டிவிட்டரில் பென்குவின் புத்தக குழு;புதுமையான முயற்சி.

டிவிட்டரை எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.சொல்லப்போனால் டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புகழ்பெற்ற பென்குவின் பதிப்பகம் டிவிட்டர் சார்ந்த புதுமையான‌ முயற்சியில் ஈடுபட்டுள்ளது.டிவிட்டரில் புத்தக வாசிப்பு குழுவை துவக்குவதாக பென்குவின்(அமெரிக்க பிரிவு) அறிவித்துள்ளது

பதிப்பக உலகில் வாசிப்பு குழுக்கள் மிகவும் பிரபலமானவை.ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட புத்தகத்தை தேர்வு செய்து அதற்கான வாசிப்பு அரங்கையும் உண்டாக்கி வாசகர்களை அழைத்து அந்த புத்தகம் தொட‌ர்பான விவாத‌த்தில் பங்கேற்க வைப்பது இந்த வாசிப்பு குழுக்களின் நோக்கம்.இந்த குழுக்கள் மூலம் வாச்கர்கள் புதிய புத்தகங்களை வாசிக்க செய்ய முடியும்.வெறும் விற்பனை நோக்கத்தோடு நின்றுவிடாமல் புத்தக வாசிப்பு சார்ந்த அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள செய்து புரிதலை ஏற்படுத்தவும் இந்த குழுக்கள் கைகொடுக்கின்ற‌ன.

பல பதிப்பகங்கள் எழுத்தாளர்களை அழைத்து வந்து புத்தக வாசிப்பு மற்றும் விவாதத்திற்கு ஏற்பாடு செய்து எழுத்தாளர் வாசக‌ர்கள் இடையே உற‌வையும் வலுப்படுத்துவதுண்டு.

பெரும்பாலும் புத்தக விற்பனை நிலையங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இப்போது பென்குவின் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த வாசிப்பு குழுவை டிவிட்டர் உலகிற்கு கொண்டு வந்துள்ளது.

பென்குவின் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்றால் மாதம் ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வாசிப்புக்காக புத்தகமாக அறிவிக்கும்.வாசக‌ர்கள் அந்த புத்தகத்தை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பென்குவின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.ஒரே பொருள் சார்ந்த கருத்துக்களை திரட்ட உதவும் டிவிட்டர் உலக் வழக்க‍ப்படி வாசகர்கள் தங்கள் குறும்பதிவுகளை #ரீட்பென்குவின் என்னும் ஹாஷ்டேக் அடையாளத்தோடு பதிவிட வேண்டும்.

மற்ற வாசக‌ர்களும் இந்த பதிவுகளை பின்தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்கலாம்.அவர்களும் குறும்ப‌திவிடலாம்.இந்த விவாத்ததை வழி நடத்தும் வகையில் பென்குவின் சார்பில் புத்தகம் பற்றிய கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.

மாத முடிவில் புத்தகத்தின் எழுத்தாளரும் விருந்தினாரக அழைக்கப்பட்டு வாச‌கர்களோடு அவரும் உரையாடுவார்.டிவிட்டர் பதிவுகள் வழியே தான்!

வாசக்ர்கள் கேட்கும் டிவிட்டர் கேள்விகளுக்கு எழுத்தாளர் டிவிட்டர் வழியே பதில்களை தருவார்.

இந்த வாசிப்பு குழுவின் துவக்கமாக எலினார் பிரவுன் என்னும் எழுத்தாளர் எழுதிய தி வயர்டு சிஸ்டர்ஸ் என்னும் புத்தகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அவரது புத்தகம் பற்றி குறும்பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.வாசகர் பலரும் இத‌னை வரவேற்றுள்ளனர்.

புத்தகங்கள் பற்றி மோசமான அவதூறான கருத்துக்களை மட்டும் தவிர்க்குமாறு பென்குவின் கேட்டுக்கொண்டுள்ளது.

இலக்கிய உலகில் புதிய முயற்சி தான்.நிச்சயம் எழுத்தாலர் மார்கரெட் அட்வுட் இந்த முயற்சியை மனதார பாராட்டி வரவேற்பார்.ஏன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நம்மூர் பதிப்பகங்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபடலாம்.குறிப்பாக கிழக்கு,உயிர்மை போன்ற இணைய பரிட்சய‌ம் மிக்க பதிப்பகங்கள் இதனை முன்னெடுக்கலாம்.

பென்குவின் டிவிட்டர் முகவரி;https://twitter.com/PenguinUSA

2 responses to “டிவிட்டரில் பென்குவின் புத்தக குழு;புதுமையான முயற்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s