டிவிட்டரில் உலக இலக்கியம்

வாலிப கவிஞர் வாலி டிவிட்டருக்கு வந்தால் வெளுத்து வாங்கி விடுவார்.சிலப்பதிகார கதையையே ஒரு வரியில் சொன்னவராயிற்றே!ஒரு முறை சிலம்பின் கதையை சுருக்கமாக சொல்ல முடியுமா என்று கேட்கப்பட்ட போது,கேட்ட மாத்திரத்தில் ‘புகாரில் பிறந்து புகாரில் மாண்டவன்’ என சொல்லி வியக்க வைத்தவர் வாலி.

அப்படிப்பட்டவர் 140 எழுத்துக்களில் காவியமே படைத்து விடுவார்.

வாலிக்கு டிவிட்டருக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்று தெரியாது,ஆனால் இலக்கியத்தை இப்படி சுருங்க சொன்னால் டிவிட்டர் யுகத்திற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.அமெரிக்காவை சேர்ந்த இரன்டு வாலிபர்கள் அதை தான் செய்து டிவிட்டரிலக்கியம் படைத்துள்ளனர்.பென்குவின் பதிப்பகத்தில் இருந்து புத்தகத்துக்கான வெளியீட்டு வாய்ப்பையும் பெற்றுவிட்டனர்.

எமெட் ரென்சின் மற்றும் அலெக்ஸ் அகிமென் என்னும் அந்த மாணவர்கள் டிவிட்டர் மற்றும் இலக்கிய ஆர்வம் இரண்டையும் இணைத்து அதனோடு இளமையின் குறும்பையும் சேர்த்து உலக இலக்கியத்தை எல்லாம் 20 குறும்பதிவுகளில் அடக்கி விட்டனர்.ஸ

உலக‌ பெருங்கவி ஷேக்ஸ்பியரில் இருந்து நாவல்களின் பேரசர் தாஸ்தவகி வரை புகழ்பெற்ற படைப்பாளிகளின் நாவல்களையும் கதைகளையும் சுருக்கி 20 குறும்பதிவுகளாக கொடுத்துள்ளனர்.

அதாவது கதை சுருக்கத்தை தருவது போல இந்த‌ இருவரும் நாவல்களின் சாரம்சத்தை டிவிட்டர் பதிவுகளாக்கினர்.

டால்ஸ்டாய் போன்ற மேதைகளின் புத்தகத்தை படிக்கும் அளவுக்கு இளையதலைமுறைக்கு பொருமை இல்லை என்று ரொம்ப நாளாக சொல்லப்பட்டு வருகிற‌து.டிவிட்டர் யுக‌த்தில் கேட்கவே வேன்டாம்.இன்றைய தலைமுறையின் பொறுமை 140 எழுத்துக்கள் அளவு தான்.

எனவே பெரும் இலக்கியமாக இருந்தாலும் அது டிவிட்டர் வடிவில் கொடுக்கப்பட்டால் எல்லோரையும் கவர்ந்துவிடும்.கூடவோ ஒரு கவர்ச்சியும் இருக்கும்.

ஷேக்ஸ்பியர் நாயகன் ஹாம்லெட் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ள பக்கம் பக்கமாக படிக்கும் பொறுமை எத்தனை பேருக்கு இருக்கும்.அதையே பத்து குறும்ப்திவுகளாக தந்துவிட்டால்?அதுவும் ஹாம்லெட்டே டிவீட் செய்வது போல இருந்தால் எப்ப‌டி இருக்கும்?

அதை தான் இந்த இருவரும் செய்தனர்.

நாவல்களை சுருக்கியதோடு கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்து சுவையாக
குறும்பதிவுகளாக்கினர்.இந்த பதிவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருப்பதோடு படைப்புகளின் சாரம்சத்தியும் புரிய வைத்து விடுகின்றன.

இந்த இளைஞர்களீன் குறும்பதிவுகள் வெளீயான போது பெரும் கவனப்பை பெற்றன.இந்த பதிவுகள் டிவிட்டரில்லகியம் என்றும் வர்ணிக்கப்பட்டதுஅதாவது டிவிட்டரேச்சர் .இதே பெயரில் பென்குவின் இவற்றை புத்தக‌மாக வெளியிட்டுள்ளது.

————
http://twitterature.us/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s