புன்னகைக்க ஒரு இணையதளம்.

உங்கள் கம்ப்யூட்டர் முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா?

தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் இணையதளம் அதை தான் செய்ய சொல்கிறது.

உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளிக் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம்.இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்து விட்டு அழகாக புன்னகைத்தபடி போஸ் கொடுத்தால் உங்கள் புன்னகை இந்த தளத்தின் மகிழ்ச்சி பூங்காவில் மேலும் ஒரு புன்னகை மலராக சேர்ந்துவிடும்.

இந்த தளத்தின் நோக்கமும் இது தான்.அதாவது உலகை மகிழ்ச்சியாக வைத்திருப்பது.உயர்வான ஆனால் இயலாத லட்சியம் என்பதால் மகிழ்ச்சியின் அடையாளமான புன்னகையை சேகரித்து வைக்கும் பணியை மட்டும் இந்த தளம் செய்து வருகிறது.

எல்லோரும் புன்னகைத்தபடி காட்சி தரும் இருப்பிடமாக விளங்கும் இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் புன்னகை பூக்களாக சிரிக்கின்றன.இது வரை மொத்தம் 2 ஆயிரம் பேருக்கு மேல் இந்த தளத்தில் தங்கள் புன்னகை முகங்களை சமர்பித்துள்ளனர்.வெப்கேம் வைத்திருப்பவர்கள் தங்கள் புன்னகையையும் இங்கே சமர்பிக்கலாம்.

காதலனை பார்த்து முகம் மலரும் காதலியின் மென்மையான புன்னகையில் துவங்கி பி எஸ் வீரப்பாவின் அட்டகாசமான சிரிப்பு வரை உங்கள் விருப்பம் போல எப்படி வேண்டுனாலும் சிரிக்கலாம்.முகத்தில் ஆனந்ததை வெளீப்படுத்த வேண்டும்.அது தானே இந்த தளத்தின் நோக்கம்!.

தினம் தினம் இந்த தளத்திற்கு விஜயம் செய்து உலகம் முழுவதும் பதிவாகும் சிரித்த முகங்களை பார்த்து மகிழலாம்.மலர்ந்த முகம் தானாக ஊக்கத்தை தரக்கூடியது தானே.

ஆக புன்னகை பரவட்டும்.

நிற்ல சிரித்த முகத்துடன் இருப்பதன் மகத்துவம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.இல்லை என்றால் விக்கிஹவ் தளத்தில் பாருங்கள்,சிரிப்பது எப்படி என விளக்கும் கட்டுரை இருக்கிறது.

சிரிப்பதன் பயனனை அனுபவியுங்கள் என்று சொல்லும் இந்த கட்டுரை உண்மையாக சிரிப்பது எப்படி,சங்கடமில்லாமல் சிரிப்பது எப்படி? கண்களால் சிரிப்பது எப்படி என்றெல்லாம் வழி காட்டுகிறது.

சிரிக்க பயிற்சி எடுத்து கொள்ளவும் வழிகாட்டுகிறது.ஆம் சிரித்து பழகவும் பயிற்சி தேவை.ஒரு சில உம்மாணமூஞ்சிகளுக்கு இன்னும் அதிகமாகவே தேவை.

சிரிப்பதன் பலன் பற்றி மற்றொரு அருமையான கட்டுரை ஸ்பிரிங் இணையதளத்தில் இருக்கிறது.புன்னகை என்பது மகிழ்ச்சியின் அடையாளம் மட்டும் அல்ல என்னும் இந்த கட்டுரை சிரிப்பதால் ஏற்படும் பத்து பலன்களை பட்டியலிட்டு விளக்குகிறது.அதில் ஒன்று சிரிப்பது மற்றவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வைக்கிறது என்பதாக உள்ளது.

பாலுணர்வின் புன்னகை உள்ளுனர்வின் புன்னகை என்றெல்லாம் சுட்பமாக உளவியல் நோக்கில் தகவல் தருகிறது இந்த கட்டுரை.சிரித்தால் பாதி உலகம் உங்களை பார்த்து சிரிக்கும் என்ற ஊக்கத்தோடு கட்டுரை முடிகிறது.

இன்னும் புன்னகை கலையை கற்க விரும்பினால் திங் சிம்பில் நவ் இணையதளம் சிரிக்கும் கலை கட்ட்டுரை மூலம் புன்னகை கலையை நுட்பமாக கற்றுத்துருகிறது.முழுவதுமாக சிரிப்பது எப்படி,அறிமுகம் இல்லாதவர் போல சிரிப்பது எப்படி,வேலைக்கு நடுவே சிரிப்பது எப்படி என்றெல்லாம் பயிற்சி தருகிறது இந்த தளம்.

வாழ்க்கை புன்னகைமயமாக இருப்பதற்கான குறிப்புகளையும் வழங்குகிறது.

புன்னகைக்க,புன்னகையை பார்த்து ரசிக்க:http://www.theworldsmiling.com/

http://thinksimplenow.com/happiness/the-art-of-smiling/

http://www.wikihow.com/Smile

http://www.spring.org.uk/2011/06/10-hidden-benefits-of-smiling.php

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s