திட்டமிடலில் உதவ மேலும் ஒரு இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம்.

திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி கொஞ்சம் சிக்கலானது.ஆனால் முழுமையானது.முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக தோன்றினாலும் பயன்படுத்த துவங்கினால் இதன் சிறப்புகள் புரியத்துவங்கிவிடும்.

வீட்டு வேலை,அலுவலக பணி,ஷாப்பிங்,வார இறுதி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் திட்டமிட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.முக்கியமாக செய்ய நினைக்கும் பணிகளை குறித்த நேரத்தில் நினைவில் கொள்வதற்கான வழியாகவும் இந்த சேவை கைகொடுக்கும்.

இன்று முதல் திட்டமிட்டு செயல்படலாம் என தீர்மானித்து விட்டால் இந்த தளத்தில் உறுப்பினர் கணக்கை துவக்கி கொள்ளலாம்.உறுப்பினரானவுடன் இமெயில் முகவரி பெட்டியை நினைவு படுத்தும் அமைப்போடு ஒரு பக்கம் வந்து நிற்கிறது.

அதில் வலது பக்கத்தில் செயல்களுக்கான பட்டியலும் அதற்கு பக்கத்தில் வேலைகளை குறித்து வைப்பதற்கான பகுதியும் தோன்றுகிறது.டிவிட்டர் கட்டம் அல்லது பேஸ்புக் சுவர் போல தோன்றும் அதில் மனதில் உள்ள வேலை டைப் செய்து சேமித்து கொள்ளலாம்.குறிப்பிட்ட அந்த வேலையை செய்து முடிப்பதற்கான தேதியையும் உடன் குறிப்பிடலாம்.

அதற்கு முன்பாக அந்த வேலை அலுவலகம் சார்ந்ததா,வீட்டு வேலை தொடர்பானதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.வலது பக்கம் பட்டியலில் வீடு அல்லது அலுவலகம் என்னும் பத்ததை கிளிக் செய்தால் போதும்,வேலைகளை அதற்கேற்ப வகைப்படுத்தி கொண்டு விடலாம்.ஷாப்பிங்,படிப்பது,தனிப்பட்ட விஷயம் போன்ற வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.தேவைப்பட்டால் புதிய வகைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

அலுவலகம் சென்றதும் என்ன வேலை செய்ய வேண்டும்,யாருக்கு போன் செய்ய வேண்டும் போன்றவற்றை எல்லாம் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வீட்டிற்கு வாங்கி செல்ல பொருட்கள் போன்றவற்றையும் குறித்து கொள்ளலாம்.

வார இறுதியன்று சினிமா பார்க்க நினைத்திருந்தால் அதையும் குறித்து கொள்ளலாம்.படிக்க வேண்டிய புத்தகங்கள் ,சந்திக்க வேண்டிய நண்பர்கள் ,கலந்து கொள்ள வேண்டிய விழாக்கள் போன்றவற்றையும் குறித்து கொள்ளலாம்.

இமெயிலுக்கு பதில் அளிக்க வேண்டியது,நண்பர் அனுப்பியதாக சொன்ன யூடியூப் வீடியோவை பார்ப்பது என சகல விதமான செயல்களையும் நினைவில் கொள்ள இந்த பட்டியலை பயன்படுத்தி கொள்ளலாம்.

வேலைகளை வகைப்படுத்தி கொள்வதோடு அவற்றை முன்னுரிமை அடிப்படையில் மாற்றி அமைத்து கொள்ளலாம்.இப்படி மாற்றுவதும் சுலபமானது.அதே போல வேலைகளில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்றாலும் சுலபமாகவே அதனை மேற்கொள்ளலாம்.

செயல்களை தள்ளி போட விரும்பினாலும் தேதியை மாற்றி கொள்ளலாம்.செய்து முடித்த வேலைகளின் பட்டியலையும் பார்க்க முடியும்.

இநத சேவையை பயன்ப்டுத்த துவங்கிய பின் இப்படியெல்லாம் கூட திட்டமிட முடியுமா?என்ற வியப்பு ஏற்படும்.அதே போல சினிமா பார்ப்பதில் துவங்கி,திருமணத்திற்கு செல்வது வரை நினைத்த எந்த வேலையையும் மறக்காமல் நினவில் கொள்ளவும் இந்த தளம் உதவும்.

இதனை பயன்படுத்தம் போதே திட்டமிடலையும் பட்டை தீட்டி கொண்டுவிடலாம்.

இணையதள முகவரி;http://todo.ly/

——————————-
திட்டமிட எளிமையான இணையதளம்.

திட்டமிட உதவும் தளங்களில் எளிமையானது என்னும் பட்டத்தை ‘நவ் டு திஸ்’ தளத்திற்கு தான் வழங்க வேண்டும்.எளிமையான் வழி என்றால் அப்படியொரு எளிமையான வழியை முன் வைக்கிறது இந்த தளம்.

திட்டமுடிவதற்கான அட்டவணை,வகைப்படுத்த படிட்யல்,செய்து முடித்த செய்லகள் என எதுவுமே இல்லாமல் தூய்மையான வெள்ளை காகிதமாக வரவேற்கிறது இந்த தளம்.

அதில் நடு நாயகமாக சின்னதாக ஒரு கட்டம் இருக்கிறது.அந்த கட்டத்தில் செய்ய வேண்டிய செய்லை குறிப்பிட்டு கிளிக் செயதால் போதும் திட்டமிடல் முடிந்தது.அதனை நீக்கி கொள்ளலாம்.அல்லது கிளியர் செய்து விட்டு அடுத்த வேலையை குறித்து கொள்ளலாம்.வேலை முடிந்தால் ஒட்டு மொத்தமாக நீக்கி விடலாம்.அவ்வளவு தான்.

காலண்டரின் ஆதிக்கம் இல்லாமல் திட்டமிடல் அட்டவனையின் சுமை இல்லாமல் சுலபமாக செய்லபட உதவும் உத்தேசத்தோடு ஜாக் லாட்விக் என்பவர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.தளத்தை போலவே இதற்கான அறிமுக பகுதியும் ரத்தின சுருக்கமாக அத்தனை எளிமையாக இருக்கிறது.

http://nowdothis.com/

——————————–

திட்டமிடல் தொடர்பான மேலும் சில பதிவுகள்;https://cybersimman.wordpress.com//?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s