இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் புத்தகங்களை வாசிக்க உதவும் தளங்கள் எவை என்பது தான்?

ஆர்வத்தோடு கேட்கப்படும் இந்த கேள்விக்கு உற்சாகமாக சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது.இந்த தளத்தை சுட்டிக்காட்டிய சிலிக்கான ஷெல்ப் தளத்திற்கு நன்றி.(தமிழில் புத்தகங்கள் தொடர்பான அருமையான வலைப்பதிவு இது)

ஓபன் ரீடிங் புக் என்னும் அந்த இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.

அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன.அரசியல்,இலக்கியம்,உடல் நலம்,இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.

அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா,, அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.

நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்கிறியவர்.

இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி;http://www.openreadingroom.com/

18 responses to “இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

 1. தமிழில் புத்தகங்களை வாசிக்க நல்ல தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல. \\நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன\\ என்ற தகவல் மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்தொகுப்புகள் என்னும் தளத்திலும் நிறைய கதைகள், கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. http://thoguppukal.wordpress.com/

 2. நன்றி நண்பரே….தளம் தான் கேட்டேன்….அதை மிகவும் அருமையாக செய்தியாகவே வெளியிட்டு விட்டீர்கள்…

 3. நன்றி, சிம்மன். உங்கள் பதிவால் பலர் என்னுடைய தளத்துக்கு வந்து பயன் பெற்றுள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து வர வேண்டும் என்பதே என் ஆவா.

  ஒரு சின்ன திருத்தம்: சென்ற மாதம் 8-ம் தேதி தான் எனது தளம் இயங்கத் துவங்கியது. ஓராண்டெல்லாம் ஆகவில்லை. 🙂 (அடித்தள வேலைகள் 3 மாதங்களாக நடந்துகொண்டிருந்தன.)

  • தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.தமிழ்ல் இணையம் செழுமையாக வேண்டும் என்பதே என் விருப்பம்.புதிய தகவல் இருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

   அன்புடன் சிம்மன்

  • மகிழ்ச்சி நண்பரே.தங்கள் தளம் பற்றி எழுத நினைத்திருந்த நேரத்தில் அதனை சுட்டிக்காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

   அன்புடன் சிம்மன்

 4. Good oportunity for me to real the stories by our famous writiers Really I have found the “puthayal” Manyyyyy Manyyyy thanks to Mr Ramesh Chakrapani Sorry I could not /learnt not tamil typing. Other wise I would have written a lot Again thanks after reading all the stories I will comeback.Thanks again Janarthan Tuticorin

 5. Reblogged this on chalkpiece and commented:
  ஓப்பன் ரீடிங் புக் எனும் இத்தளத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாள்களாக நினைத்திருந்தேன். கடைசியில் சைபர்சிம்மன் பிளாக்கிலிருந்து இதை மறுபதிவிடுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s