இரண்டு லட்சம் வால்பேப்பர்களோடு அழைக்கும் இணையதளம்.

டெஸ்க்டாப்பின் பின்னணியில் தோன்றும் அழகான வால்பேப்பர்களை நினைத்த நேரத்தில் மாற்றிக்கொள்ளலாம் தான்.இது மிகவும் சுலபமானது.ஆனால் மனதுக்கு பிடித்தமான வடிவமைப்பில் வால்ப்பேப்பர்கள் கிடைப்பது அத்தனை சுலபமல்ல!.

காரணம் எப்போதுமே நமது டெஸ்க்டாப்பில் இருப்பதைவிட நண்பர்களின் டெஸ்க்டாப்பை அலங்கரித்து கொண்டிருக்கும் வால்பேப்பர் அழகாக இருப்பது போல தோன்றும்.அது மட்டும் அல்ல எந்த வால்பேப்ப்ர் என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டிருந்தால் அலுப்பாக தான் இருக்கும்.

வால்பேப்பர்களை இன்டெர்நெட்டில் தேடிக்கொள்ளலாம் தான்.வால்பேப்பருக்கு என்றே பல இணையதளங்களும் இல்லாமல் இல்லை.ஆனால் பெரும்பாலான வால்பேப்பர் தளங்கள் ஒரே மாதிரியான தோற்றத்தில் அலுப்பூட்டக்கூடியதாகவே இருக்கின்றன.அவற்றில் தேடுவதே அயற்சியை தரலாம்.

ஆனால் வால்ப்பேப்பர்களுக்கான வால்பூப்பர் இணையதளம் அவ்வாறு இல்லாமல் கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.இந்த தளத்தை வால்பேப்பர்களுக்கான தேடியந்திரம் என்றோ அல்லது வால்பேப்பர்களுக்கான வலைவாசல் என்றோ சொல்லலாம்.

விருப்பமான வால்பேப்பரை இந்த தளத்தில் குறிச்சொல் மூலமாக தேடிக்கொள்ளலாம்.எந்த வகையான வால்பேப்பர் தேவையோ அதற்கான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம் என்பதோடு வால்பேப்பரின் அளவு மற்றும் அதன் தோற்றத்தின் துல்லியம் (ரெஸல்யூஷன்)ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடும் வசதி இருப்பது நல்ல விஷயம்.எந்த வண்ணம் தேவை என்றும் தேடிக்கொள்ளலாம்.

டெஸ்க்டாப்பிற்கு மட்டும் அல்லாது செல்போன் மற்றும் ஸ்மார்ட்போனுக்கான வால்பேப்பரையும் தேடலாம் என்பது மேலும் சிறப்பானது.

இவற்றைத்தவிர முகப்பு பக்கத்திலேயே அழகான் வால்பேப்பர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றை பார்த்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.தவிர புதியவை ,மிகவும் பிரபலமானவை என்ற தலைப்பிலும் வால்பேப்பர்களை காணலாம்.

மொத்தம இரண்டு லட்சத்திற்கு மேலான அழகிய வால்ப்பேப்பர்களோடு அழைக்கிறது இந்த இணையதளம்.இனி நீங்களும் உங்கள் வால்பேப்பரை பார்த்து நண்பர்களை வியக்க வைத்து எங்கே கிடைத்தது என கேட்க வைக்கலாம்.

வால்பேப்பர் அழகாக இருக்க வேண்டும் எனபது ஒரு விஷயம் ஆனால் அந்த அழகு கவனத்தை திசை திருப்பாததாகமிருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்.அலங்காரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வண்ணமயமான வால்பேப்பரை தேர்வு செய்தால் அதுவே உருத்தலாகவும் அமைந்து விடுவதாக சிலர் கருதலாம்.

தவிர எளிமையே அழகு என்ற கருத்துப்படி பார்த்தால் வால்பேப்பர் ரொம்பவும் வண்ணமயமாக இல்லாமல் நேர்த்தியானதாக இருந்தால் போதும் என்ற கருதுபவர்களும் இருக்கலாம்.அலங்கார தோற்றத்தைவிட மாடர்ன் ஆர்ட் போல இருந்தால் நன்றாக இருக்க வேண்டும் என்றும் கருதுபவர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய வகையில் சிம்பிலான வால்பேப்பர்களை தருகிறது சிம்பில் டெஸ்க்டாப்ஸ் இணையதளம்.

கவனத்தை சிதறடிக்காத,அதே நேரத்தில் அலுப்பூட்டும் தோற்றமாகவும் இராத அழகான வால்பேபர்களின் தொகுப்பாக இந்த தளம் விளங்குகிறது.

இதில் உள்ள வால்பேப்பர்களை பார்க்கும் போதே அவற்றின் எளிமையும் கலை நேர்த்தியும் வியப்பில் ஆழ்த்திவிடும்.வேறும் புகைப்பட தோற்றங்களை விட படைபாட்ற்றல் மிக்க எளிய தோற்றங்கள் எத்தனை அற்புதமான்வை என்பதை இவை உணர்த்துகின்றன.

கைப்பட எழுத்தும் வாழ்த்துக்கு தனி மதிப்பு இருப்பது போல இங்கு உள்ள வால்பேப்பர்கள் எல்லாமே வாட்சன் என்பவரால் கைப்பட தேர்வு செய்யப்பட்டவை.

அதாவது ஓவியர்கள் போல அழகான டெஸ்க்டாப் வால்பேப்பர்களை உருவாக்கும் கலைஞர்கள் எல்லாம் இருக்கின்றனர்.அத்தகை கலைஞர்கள் உருவாக்கிய வால்பேப்பர் படைப்புகளை டாம் வாட்சன் என்பவர் இங்கே தொகுத்துள்ளார்.எல்லாமே இலவசம் தான்.ஆனால் வணிக நோக்கத்திற்கான பயன்பாட்டிற்கானவை அல்ல.

இணையதல முகவரி;http://wallpoper.com/

http://simpledesktops.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s