வால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியா பயனாளிகளால் உருவாக்கப்படும் இணைய களஞ்சியம் என்பதும் அதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை இடம்பெற வைக்கவோ திருத்தவோ முடியும் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்ககும்.

இணையவாசிகளின் பங்களிப்பால் விக்கிபீடியா நிகரில்லாத களஞ்சியமாக பர்நது விரிந்து வளர்ந்துள்ளது.விக்கிபீடியா தகவல்களில் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் எழுப்பட்டாலும் அதன் பயன்பாடு பற்றி எந்த சந்தேகமும் இல்லை.

உலகின் முளை முடுக்கில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட விக்கிபீடியாவில் குறிப்புகளை பார்க்கலாம்.உண்மையில் விக்கிபீடியாவில் கட்டுரை உருவாக்கப்படுவது குறிப்பிட்ட ஒரு தலைப்பு அல்லது நிகழ்வினுடைய செல்வாக்கின் அடையாளமாக கருதப்படுகிறது.

விக்கியை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க விக்கிபீடியாவை அடிப்படையாக கொண்டு அதனை மேம்படுத்தும் அழகான முயற்சியாக புதிதாக ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

எம்பீடியா என்பது அந்த தளத்தின் பெயர்.அதன் நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான பெயரும் கூட!காரணம் விக்கிபீடியா கட்டுரைகளின் மீது அனுபவம் சார்ந்த கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இணையத்தில் ஏற்கனவே உள்ள தகவல்களுடன் இணையவாசிகள் தங்களது அனுபவம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் விக்கிபீடியாவை அடிப்படையாக கொண்ட இணைய சமூகத்தை உருவாக்கிவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எந்த தலைப்பு தொடர்பாகவும் யார் வேண்டுமானாலும் தங்களது தகவல்களை இடம் பெற வைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உண்மையிலேயே அற்புதமானது.விக்கிபீடியாவின் பலமே அதன் திறந்த தன்மை தான்.அதில் உள்ள கட்டுரைகளில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த தகவலை சேர்க்கலாம்.இந்த பங்களிப்பால் தான் விக்கி கட்டுரைகள் விரிவானதாக செறிவானதாக இருக்கின்றன.

ஆனால் விக்கிபீடியாவில் தகவல்களை சமர்பிப்பபதற்கும் வரம்புகள் இருக்கின்றன.அதற்கு மாறாக விக்கி கட்டுரைகளை கை வைக்காமல் அந்த கட்டுரை தலைப்பு தொடர்பான தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவது சிறந்த விஷயம் தானே.

உதாரணத்திற்கு விண்டோஸ் பற்றிய கட்டுரையில் இணையவாசிகள் தங்களது விண்டோஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.விண்டோஸ் தொடர்பான முதல் விளம்பரத்தை நாளிதழில் பார்த்த அனுபவத்தை அல்லது விண்டோசை முதன் முதலில் பயன்படுத்திய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

இதே போல பிரபலங்கள் தொடர்பான கட்டுரைகளில் ரசிகர்கள் அவரை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல அவர்களோடு பழகியவர்கள் நட்சத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயம் தொடர்பான தகவல்களையும் இணைக்கலாம்.இந்த அனுபவ பகிர்வுகள் விக்கி கட்டுரைகள் தரும் தக‌வல்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தையும் புரிதலையும் ஏற்படுத்தலாம்.

எந்த தலைப்பாக இருந்தாலும் சரி அந்த தலைப்பின் விக்கி கட்டுரையின் கீழ் இணையவாசிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.அதை படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட தலைப்பபு தொடர்பான கேள்வி பதில் பகுதியையும் இணையவாசிகள் உருவாக்கி உரையாடலில் ஈடுபடலாம்.அதே போல அந்த தலைப்பிற்கான இணைய வாக்கெடுப்பையும் நடத்தலாம்.

இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான தலைப்பை தேர்வு செய்து படித்துப்பார்க்கலாம்.மனதில் உள்ள தலைப்பை தேடிப்பார்க்கும் சவசதியும் இருக்கிறது.அந்த தலைப்பு தொட‌ர்பான அனுபவ பகிர்வுகளை தவறவிடாமல் இருக்க நினைத்தால் டிவிட்டரில் பின் தொடர்வது போன அந்த தலைப்பை பின் தொடர்வும் செய்யலாம்.அது மட்டும் அல்ல இந்த தகவல்களை டிவிட்டர்,பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் எத்தனை பேரால் பார்க்கப்பட்டுள்ளது,எத்தனை பேர் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.மேலும் சமீபத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களையும் கருத்துக்களின் பட்டியலையும் தனியே பார்க்கலாம்.

விக்கிபீடியாவை மேலும் சுவாரஸ்யமானதாக அதன் கட்டுரைகளை மேலும் உயிரோட்டமாக மாற்றக்கூடிய சேவை இந்த அனுபவம் சார்ந்த களஞ்சியம்.

இணையதள முகவரி;http://www.empedia.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s