இண்டெர்நெட் கால காதல்.

காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது.

ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது.

வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது.

நீ பாதி நான் பாதி என்றெலாம் சொல்வது அந்த காலம் இந்த காலத்தில் காதலர்கள் சொலவதெல்லாம் உன் பாஸ்வேர்டும் ஒன்று என பாஸ்வேர்டும் ஒன்று என்பதாக தான இருக்கிறது.

கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான் இது.இணைய உலகின் சேவைகளுக்கான பூட்டு சாவியாக கருதப்படும் பாஸ்வேர்டு அவற்றின் தன்மைக்கேற்ப அந்தரங்கமானவை.பாஸ்வேர்டை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது இண்டெர்நெட் யுகத்தின் எழுதப்படாத விதியும் கூட.பாஸ்வேர்ட் வேறு யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இணைய உலகில் எலோருக்கும் இருக்கிறது.

பாஸ்வேர்டு பகிர்ந்ங்கமாவதால் பலவித ஆபத்துகளும் ஏற்படலாம்.ஆனால் இவை எல்லாவற்ரையும் மீறி டிஜிட்டல் யுகத்தின் காதலர்கள் தங்களது பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளவும் ,முடிந்தால் இருவரும் ஒரே பாஸ்வேர்டையும் வைத்திருக்க விரும்புகின்றனர் தெரியுமா என்று கேட்கிறது நியுயார்க்டைம்ஸ் கட்டுரை.

பாஸ்வேர்டு பகிர்வு என்பது எப்படி இந்த காலத்து காதல் அடையாளமாக உருவாகியிருக்கிறது என விவரிக்கும் அந்த கட்டுரை சுவாரஸ்யமான பல தகவல்களை தருகிறது.அவை சிந்திக்கவும் வைக்கின்றன.

பாஸ்வேர்டு அந்தரங்கமானவை தான்.ஆனால் காதலர்களுக்கு இடையே எதற்கு அந்தரங்கம்.இருவரும் ஓருயிர் எனபது உண்மையானால் பாஸ்வேர்டில் என்ன ரகசியம்?இந்த என பாஸ்வேர்டு என்று கொடுத்து விடுவது தானே காதலுக்கு மரியாதை என்று இந்த கால காதலர்கள் பலரும் கருதுகின்றனர்.

காதலில் ஒரு நெருக்கமும் நம்பகத்தன்மையும் வந்த பிறகு ஒரே ஸ்டிராவில் குளிர்பானம் குடிப்பது,ஒன்றாக கைகோர்த்தப்டி நடந்து செல்வது போன்றவை நிகழ்வது போலவே பாஸ்வேர்டை இருவரும் பகிர்ந்து கொள்வதும் வெகு இயல்பாக நிகழ்ந்து வருகிறது.

அது தான் பல நவீன காதலர்கள் இந்தா என இமெயில் பாஸ்வேர்டு என்றும் இது தான் என் இமெயில் பாஸ்வேர்டு என்றும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கின்றனர்.

அமெரிக்காவில் இப்படி பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் 30 சதவீத காதலர்களிடம் இருப்பாதாக தெரியவந்துள்ளது.

அது மட்டும் அல்ல யுவன்களும் யுவதிகளும் இதை ஒரு காதல் மைல்கல்லாகவே கருதுவதாக கொள்ளலாம்.யாருமே எடுத்த எடுப்பிலேயே பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதில்லை.ஆனால் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ள முடியும் என்றால் காதல அந்த அளவுக்கு நெருக்கமாகிவிட்டதாக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டனர் என்று சொல்வது நண்பர்கள் வட்டத்தில் காதலின் நெருக்கத்துக்கான சான்றிதழாகவும் பாராட்டாகவும் அமைந்து விடுகிறது.

காதலனோ காதலியோ ஒருவர் மற்றவருக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கும் நிலையிலேயே ஒரே பாஸ்வேர்டுக்கு மாறுகின்றனர்.அவனி(ளி)டம் இருந்து மறைக்க என்னிடம் எதுவும் இல்லை என்று கட்டதிலேயே காதலர்கள் இந்த முடிவுக்கு வருவதால் இந்த பகிர்வு அவர்களுக்கும் ஒரு காதல் திருப்தியை கொடுக்கிறது.

இவ்வளவு ஏன் ஒரு அமெரிக்க காதல் ஜோடி ஐ லவ் கெவின் என்றும் ஐ லவ் அலெ என்றும் பரஸ்பரம் தங்கள் பெயரை கொண்டு பாஸ்வேர்டை உருவாக்கி கொண்டுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.அதாவது பாஸ்வேர்டு முலமே காதலை பறைசாற்றி மகிழ்ந்துள்ளது.

இதே போல இருவரும் தங்கள் பெயர்களை இணைத்தே ஒரே பாஸ்வேர்டை அமைத்து கொள்ளலாம்.அதுவும் காதல் நெருக்கம் தான்!

எல்லோரும் இப்படி இருப்பதாக சொல்ல முடியாது.அந்தரங்கத்தை மதிப்பவர்கள் தனித்தனி பாஸ்வேர்டே சரி என நினைக்கலாம்.ஒருவர் இமெயில் கணக்கில் அல்லது பேஸ்புக பக்கத்தில் மூக்கை நுழைக்காமல் கன்னியம் காக்கலாம்.

ஆனால் இன்னும் சிலரோ என்னிடமே பாஸ்வேர்டை மறைக்கிறாயா என கோபம் கொண்டு பாஸ்வேர்டு மீது உரிமை கொண்டாலாம்.நீயும் நானும் ஒன்று என்றால் பாஸ்வேர்டில் ஏன் பிரிவினை என்று கேட்கலாம்.

எனவே பாஸ்வேர்டை பகிர்வது சிலருக்கு காதல் கட்டாயமாகவும் மாறலாம்.இன்னும் சிலருக்கோ அதுவே காதல் இன்பமாகவும் மாறலாம்.குறிப்பாக காதல் வீதியில் திரிந்து விட்டு கல்யாண வீட்டிற்கு வருபவர்கள் இனி ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்த முடிவு செய்து அன்யோன்யத்தை உறுதி செய்து கொள்ளலாம்.அல்லது கணவன் மனையிவான பிறகு முதல் வேலையாக ஒரே பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம்.

திருமணமான ஜோடிகளில் பலர் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டு வருவதோடு அது குறித்து மகிழ்ச்சி கொள்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆக இணைய யுகத்தில் பாஸ்வேர்டுக்கு காதல் அடையாளம் என்னும் கூடுதல் பயனும் உண்டாகியிருக்கிறது.

ஆனால் பாஸ்வேர்டு பகிர்வு என்பது ரிஸ்கானது தான்.ஒன்றாக இருக்கும் போது பாஸ்வேர்டை கொடுத்துவிட்டு பின்னர் காதல் கசந்து பிரிய நேர்ந்தால் காதலனோ காதலியோ பாஸ்வேர்டை கொண்டு பழி வாங்கும் வாய்ப்பு உள்ளது.

இமெயிலில் உள்ள அந்தரங்கமான விஷயங்களை அல்லது பேஸ்புக் சங்கதிகளை பகிரங்கமாக்கி அவதூறு ஏற்படுத்தலாம்.பாஸ்வேர்டை மாற்றிவிடலாம் என்றாலும் அதற்கு முன் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இத்தகைய நிலை ஏற்படாமல் தவிர்க்க பாஸ்வேர்டு குறித்து ஆலோசனை எல்லாம் கூறத்துவங்கியுள்ளனர்.ஆக பாஸ்வேர்டு நிர்வாகம் என்பது இனியும் கம்புயூட்டர் மட்டும் சார்ந்ததல்ல;அது காதல் சார்ந்ததும் கூட!.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s