டிவிட்டருக்கு போட்டியாக ஒரு சூப்பர் சேவை.

டிவிட்டருக்கு போட்டியாக சொல்லகூடிய இணையதளங்கள் அநேகம் இருந்தாலும் அவை எல்லாமே டிவிட்டர் நகல் என்று அலட்சியமாக புறந்தள்ளி விடக்கூடியவை தான்.இதற்கு மாறாக டிவிட்டர் போன்ற சேவை ஆனால் டிவிட்டரைவிட மேம்பட்டது அல்லது மாறுபட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தகூடிய சேவை அரிதினும் அரிது தான்.அத்தகைய அரிதான சேவையாக தான் சப்ஜாட் அறிமுகமாகியுள்ளது.

சப்ஜாட்டும் டிவிட்டர் போன்றது தான்,ஆனால் டிவிடரில் இருந்து அழகான சின்ன மாற்றத்தை கொன்டுள்ளது.இந்த மாற்றமே சப்ஜாட்டை பயன்படுத்தி பார்க்கலாமே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

அந்த மாற்றம் சப்ஜாட்டில் நீங்கள் நபர்களை பின்தொடராமல் அவர்களின் தலைப்புகளை பின்தொடர்லாம் என்பதே.அதாவது அவர்களுக்கும் உங்களுக்கும் ஆர்வம் அளிக்கக்கூடிய தலைப்புகள்.

உதாரனத்திற்கு உங்களுக்கு தொழில்நுட்பம் அல்லது புத்தகங்களில் ஆர்வம் அதிகம் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் இந்த இரண்டு தலைப்பிலான ஜாட்களை(ட்வீட்கள் போல இங்கே ஜாட்கள்) மட்டும் பின் தொடரலாம்.

பதிவிடும் போதே அந்த பதிவின் வகையை குறிப்பிட்ட தலைப்பின் கிழ் குறிப்பிடும் வசதியை சப்ஜாட் வழங்குகிறது.எந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ள விருப்பமோ அதனை டைப் செய்த பின்னர் (டிவிட்டர் போல் 140 எழுத்து கட்டுப்பாடு கிடையாது,250 எழுத்து வரை வெளுத்து வாங்கலாம்)வகைகளிக்கான பகுதியை கிளிக் செய்து பொருத்தமான தலைப்பை
தர வேண்டும்.இசை தொடர்பான பகிர்வு என்ரால் இசை என குறிப்பிடலாம்.கிரிக்கெட் என்றால் அதனை குறிப்பிடலாம்.அதன் பிறகு ஜாட் என்ற பகுதியை கிளிக் செய்தால் அந்த பதிவு வெளியிடப்பட்டுவிடும்.

பொத்தம் பொதுவான பதிவாக வரிசையாக வெளியாகாமல் அந்த பதிவு குறிப்பிட்ட தலைப்பின் அடையாளத்தோடு வெளியாகி இருக்கும்.

ஆக நண்பர்கள் ஒருவருடைய மொத்த பதிவுகளையும் பின் தொடராமல் அவர்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்பிலான பதிவுகளை மட்டும் பின்தொடரலாம்.

இந்த வகையில் தேவையில்லாத பதிவுகளை எல்லாம் படிக்க வேண்டிய அவசியம் இல்லமால் விருப்பமான பதிவுகளை மட்டுமே படிக்கலாம்.

டிவிட்டரின் அநேக பயன்களை மீறி அதில் குவியும் உபயோகமில்லா பதிவுகள் அலுப்பை தரக்கூடும்.டிவிட்டரில் ஒரு சிலரை எப்போதாவது அவர பகிர்ந்து கொள்ளும் நல்ல தகவலுக்காகவே பின் தொடர்ந்து கொன்டிருப்போம்.மற்றபடி அவரது தினசரி பதிவுகள் பயனில்லாத வெற்று தகவல்களாகவே இருக்கும்.ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை,யாருக்கு எந்த தலைப்பு விருப்பமோ அதனை மட்டும் படித்து கொள்ளலாம்.

புத்தக பிரியர்கள் புத்தகம் அல்லது இலக்கியம் என்னும் தலைப்பிலான பதிவுகளை மட்டுமே பின் தொடரலாம்.கருத்து சொல்லும் வசதியும் இருப்பதால் ஒரு பதிவை படித்து விட்டு கருத்து தெரிவிதால் அது அழகான உரையாடலுக்கும் வழி வகுக்கும்.மற்றவர்களும் சேர்ந்து கொண்டால் கலந்துரையாடலாகவும் மாறலாம்.

நண்பர்களின் தலைப்புகளை பின் தொடர்வதோடு இந்த தளத்தில் உள்ள தலைப்புகளை அலசிப்பார்த்து அதில் பிடித்தமானதை கிளிக் செய்து அதிலிருந்தும் புதிய நண்பர்களை பின் தொடரலாம்.

இணையத்தில் வகைப்படுத்துவது(டேக்) எத்தனை அருமையானது என்பதை அறிந்திருப்பவர்களுக்கு சப்ஜாட்டின் இந்த வகிப்படுத்தும் அம்சம் எத்தனை சிறப்பானது என்று புரியும்.

ஒரு செய்தி அல்லது கட்டுரை அதற்குறிய வகைச்சொல்லோடு அடையாள படுத்தப்படும் போது அவை இனையக்கடலில் கலந்து காணாமல் போய்விடாமல்
வகை படகுகளாக மேலே இழுத்து வர செய்யப்படுகின்ரன.

அந்த வகையில் இந்த தளம் குறும்பதிவுகளை வகைப்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் நண்பர்கள் பின் தொடர் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

அது மட்டும் அல்ல மனதிற்கு வந்தவற்றை பதிவிடுவதை காட்டிலும் வகைப்படுத்தி பதிவுடுவது நாம் பகிர்ந்து கொள்ளும் தகவலை மேலும் பட்டை தீட்டிக்கொள்ளவும் உதவும்.

வகைப்படுத்துவது என்பது டிவிட்டரில் உள்ள ஹாஷ்டேக் போன்றது தானே என்று கேட்கலாம்.ஆனால் அதனைவிட இது மிகவும் மேம்பட்டது என்று சப்ஜாட்டை பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே புரியும்.

டிவிட்டரில் உள்ளது போலவே பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கை,பதில் அளிப்பவர்களை அறியும் வசதி போன்ற அம்சங்கள் உள்ளன.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலமே இதில் உறுப்பினாராகலாம் என்பதோடு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கிலும் ஜாட் பதிவுகளை வெளியிடலாம்.

டிவிட்டரின் வீச்சு இதற்கு உண்டாக காலம் ஆகலாம்,ஆனால் டிவிட்டரில் உள்ள இரைச்சலும் சத்தமும் இல்லமால் தெளிவாக இருப்பது இதன் பலம்.அதே போல டிவிட்டரில் பெரும்பாலான் பதிவுகள் தனிமனித சுய புராணமாகவே இருக்கலாம்.இதிலோ விஷயத்திற்கு தான் முதலிடம்.

இணையதள முகவரி;http://subjot.com/signin

3 responses to “டிவிட்டருக்கு போட்டியாக ஒரு சூப்பர் சேவை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s