இ புக் வடிவில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் இங்கிலாந்து அரச அகுடும்பத்தின் மீது மதிப்பும் விசுவாசமும் கொன்டிருப்பவர்களுக்கு இன்னும் விஷேசமானது!

காரணம் இந்த கிறிஸ்துமஸ் திருநாளுக்கான மகாராணியின் வாழ்த்து செய்தியை அவர்கள் இ புக் வடிவில் படித்து மகிழலாம்.இ காமார்ஸ் ராட்சனான அமேசான் தந்து இ புக் ரீடரான கிண்டிலில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை
இ புக் வடிவில் வெளியிட்டுள்ளது.இதற்காக அமேசான் இங்கிலாந்து அரண்மனையோடு பிரத்யேக ஒப்பந்தம் செய்து கொண்டு வாழ்த்து செய்தியை இபுக் வடிவில் வெளியிடும் அனுமதி பெற்றுள்ளது.மகராணியின் வாழ்த்து செய்தியை இபுக்காக கிண்டில் உரிமையாளர்கள் இலவசமாக டவுண்லோடு செய்து படித்து கொள்ளலாம் என்றும் அமேசான் அறிவித்துள்ளது.

அமேசானின் இந்த அறிவிப்பு இ புக் துறையை ஆர்வத்தோடு கவனித்து வருபவர்களை வியப்பில் ஆழத்தி அமேசான் அசத்திவிட்டது என்று சொல்ல வைத்திருக்கிறது.அதே நேரத்தில் இபுக் ரீடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போட்டி நிறுவனங்களை கோட்டை விட்டோமே என்று நொந்து போகவும் வைத்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு பரஸ்ப்ரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொன்டாலும் கத்தோலிக்க மத்ததலைவரான போப்பாண்டவரின் வாழ்த்து செய்தி மிகவும் விஷேசமானது. அதே போல இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசிபெத்தின் வாழ்த்து செய்தியை விஷேசமானது.

இந்த ஆண்டு மகாராணியின் கிறிஸ்த்மஸ் வாழ்த்த இபுக்காக வழங்கினால் என்ன என்று அமேசானுக்கு தோன்றியதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.இது புதுமையாக மட்டும் அல்ல புது யுக்ச்த்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று அமேசான் நினைத்திருக்க வேண்டும்.

அமேசானின் இந்த கோரிக்கையை இங்கிலாந்து அரண்மனை ஏற்றுக்கொண்டதிலும் எந்த வியப்பும் இல்லை.

மகாராணியின் வாழ்த்துகளையும் பேச்சுக்களையும் மக்களோடு பகிர்ந்து கொள்வதில் நவீன வழிகளை பயன்படுத்தி கொள்வதில் அரண்மணை எப்போதுமே தயக்கம் காட்டியது இல்லை.

மகாராணி எலிசிபெத்தும் தொழில்நுட்பத்தை அரவணைத்து கொள்வதில் தயக்கம் காட்டியத்தில்லை என்பதோடு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.

இமெயில் அறிமுகமான காலத்திலேயே அவர் இமெயிலை பயன்படுத்த துவங்கிவிட்டார்.பின்னர் பாட்காஸ்டிங் பிரபமான கால்த்தில் 2006ல் மகாராணியின் உரை பாட்காஸ்டிங் வடிவில் வெளியானது.அடுத்த ஆண்டே அவரது பேச்சு யூடுயூப்பில் வெளியானது.இப்போது மகராணிக்கு என தனியே யூடியூப் சேனல் இருப்பதோடு டிவிட்டர் பக்கமும் இருக்கிறது.

ஆக நவீன தகவல் தொழில்நுட்ப வழிகளை பயன்படுத்திகொள்வதில் மகாராணிக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது.

எனவே கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இபுக் வடிவில் வழங்கலாம் என அமேசான் முன் வைத்த யோசனையை மகாராணி ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை தான்.

நாளிதழ்,தொலைக்காட்சி மூலம் வாழ்த்து சொல்வது போல இபுக் வடிவிலும் வாழ்த்து மக்களை சென்றடைவது காலத்திற்கேற்ற செயல் என்றே மகாராணியும் அரண்மனை நிர்வாகமும் கருதியிருக்க வேண்டும்.

இபுக் சந்தையும் அதற்கான ரீடர்களின் போட்டியும் வளர்ந்து வரும் நிலையில் அமேசானின் இந்த செயல் ஒரு சின்ன புரட்சியாகவே கருதப்படுகிறது.அமேசான் மகாராணியின் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் செய்தியை இபுக்க்காக வழங்குவதோடு இது வரையான வாழ்த்து செய்திகளையும் படிக்ககூடிய வசதியை தந்துள்ளது.

ஸ்மார்ட் போனில் எஸ் எம் எஸ் வாழ்த்துக்களை படித்து மகிழ்வது போல இபுக் ரீடரில் கிறிஸ்துமஸ் வாழ்த்தை படிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது உற்சாகம் தரக்கூடியது தானே.

Advertisements

2 responses to “இ புக் வடிவில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s