புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்

உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் மேலும் ஒன்றாக மன்ச் மீல்ஸ் சேர்ந்திருக்கிறது.

உணவு மூலம் நட்பு வளர்ப்பது,நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட ஏற்பாடு செய்து கொள்வது ஆகிய இரண்டையும் சாத்தியமாக்கும் இந்த வகை தளங்களில் புதியதாக மேலும் ஒன்று தேவையா என்று தோன்றலாம்.வெட்னஸ்டே,கிரப்வித் அஸ் போன்ற தளங்கள் எல்லாம் மதிய உணவை சேர்ந்டு சாப்பிடுவதற்கான ஏற்பாட்டை இணையம் மூலம் செய்து கொள்வதன் வாயிலாக புதிய தொடர்புகளை ஏற்படுத்திகொள்ள உதவுகின்றன.அப்படியிருக்க இதே போன்ற இன்னொரு இணையதளம் என்ன பெரிதாக செய்துவிடப்போகிறது என்ர அலுப்பு இயல்பானதே என்றாலும் மன்ச் மீல்ஸ் இரண்டும் விஷயங்களில் கவனத்தை ஈர்க்கிறது.

முதலில் இது (சு)தேசி இணையதளம்.அதாவது இந்தியாவையும் இந்தியர்களையும் மையமாக கொண்ட தளம்.எனவே சென்னையிலும் ,பெங்களுரிலும் நண்பர்களோடு விருந்து சாப்பிட இதனை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக இந்த தளம் உணவு சார்ந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி தருவதில் புதுவிதமான வழியை முன் வைக்கிறது.

ஒரு உயர்தரமான ரெஸ்டாரண்ட் அதில் விருந்துக்கான திட்டம் ,குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கு அழைப்பு என செய்லப்டும் இந்த இணையதளம் அதனை ஏற்போர் சேர்ந்து சாப்பிட வழி செய்வதன் மூலம் உணவு சந்திப்புகளை சமூகமயமாக்குகிறது.

இந்த தளத்தை பயன்படுத்த புதியவர்களோடு சாப்பிட தயராக இருந்தால் போதும்.இணையம் மூலம் ஏற்பாடு செய்வதன் நோக்கமே புதிய தொடர்புகளுக்கு தானே.ஆனால் மற்ற உணவு தளங்கள் சாப்பாடு மூலம் ஒரே துறையில் உள்ளவர்களை சந்திக்க வைத்து தொழில்ரீதியிலான தொடர்புகளை சாத்தியமாக்குவதில் கவனம் செலுத்துகின்றன என்றால் இந்த தளம் நட்பையே பிரதானமாக கொண்டிருக்கிறது.

சுவையான சாப்பாடும் தேவை,அதனை பேசியபடி சுவைத்து சாப்பிட்டு மகிழ புதிய நண்பர்களும் தேவை என நினைத்தால் இதில் பட்டியலிடப்பட்டுள்ள உணவு சந்திப்ப் அழைப்புகளை பார்த்து அதில் எது பிடித்திருக்கிறதோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு மீன் உணவு பிரியர்களுக்கான விருந்து என்னும் அழைப்போடு பெங்களூர் ஓட்டலில் சாப்பிட அழைப்பு இருக்கிறது.அதற்கான் கட்டணம்,எத்தனை பேர் தேவை என்ற விவரத்தோடு விருந்தின் தன்மை,மற்றும் அதன் பங்கேற்பாளர்களின் தன்மை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை பார்த்து நமக்கேற்ற நண்பர்கள் கிடைப்பார்களா என்று தீர்மானித்து கொள்ளலாம்.விருந்துக்கு சம்மதித்துள்ளவர்களின் விவரங்களையும் பார்க்கலாம்.

ஓகே என்றால் பதிவு செய்து விட்டு கட்டணம் செலுத்தி விட்டு குறிப்பிட்ட நாளில் சென்று விருந்தையும் சுவைக்கலாம்.புதிய நண்பர்களையும் சந்திக்கலாம்.

அறிமுகம் இல்லாதவர்களோடு சேர்ந்து சாப்பிடுவது தான் இந்த உணவு வலைப்பின்னலின் விஷேசம் என்றாலும் சிலருக்கு இதில் தயக்கம் இருக்கலாம்.அவர்கள் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பதிலாக தங்களது குடும்பத்தினர் மற்றும் தெரிந்த்வர்களோடு இந்த தளத்தின் வாயிலாக விருந்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

இதே போல பிரபலங்களோடு நட்சத்திர விருந்து சாப்பிடும் வாய்ப்பும் உள்ளது.நன்கொடை வழங்குவதற்கான சாரிட்டி லஞ்சும் இருக்கிறது.

இந்த தளம் பிரித்திருந்தால் நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.அப்படி பரிந்துரைத்தால் சலுகையும் தருகின்றனர்.

புதியவர்களை சந்திப்பதை சுவாரஸ்யமாக ஆக்கும் தனமையை இந்த தளம் கோன்டிருப்பதாக அதன் நிறுவனர்கள் கருதுகின்றனர்.சேர்ந்து சாப்பிடும் போது கடைபிடிப்பதற்கான விரிவான நெறிமூறைகளையும் கொடுத்துள்ளனர்.

இணையதள முகவரி;http://www.munchwithus.com

Advertisements

2 responses to “புதுமையான இணையதளம் மன்ச்மீல்ஸ்

    • நன்றி நண்பரே.இதே போன்ற மதிய உணவு தளங்கள் பற்றி சில பதிவுகள் ஏற்கனவே எழுதியுள்ளேன்.முடிந்தால் வாசிக்கவும் .

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s