டிவிட்டரில் இவர் வழி தனி வழி.

டிவிட்டர் எத்தனையோ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது.அவற்றில் மார்க் மெக்கென்சியும் ஒருவர்.கனடாவை சேர்ந்த இவருக்கு டிவிட்டரில் வேறு யாருக்கும் கிடைக்காத பாராட்டும் மகுடமும் கிடைத்தது.

உலகின் அழகான டிவிட்டர் செய்தியை அதாவது குறும்பதிவை வெளியிட்டவர் என்று அடைமொழிக்கு சொந்தக்காராக மெக்கென்சி இருக்கிறார்.டிவிட்டரை அறிந்தவர்களுக்கு இது எத்தனை பெரிய பாராட்டு என்று தெரியும்.

டிவிட்டரில் நொடிக்கு சில மில்லியன் கணக்கில் குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருப்பதாக சொல்கின்றனர்.இந்த குறும் பதிவு கடலில் கவனத்தை ஈர்ப்பது என்பதே பெரிய விஷயம்.அதிலும் சிறந்த குறும்பதிவு என்னும் மகுடத்தை சூட்டி கொள்வது என்றால் தனி திறமை இருந்தால் தான் சாத்தியம்.

மெக்கென்சிக்கு அத்தகய திறமை இருந்த்தால் தான் அவரது குறும்பதிவு உலகிலேயே அழகான குறும்பதிவாக தேர்வு செய்யப்பட்டது.

அதென்ன அழகான குறும்பதிவு என்று கேட்கலாம்.அதைஎப்படி தேர்வு செய்தனர் என்றும் கேட்கலாம்!

சொற்சுவை ,பொருட்சுவை என அனைத்து சுவைகளும் நிரம்பிய கவிதையை போல மொழி நடையின் அடிப்படையில் சிறப்பு மிக்க குறும்பதிவை தேர்வு செய்தனர்.சர்வதேச அளவிலான இலக்கிய திருவிழாவாக கருத்தப்படும் ஹே திருவிழாவின் போது இதற்கான போட்டு அறிவிக்கப்பட்டது.

குறும்பதிவாளர்கள் எல்லாம் இந்த போட்டியில் பங்கேற்று தங்கள் சிறந்த குறும்பதிவை சம்ர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.விழாவுக்கான டிவிட்டர் முகவரியில் குறும்பதிவுகளை சமர்பிக்கலாம் என்றும் தெரிவிக்கிப்பட்டது.

கனடாவை சேர்ந்த மெக்கின்சியும் இந்த போட்டிக்காக ஆர்வத்தோடு தனது குறும்பதிவுகளை சமர்பித்தார்.கனடாவில் அல்பெர்ட்டாவில் வசிக்கும் மெக்கென்சி மார்க்மார்க் என்னும் பெயரில் டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிட்டு வந்தார்.போட்டிக்காக அவர் ஒன்றல்ல இரண்டல்லா மொத்தம் 36 குறும்ப்திவுகளை சமர்பித்திருந்தார்.தனது குறும்பதிவுகளில் மிகச்சிறந்தது என ஒரே ஒரு பதிவை தேர்வு செய்ய முடியாமல் திணறியதால் சிறந்தவை என கருதியவற்றை சம்ர்பித்தார்.

அவற்றில் ஒன்று நடுவரும் டிவிட்டரை பொருத்தவரை நட்சத்திரமுமான நகைச்சுவை நட்கர் ஸ்டீபன் பிரையால் மிகச்சிறந்தது என தேர்வு செய்யப்பட்டது.அதாவது உலகின் அழகான டிவீட்டாக தேர்வானது.

‘நம்மால் மேலும் சிறந்த ஒரு உலகை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.அதற்கு நிறைய பாறையும்,மண்ணும்,நீரும் தேவை தான்… ஆனால் அந்த உலகை எங்கே வைப்பது என்பது தான் பிரச்ச்னை’

இது அந்த பரிசுக்குறிய குறும்பதிவு.

இந்த குறும்பதிவில் கலந்திருந்த அங்கதம் மற்றும் நடைமுறை உண்மையை கவனியுங்கள் எத்தனை அழகாக இருக்கிறது என பிரை பாராட்டியிருந்தார்.

பிரை கூறியது போல ஒரு விஷ்யத்தை தகவல் போல விவரித்து விட்டு அதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவது தான் மெக்கென்சி குறும்பதிவுகளின் தனித்தன்மை.அதே நேரத்தில் ஹைக்கூ கவிதையை நினைவு படுத்துவது போல அவை அமைந்திருக்கும்.

சொல்லப்போனால் இதனை அவர் தனக்கான பாணியாகவே உருவாக்கி வைத்திருக்கிறார்.

டிவிட்டரில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்றால் இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்.உங்கள் குறும்பதிவுகள் பல லட்சங்களில் ஒன்றாக கரைந்து விடாமல் தனித்து நிற்க வேண்டும் என்றால் உங்கள் குரல் தனியே கேட்க வேண்டும்.அதற்கு டிவிட்டரில் ஒருவருக்கென என தனி பாணி அவசியம்.

மெக்கென்சியை பொருத்தவரை ஏதா ஒன்றை கூறத்துவங்கி அதில் ஒரு திருப்பத்தை தருவதை தனது பாணியாக உருவாக்கி கொண்டுள்ளார்.இதை ஒருவித இணைய‌ ஹைகூ என்கிறார் அவர்.அவற்றில் பொதிந்து இருக்கும் நகைச்சுவை கவித்துவமானது என்றும் சொல்லலாம்.அதே நேரத்தில் அவரது குறும் பதிவுகள் பல நேரத்தில் மிகவும் ஆழமான உண்மைகளை சுட்டிக்காட்டக்கூடியவை.

பல நேரங்களில் குறும்பதிவுகள் தனக்கு தானாக தோன்றுவதாகவும் அவர் பெருமையோடு கூறுகிறார்.

மருத்துவரான மெக்கென்சி டிவிட்டரில் தனக்கு என தனி வழியை ஏற்படுத்தி கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் டிவிட்டர் புரியாத புதிராக இருந்ததாக கூறுவது ஆச்சர்யம் தான்.பேஸ்புகின் தீவிர ரசிகனாக இருந்த தான் டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டு அதன் அருகே வந்ததாகவும் எதையுமே சுருக்கமாக சொல்ல வேண்டிய சவாலான தன்மை மெல்ல தன்னை கவர்ந்து இழுத்ததாகவும் சொல்கிறார்.

மெக்கென்சி ஏற்கனவே ஒரு முறை டிவிட்டர் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அவரது டிவிட்டர் திறமைக்காக சான்றால கருதலாம்.

ஒரு முறை மெக்கென்சியின் குறும்பதிவுகளை படிக்க துவங்கிவிட்டால் தொடர்ந்து படிக்க தோன்றும்.மற்றவர்களை போல தனது தினசரி செயல்களையோ அல்லது சுய சாதனைகளையோ பகிர்ந்து கொள்ளாமல் ஒரு புதுமையான நடையில் நகைச்சுவையும்,கேலியும் கிண்டலும் ,தததுவமும் விமர்சன நோக்கமும் கலந்த அழகான குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

————–

http://twitter.com/marcmack

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s