மறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை.ஆனால் சில நேரங்களில் பிரபலங்கள் சொல்லாததும் செய்திகளாகும்.செய்யாதவையும் பரபரப்பாக பேசப்படும்.செல்வாக்கின் பக்க விளைவுகள் இவை.

கிசுகிசு,வதந்தி என பலவிதங்களில் வெளியாகும் இந்த செய்திகளை பிரபலங்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்துவதற்கில்லை.பிரபலங்கலும் இதை புரிந்து கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை அலட்சியப்படுத்தி விடுவதுண்டு.

ஆனால் எப்போதும் அப்படி அலட்சியமாக இருக்க முடியாது.சில நேரங்களில் தவறான தகவல்களோடு செய்தி வெளியாகிவிட்டதாக பிரபலங்கள் புழுங்கி தவிக்கும் நிலை ஏற்படலாம்.அப்போது தான் அவர்கள் செய்தியை மறுக்க விரும்புவார்கள்.

மறுப்பாக அறிக்கை வெளியிடலாம்.பேட்டி அளிக்கலாம்.ஆவேசமாக வழக்கு போடலாம்.அவதூறு செய்தி என்றோ பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளன என்றோ விளக்கம் அளிக்கலாம்.உண்மையை திரித்து கூறிவிட்டதாக புலம்பலாம்.

இப்போது வலைப்பதிவிலோ அல்லது அதைவிட சுலபமாக டிவிட்டரிலோ கூட மறுப்பு வெளியிடலாம்.இன்னும் ஒரு படி மேலே போய் யூடியூப் வீடியோ மூலமும் மறுக்கலாம்.

மறுப்புகளை வெளியிடுவதில் பிரபலங்களுக்கு உள்ள ஆர்வம் அவற்றை படிப்பதில் வாசகர்களுக்கும் உண்டு.

இப்படி மறுப்புகளை வெளியிட என்றே ஒரு இணையதளம் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?பிரபலங்களும் நட்சத்திரங்களும் இப்படி ஒரு தளம் தேவை என்று ஏங்கலாம் அல்லவா?அப்படி நினைத்து தான் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் டாங் மறுப்புகளை வெளியிட வழிசெய்வதற்காக என்றே ஐ கரெக்ட் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார்.

வாங்கே கூட பிரப்ல தொழிலதிபர் தான்.அதிலும் அவருக்கு நட்சத்திர நண்பர்களும் அதிகம் உள்ளனர்.அதனால் தானோ என்னவோ வாங் இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.

பொய்கள்,தவறான தகவல்கள்,திரித்து கூறப்பட்ட விவரங்களை மறுப்பதற்கான உலகலாவிய இணையதளம் என்று வர்ணிக்கப்படும் இந்த தளத்தில் பிரபலங்கள் தங்களைப்பற்றி தவறான தகவல்கள் வெளியாகும் போது அவற்றுக்கான மறுப்பு அல்லது திருத்தங்களை இங்கே பதிவு செய்யலாம்.

இந்த தளத்தில் மறுப்பு தெரிவிப்பது என்பது மிகவும் எளிதானது.எந்த செய்திக்கு மறுப்போ அதனை குறிப்பிட்டு அதற்கான மறுப்பை வெளியிடலாம்.செய்தி இடது பக்கமும் அதன் அருகிலேயே மறுப்பும் விளக்கமும் இடம்பெறும்.

இப்படி அருகருகே செய்தியையும் அதற்கான மறுப்பும் தோன்றுவது தவறான விவரங்களுக்கான சரியான விளக்கமாக அமையும்.

நட்சத்திரங்கள் என்றில்லை,அரசியல் தலைவர்கள் போன்றோரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.அதே போல வர்த்த நிறுவன அதிபர்களும் இதனை பயன்படுத்தி மறுப்பு வெளியிடலாம்.

அதாவது யாருக்கெல்லாம் தங்களை பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தர வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி தவறான விவரங்களை நேர் செய்யலாம்.இதற்காக வருட சந்தா செலுத்த வேண்டும்.தனிநபர் என்றால் 1000 டாலர் நிறுவனம் என்றால் 5000 டாலர் கட்டணம்.

நிச்சயம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இந்த தளம் சுவாரஸ்யத்தை அளிக்கும். ஒரு சேர் செய்திகள் மற்றும் மறுப்புகளை அலசிப்பார்ப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரலாம்.அதிலும் சமீபத்திய செய்திகளும் அதற்கான மறுப்புகளையும் தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்ளலாம். அதோடு மறுப்புகளை தேடி பார்க்கும் வசதியும் இருக்கிறது.

ஹாலிவுட நடிகர் ஸ்டீப்ன் பிரை தான் கதொலிக்கர்களுக்கு எதிரானவன் என்று சொல்லப்படுவதை இங்கு மறுத்திருக்கிறார்.முன்னாள் பிரதமர் டோனி பிலேரின் மனைவி செரி விருந்து ஒன்றுக்கு நடிகை போலவே உடை அணிந்து சென்றதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.நடிகை சியானா மில்லர் தான் டிவிட்டரில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

முதல் கட்டமாக தன்க்கு நெருக்கமானவர்களை எல்லாம் இந்த தளத்தில் வாங்க் உறுப்பினராக சேர்த்திருக்கிறார்.ஆனால நாளடைவில் திருத்தங்கள் மற்றும் விளகங்களுக்கான இருபிடமாக இந்த தளம் விளங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இணையதளம் முகவரி;http://www.icorrect.com/

One response to “மறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…

  1. பிரபலங்களுக்கு நிச்சயம் பயனுள்ள வலைத்தளம்தான் என்பதில் சந்தேகமில்லை. வாசகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.
    உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s