின் தவணையை ஒரே மூச்சில் படித்தாயிற்றா?அடுத்த தவணைக்காக மறு நாள் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.மேலும் படிக்கவும் என்ற பகுதியில் கிளிக் செய்தால் அடுத்த தவணை உடனே வந்தே சேரும்.

விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்ய பல வழிகள் இருக்கின்றன.

புத்தகங்களின் பட்டியல் எழுத்தாளர்களின் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.புத்தக வகைகளின் பட்டியலிலும் தேடலாம்.அல்லது குறிப்பிட்ட புத்தகம்,எழுத்தாளர் பெயரை குறிப்பிட்டு தேடலாம்.இதை தவிர புதிதாக அறிமுகமாகியுள்ள புத்தகங்கள் மற்றும் சமீபத்திட புத்தகங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில புத்தகங்களை தனியேவும் கட்டம் கட்டி பரிந்துரை செய்கின்றனர்.

சமூக வலைப்பின்னல் தளங்கள் போல உறுப்பினர்கள் விரும்பி படிக்கும் புத்தங்களையும் பார்க்கலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு நட்பைவும் வளர்த்து கொள்ளலாம்.புத்தக பிரியர்களுக்கான விவாத அரங்கும் இருக்கிற‌து.

எல்லோரும் தினமும் இமெயில் பார்க்கிறோம் ஆனாலும் புத்தகம் படிக்க நேரம் இல்லை என்று புலம்புவதை கவனித்து இந்த இரண்டையும் இணைத்து இமெயில் வழியே தினமும் புத்தகம் படிக்கும் இந்த சேவையை உருவாக்கியதாக இந்த நிறுவனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இணையதள முகவரி;http://www.dailylit.com/

பார்க்க முந்தைய பதிவு.https://cybersimman.wordpress.com/2011/12/11/book-2/

Advertisements

One response to “இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

  1. Pingback: இமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம். « Cybersimman's Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s