மாநாடுகளுக்கான டிவிட்டர் சுவர்.

டிவிட்டர் யுகத்திலும் கூட இன்னும் பழைய பாணியிலேயே மாநாடுகளையும்,கருத்தரங்குகளையும் நடத்தி கொண்டிருந்தால் எப்படி? எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இன்னும் உயிரோட்டம் மிக்கதாக இருக்க வேண்டாம்?அதாவது பார்வையாளர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே இல்லாமல் பங்கேற்பாளராக மாறி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துபவர்களோடு கலந்துரையாடி அரங்கமே களைகட்ட வேண்டாம்?கேள்விகள்,பதில்கள்,விவாதங்கள் என பேச்சாளர்களும் பார்வையாளர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் பயன் பெற்றால் தானே நிகழ்ச்சிக்கே பொருள் இருக்கும்.

இப்படி மாநாடுகளுக்கும்,கருத்தரங்குகளுக்கும்,பொது நிகழ்ச்சிகளுக்கும் கூடுதல் அர்த்தத்தை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு தான் டிவிட்டர் சார்ந்த அழகான சேவையாக டிவிஜெக்டர் உருவாகியுள்ளது.

டிவிட்டரும் புரஜெக்டரும் இணைந்த இந்த சேவை எந்த நிகழ்ச்சிக்கும் நடுவே டிவிட்டர் உரையாடலை நடத்தி கொள்ள வழிசெய்கிறது.

பொதுவாகவே மாநாடு அல்லது கருத்தரங்கு போன்றவற்றின் முடிவில் கேள்வி பதில்களுக்கு என்று கொஞ்சம் நேரத்தை ஒத்துக்குவார்கள் இல்லையா?இந்த கேள்வி பதில் எந்த அளவுக்கு உரையாடலாக அமையும் என்பது எநத் அளவுக்கு சம்பிரதாயமாக நின்றுவிடும் என்பது பல விஷ்யங்களை பொருத்தது.இதற்கு மாறாக நிகழ்ச்சி நடக்கும் போதே பார்வையாளர்கள் மனதில் எழக்கூடிய கேள்விகள் கேட்கப்ப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதற்கு சுடச்சுட பதில் அளித்தால் எப்படி இருக்கும்? அதை தான்.டிவிஜெக்டர் செய்கிறது.

நிகழ்ச்சியின் போக்கை பாதிக்காமல் அதே நேரத்தில் பார்வையாளர்களை பங்கேற்க வைக்கும் வகையில் டிவிட்டர் வழியே இந்த உரையாடலை நடத்தி கொள்ள வழி செய்வது தான் இந்த சேவையின் ஸ்பெஷல்.

இதற்காக கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளின் போது டிவிட்டர் சுவரை உண்டாக்கி கொள்ள வைத்து அதன் மூலம் உரையாடலை நடத்தி நிகழ்சியை உயிரோட்டமாக மாற்றுகிறது இந்த சேவை.

இப்போதே கூட நிகழ்ச்சிகளின் நடுவே டிவிட்டர் வழியே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வழக்கம் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கிறது.எந்த நிகழ்ச்சியில் இருந்து வேண்டுமானாலும் டிவீட் செய்யலாம்.ஆனால் இந்த பகிர்வுகளை அவர்களின் பின்தொடர்பாளர்கள் மட்டும் தான் படிக்க முடியும்.

டிவிஜெக்டர் உருவாக்கி தரும் டிவிட்டர் சுவர் மூலம் உரை நிகழ்த்தும் முக்கிய பேச்சாளருடனே பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பது தான் விஷேசம்.

எப்படி என்றால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் நிகழ்ச்சியின் மைய கருத்தை குறிக்கும் ஒரு குறிச்சொல்லை ஹாஷ்டேகாக தேர்வு செய்து அதனை டிவிஜெக்டர் தளத்தில் சமர்பித்து நிகழ்ச்சிக்கான டிவிட்டர் சுவரை முதலில் உருவாக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு பார்வையாளர்களோடு அந்த சொல்லை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியின் நடுவே பார்வையாளர்கள் ஏதாவது சொல்லவோ கேட்கவோ விரும்பினாலோ அந்த கருத்தை நிகழ்ச்சிக்கான ஹாஷ்டேகுடன் டிவிட்டர் செய்ய வேண்டும்.உடனே இந்த டிவிடர் செய்தி நிகழ்ச்சி அரங்கின் பின்னணியில் உருவாக்கப்பட்ட டிவிட்டர் சுவரில் தோன்றும்.பேச்சாளர் உட்பட அனைவரும் அதனை பார்வையிடலாம்.பேச்சாளர் அந்த கருத்திற்கு தனது உரையிலேயே பதில் அளிக்கலாம்.இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டிவிட்ட்டரிலேயே விளக்கம் தரலாம்.தொடர்ந்து மற்ற பார்வையாளர்கள் கேட்கும் சந்தேகங்களும் அவற்றுக்கான பதில்களும் டிவிட்டர் சுவரில் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படி உரை நிகழ்த்தப்படும் போதே அது தொடர்பான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது கருத்தரங்கை மேலும் ஈடுபாடு மிக்கதாக மாற்றும் தானே.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கம்ப்யூட்டருடன் புரஜெக்டர் சாதனத்தை இணைப்பதன் மூலம் டிவிட்டர் பகிர்வுகளை திரையில் தோன்ற
செய்யலாம்.

இப்போது நினைத்து பாருங்கள் இத்தகைய டிவிட்டர் சுவர் உள்ள அரங்குகள் எத்தனை உயிரோட்டம் மிக்கதாக இருக்கும் என்று!

முதலில் பார்வையாளர்கள் வெறும்னே கேட்டு கொண்டிருப்பாதால் ஏற்படக்கூடிய சலிப்புக்கு இடம் கொடுக்காமல் ஈடுபாட்டுடன் இருக்க முடியும்.பேச்சாளர்களை பொருத்தவரை தங்கள் உரையின் சாரம்சம் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.

கருத்தரங்குகள் ,மாநாடுகள்,விளம்பர நிகழ்வுகள் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம்.பொது இடங்களிலும் இந்த சுவரை அமைத்து பொது மக்களை உரையாட வைக்கலாம்.

இவ்வளவு ஏன நம்மூரில் அரசியல் கட்சிகளின் பொதுக்குழு செயற்குழு போன்ற நிகழ்வுகளின் போது இந்த டிவிட்டர் சுவரை அமைத்து தலைவர் பேசும் போது தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் டிவிட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து,அதற்கு தலைமை பதில் அளித்து உணமையானஅ விவாதத்தை உண்டாக்கலாம்.

கைத்தட்டுவதற்கு மட்டும் தானா தொண்டர்கள்!

இணையதள முகவரி;twijector.com/

Advertisements

2 responses to “மாநாடுகளுக்கான டிவிட்டர் சுவர்.

  1. நல்லதோர் தகவல். ஆனால் மாநாட்டின்/ சந்திப்பின் நோக்கம் அடிகடி திசை மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மக்களை திரட்டி ஒரு இடத்தில் அமரவைத்து மார்க்கட்டிங் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s