எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி!

புதிய திட்டங்கள் அல்லது கொள்கை முடிவுகளுக்கு எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் போது மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்பது தான் அரசாங்கத்திற்கான சிறந்த வழி. இதற்காக பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கலாம்.அறிக்கை வெளியிடலாம்.அரசு தொலைக்காட்சி அல்லது வானொலியில் உரை நிகழத்தலாம்.

இந்த பட்டியலில் டிவிட்டரையும் சேர்த்து கொள்ளலாம்.சொல்லப்போனால் மற்ற வழிகளை விட டிவிட்டர் மூலம் மக்கள் மன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும்.இதற்கான உதாரணம் தேவை என்றால் அமெரிக்காவில் வரிச்சலுகை தொடர்பான சர்ச்சையில் ஒபாமா அரசு டிவிட்டரை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம்.

அமெரிக்கா சில ஆண்டுகளாகவே பொருளாதார பிரச்னைகளால் திணறிக்கொண்டிருக்கிறது.சரிந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முயலும் அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிட ஒபாமா அரசு முயற்சித்து கொன்டிருக்கிறது.சாமான்ய மக்களுக்கு நிவாரணம் அளிக்க கூடிஅய் வகையிலான திட்டங்களையும் செயல்படுத்த முயன்று வருகிறது.

ஆனால் புதிய திட்டங்களை செயல்படுத்துவது அத்தனை எளிதாக இல்லை.பிரச்னைக்கான தீர்வாக இந்த திட்டங்கள் அமைந்திருப்பதாக எதிர்கட்சி ஒப்புக்கொண்டால் தான் அதற்கு செனெட் ஒப்புதல் கிடைக்கும்.இல்லை என்றால் திண்டாட்டம் தான்.

ஒபாமா அறிவித்த வரிச்சலுகை திட்டத்துக்கு இப்படி தான் பிரதான எதிர்கட்சியான குடியரசு கட்சி முட்டுக்கட்டை போட்டது.இந்த வரிச்சலுகை திட்டத்தின் படி அமெரிக்க ஊழியர்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் சேமிப்பாக அமையும்.ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் என்றால் வாரத்திற்கு 40 டாலர் சேமிப்பு என்று கணக்கு.வெறுத்ட்து போயிருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த சேமிப்பு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் என்பது அரசின் நம்பிக்கை.

ஆனால் எதிர்ப்பாளர்களோ வெறும் 40 டாலர்களால் என்ன நிவாரணம் கிடைத்து விட முடியும் என்று இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்பாளர்களோடு ஒபாமா நிர்வாகத்தினர் தீவிர விவாதம் நடத்தி வருகின்றர்.எதிர்கட்சிகளோடு மல்லுக்கட்டுவது ஒருபுறம் இருக்க இந்த விஷயத்தில் மக்கள் யார் பக்கம் என்பதை உணர்த்துவதே சரியான பதிலடியாக இருக்கும் என்று ஒபாமா ஆலோசகர்கள் நினைத்தனர்.

அதாவது வரிச்சலுகை பயன் தரும் என்று மக்கள் நம்புகின்றனரா என்பதை அறிந்து கொள்ளவும் அதனை எதிர் கட்சிகளுக்கு புரிய வைக்கவும் தீர்மானித்தனர்.

டிவிட்டர் மூலமே மக்களிடம் இந்த கேள்வியை கேட்கவும் முடிவு செய்தனர். உங்களை பொருத்தவரை 40 டாலரின் பொருள் என்ன? எனும் கேள்வியை வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கு மூலம் கேட்டனர்.40 டாலர்களால் என்ன வாங்க எல்லாம் வாங்க முடியும் அல்லது எந்த வகையான பயன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கேள்வி வெள்ளை மாளிகையின் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் முன் வைக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையின் சமூக ஊடக பொறுப்பாளர் மேகான் பிலிப் இதற்கான குறும்பதிவை வெளியிட்டார்.பின்னர் இதே குறும்பதிவு அதிபர் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கு மூலமும் வெளியிடப்பட்டது.

வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கிற்கு 26 லட்சம் பின்தொடர்பாளர்களும் ஒபாமா டிவிட்டர் கணக்கிற்கு ஒர் கோடிக்கும் மேல் பின்தொடர்பாளர்களும் இருக்கின்றனர்.

40 டாலரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை பார்த்ததும் பலரும் அதற்கான தங்கள் பதிலை குறும்பதிவாக வெளியிடத்துவங்கினர்.

40 டாலர் என்பது எனது கணவ்ரின் இரண்டு வார கால மருந்து தேவையை பூர்த்தி செயும் என்று ஒருவர் பதில் அளித்திருந்தார்.இன்னொருவரோ 40 டால்ர் என்பது எங்கள் குடும்பத்துக்கான ஒரு வார கால பட்ஜெட் என்று தெரிவித்திருந்தார்.

மாணவர் ஒருவரோ 40 டாலர் கிடைத்தால் எனது கல்விக்கடனின் சுமைகொஞ்சம் குறையும் என்று எழுதியிருந்தார்.வயதான் பெண்மணி ஒருவர் 40 டாலர் என்பது தனது மாதந்திர மருத்துவ செலவு என தெரிவித்திருந்தார்.

மாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தலாம்,குழந்தைக்கு பால் பவுடர் வாங்கலாம் என்று நடுத்தர அமெரிக்கர்கள் 40 டாலரின் பயனை தங்கள் நிலையில் இருந்து குறும்பதிவாக வெளியிட்டனர்.

மணிக்கு 2 ஆயிரம் குறும்பதிவுகள் என்னும் வேகத்தில் குறும்பதிவுகள் வெளியாயின.விளைவு டிவிட்டரில் 40 டாலர் என்னும் பதம் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது.அதாவது டிவிட்டர் பதிவுக்கடலில் இந்த பதிவுகள் மேலெழுந்து வந்தன.

நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த போக்கை கவனித்து இது பற்றி செய்தி வெளியிடவே இந்த விஷயம் மேலும் பிரபலமானது.

இதனிடையே அரசு தரப்பில் இந்த குறும்பதிவுகள் அனைத்தும் திரட்டப்பட்டு டிவிட்டர் போன்ற சேவைகளில் வெளியாகும் கருத்துக்களை திரட்டி வெளியிட பயன்படும் ஸ்டோரிபை தலத்தின் மூலம் ஒரே இடத்தில் தொகுக்கப்பட்டன.அந்த பதிவுகள் நடுத்தர மக்களின் குரலாக அமைந்திருந்தன.

40 டாலர் சராசரி அமெரிக்கர்கள் வாழ்கையில் என்ன தாக்கத்தை செலுத்தும் என உணர்த்திய அந்த குறும்பதிவுகள் வரிச்சலுகை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல அமைந்திருந்தன.

வரிச்சலுகை பிரச்ச்னையில் அரசுக்கு வெற்றி கிடைக்க இது எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.ஆனால் எதிர்கட்சிக்கு எதிராக அரசுக்கு கிடைத்த தார்மீக வெற்றியாக கருத்தப்படுகிறது.

அதோடு டிவிட்டரை எப்படி எல்லாம் புதிய வழிகளில் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணமாகவும் கருதப்படுகிறது.

இணையதள முகவரி;http://storify.com/whitehouse/what-does-40dollars-mean-to-you

Advertisements

One response to “எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி!

  1. Pingback: எதிர்கட்சிகளுக்கு டிவிட்டர் மூலம் பதிலடி! « Cybersimman’s Blog « valangaisathish·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s