ஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும் இணைந்த தளம் என்பதை புரிந்து கொண்டுவிடலாம்.

அதாவது ஓடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது இந்த தளம்.

ஓடுவது நல்ல உடற்பயிற்சி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஓடுவது உடலுக்கும் சரி உள்ளத்திற்கும் சரி உற்சாகம் தரக்கூடியது.தினமும் ஓடலாம்,வாய்ப்பு கிடைக்கும் போது ஒடலாம்.ஆனால் பிரச்ச்னை என்றால் தனியே ஒடும் போது அதற்கான ஊக்கமோ உற்சாகமோ இல்லாமல் போகலாம்.அதைவிட நண்பர்களோடு சேர்ந்து ஓடினால் உற்சாகமாக‌ இருக்கும்.

ஆனால் ஓடுவதற்கான நண்பர்களை திரட்டுவது எப்படி?ஓட வாருங்கள் என அழைத்தால் நண்பர்கள் நம்மை கண்டாலே ஓடத்துவங்கலாம்.ஓட்டத்தின் அருமையை புரிந்தவர்கள் என்றால் பிரச்சனை இல்லை.அதாவது ஒத்த க‌ருத்துள்ள‌வர்கள் சந்தித்து பேசிக்கொள்வது போல ஓட்டம் தொடர்பாக ஒத்து போகிற‌வர்கள் இணைந்து ஓடலாம்.

ஆனால் இத்தகைய நண்பர்களை தேடுவது எப்படி?

இப்படி சேர்ந்து ஓடுவதற்கான நண்பர்களை தேடித்தருவது தான் டிவிட்ரன் தளத்தின் நோக்கம்.அப்படியே ஓடுவத‌ன் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ளவும் உதவுகிற‌து.

அதாவது இந்த தளம் ஓட்டத்தில் ஆர்வம் கொண்டவர்களின் சங்கமாமாக‌ விளங்குகிற‌து.டிவிட்டரோட்டத்தை உருவாக்கி கொள்ளவதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிற‌து.

டிவிட்டரோட்டம் என்றால் சேர்ந்தோடுவது.ஓடுவதற்கான நண்பர்கள் தேவை என நினைப்பவ‌ர்கள் இந்த தளத்தில் டிவிட்டரோட்டம் நடைபெற உள்ள நாள் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட்டு தங்களுக்கான டிவிட்டரோட்டத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.ஓட்டத்தின் தூரமும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த டிவிட்டரோட்டம் பற்றிய தகவல் அவர்களின் டிவிட்டர் பின் தொடர்பாள‌ர்கள் மற்றும் தளத்தின் உறுப்பினர்களூக்கு தெரிவிக்கப்படும்.ஆர்வம் உள்ளவர்கள் இதில் இணைய சம்மதம் தெரிவிக்கலாம்.நானும் இனைய விரும்புகிறேன் என்னும் இணைப்பில் கிளிக் செய்து சம்மதம் தெரிவிக்கலாம்.

அதன் பிறகு ஒப்புக்கொள்ளப்பட்ட நாளில் சந்தித்து கொண்டு ஒன்றாக் ஓடி மகிழலாம்.

உறுப்பினர்கள் உருவாக்கும் டிவிட்டரோட்டங்களும் முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடப்பட்டிருக்கும்.அதை பார்த்து ஒருவரது பேட்டையில் திட்டமிடப்பட்டுள்ள ஓட்டத்தை தெரிந்து கொண்டு ஓட்டத்தில் ஐக்கியம் ஆகலாம்.

ஒருவர் தனது டிவிட்டர் கணக்கு மூலமே ஓட வாரீங்களா என்று கேட்கலாம் என்றாலும் இந்த தளத்தின் பரந்து விரிந்த தன்மை ஏற்படுத்தி தரும் பலன் குறிப்பிடத்தக்கது.

உலக‌லாவிய தளமாக இது செய‌ல்படுகிற‌து.

இதே போலவே டிவிட்டர் மூலம் திரண்டு ஒன்றாக மதிய உணவு சாப்பிட உதவும் ‘டுவஞ்ச்’ என்ற தளமும் இருக்கிறது.

டுவஞ்ச் என்றால் டிவிட்டர் மூலம் லஞ்சுக்கு சந்திப்பதாகும்.எந்தவித திட்டமிடலும் இல்லாமல் டிவிட்டர் மூலம் ஏதாவது ஒரு ரெஸ்டாரன்டில் சந்தித்து மதிய உணவு சாப்பிட்டு மகிழ்வது தான் ‘டுவெஞ்ச்’ .டிவிட்டர் ஸ்டைலில் மதிய உனவு இது என்கிற‌து இந்த தளம்.

உறுப்பினர்கள் நாளையும் ரெஸ்டாரன்டையும் குறிப்பிட்டு டுவெஞ்சை ஏற்பாடு செய்து மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.ஏற்பவர்கள் ஒன்றாக சாப்பிடலாம்.சாப்பிடும் போதே கருத்து பரிமாற்றத்தின் மூலம் நட்பு வளர்க்கலாம்,புதிய நட்பு பெறலாம்.

மேலும் டிவிட்டர் வழி சந்திப்பு என்பதே ஒரு சுவார‌ஸ்யம் தானே.

இப்படி டிவிட்டர் வழியே மதிய உண‌வுக்காக கூடுவது என்ப‌தும் பிரபலமாகவே இருக்கிற‌து.அதை அழகாக ஒருங்கிணைக்கிறது இந்த தளம்.இன்னொரு கூடுதல் தகவல் இந்த தள‌மே தங்களுக்கு ஊக்கம் தந்தது என்கிற‌து டிவிட்ரன் தளம்.

இணையதள முகவரி;http://twitrun.com/

http://twunch.be/

Advertisements

3 responses to “ஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.

  1. ஐந்தாறு நாட்களில் 70க்கும் மேற்பட்ட twitter செய்திக் குவியல்கள் பதிந்துள்ளேன். அனைத்திலும் தகவல்கள் உள்ளன. ஆனால் பிறர் எப்படி படிப்பர்? வழி சொல்க. 9444297788 தங்க்கள் நட்புத் தேவைச.இராமசாமி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s