நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

‘அச்சம் தவிர’ போல கிரந்தம் தவிர் என்கிறது புல்வெளி டாட் காம்.அடாடா அழகு தமிழில் இணையதளத்தின் பெயரை கேட்டாலே காதில் தேன் வந்து பாய்கிறதே.

கிரந்தம் தவிர் என்றால் வடமொழி கல‌ப்பில்லாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்ப‌டுத்தி எழுதுவது.நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு பல நேரங்களில் வடமொழி சொற்களுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களை நினைவில் கொண்டு வருவது கடினமாக இருக்கலாம்.

இது போன்ற நேரங்களில் கைகொடுக்கவே புல் வெளி உருவாகப்பட்டுள்ளது.கிரந்தம் கலந்த எந்த சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் தேவையோ அந்த சொல்லை இந்த தளத்தில் சம‌ர்பித்தால் அழகான தமிழ் சொற்களை இந்த தளம் பட்டியல் போட்டு தருகிறது.

உதாரணத்திற்கு ஷ் என்ற எழுத்தை டைப் செய்தால் கஷ்டத்திற்கு கடினம்,இஷ்டத்திற்கு விருப்பம்,புஷ்பத்திற்கு பூ,நஷ்டத்திற்கு இழப்பு,விஷ்ணுவுக்கு பெருமாள் என தமிழ் சொற்களாக அடையாளம் காட்டுகிற‌து.

அந்த வகையில் நல்ல தமிழ் சொற்களுக்கான தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.தமிழ் கூல் என்று கூட சொல்லலாம்.அது மட்டும் அல்ல ஒவ்வொரு முறையும் முகப்பு பக்க்த்தில் ஒவ்வொரு கிரந்த சொற்களும் அதற்கு பதிலான தமிழ் சொல்லும் தோன்றி கொண்டே இருக்கின்றன.

முற்றிலும் வடமொழி அல்லது ஆங்கில சொற்கள் கலப்பில்லாமல் எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த தளத்தை மனதார வரவேற்கிறேன்.இருந்தாலும் தமிழில் கலப்படம் களையப்பட வேண்டும் எனபதில் உடன்படுகிறேன்.தமிழ் மொழிக்கு உதவக்கூடிய இத்தகைய தளங்கள் இன்னும் பல தேவை.

இந்த தளத்தை அடையாளம் காட்டிய டிவிட்த‌மில்ஸ் தளத்திற்கும் எனது நன்றிகள்.

இணையதள முகவரி;http://www.pulveli.com/

http://twitamils.com/

Advertisements

9 responses to “நல்ல தமிழுக்காக ஒரு தேடியந்திரம்.

 1. நான் தேடின எந்த வார்த்தையும் இல்லங்க !!.. சரி, Login பண்ணி நாம அத பதிவு பண்ணலாம்னா அனுமதியும் இல்லங்க !!.. இது website பாராட்டுக்குரியது தான் என்றாலும் பலர்க்கு அனுமதி கொடுத்தா வேகமா வளர்ச்சி இருக்கும். நான் முயற்சி செஞ்ச வார்த்தைகளில் உதரணத்துக்கு ஒன்று: போஜனம்

 2. வணக்கம் சிம்மன்,

  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல், மறுமொழி அளிக்கும் வாய்ப்பும்.

  எப்படி இருக்கீங்க, மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.

  உண்மையில் இந்த மாதிரி இணைய தளங்கள் தமிழில் வரனும். அதை யாரு நடத்துறா, அவங்க நமக்கு நண்பரா அல்லது போட்டியாளரா என்ற எந்த எண்ணங்களும் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவை தரனும்.

  ஆனால் ஒரு வருத்தம், வணிக ரீதியாக வெற்றி அடைய வாய்ப்பில்லாத காரணத்தால், பெரும்பாலான தமிழ் இணைய தளங்கங்கள் வந்த இடம் தெரியாமல் அழியும் வாய்ப்புள்ளது. அதனால் அதற்க்கு ஒரு வழி நாம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

 3. உங்கள் தளத்தின் தீம் கண்களை உறுத்துவதை போல் தெரிகிறது. பதிவிலிருந்து எண்ணம் விலகும் படி இருப்பதாக தோன்றுகிறது.

  நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

  மற்றபடி தீம் நல்ல இருக்கு. பின்னாடி இருக்கிற அந்த background தான் அப்படி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s