காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

நாட்டுப்புற பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இலக்கியவாதிகளின் கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இன்னும் பலவிதமான தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பாட்டுள்ளன.

இவற்றை போலவே பெண் பார்க்கும் அனுபவங்கள் தொகுக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இந்த கேள்விக்கான பதிலை யோசித்து கொண்டே டேட்டிங் டயாஸ்டர்ஸ் தளத்திற்கு சென்றால் அதில் லயித்து போய்விடுவீர்கள்.அட நமக்கும் இதே போன்ற தளம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவீர்கள்.காரணம் இந்த தளம் தொகுத்தளிக்கும் டேட்டிங் அனுபவங்கள் அத்தனை வண்ணமயமாக இருப்பது தான்.

டேட்டிங் அனுபவங்கள் என்பதைவிட டேட்டிங் கசந்த அனுபவங்கள்.அதாவது முதல் டேட்டிங்கில் தங்களுக்கு வாய்த்த துணையால் நொந்து போனவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்.

மேட் பார் ஈச் அதர் என்னும் ஜோடி பொருத்தம் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால் ஐயோ சாமி ஆளை விடு என தலை தெறிக்க ஓடும் அளவுக்கு சிலருக்கு முதல் டேட்டிங் அமைந்து விடுவதுண்டு.இந்த மறக்க முடியாத அனுபவங்கள் பற்றி அவர்களும் தங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்வார்கள்.இவற்றை கேட்கும் போதே இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று வியப்பும் திகைப்பபும் ஏற்படலாம்.

சில விசித்திரமான இருக்கலாம்.சில விநோதமாக இருக்கலாம்.சில திகைப்பாக இருக்கலாம்.ஒவ்வொருவர் அனுபவமும் ஒரு விதமானது .

இத்தகைய டேட்டிங் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே டேட்டிங் டயாஸ்டர்ஸ் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள்,பெண்கள் இருபாலரும் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான டேட்டிங் அனுபவங்களை இதில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்த அனுபவங்களை படிக்கும் போது சுவையாக மட்டும் அல்ல மனிதர்களில் எத்தனை வித்தியாசமானவர்கள் எல்லாம் இருக்கின்ற்னர் என்ற வியப்பும் ஏற்படுகிறது.மனிதர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்ற எண்ணமும் உண்டாகிறது.

உதாரணத்திற்கு இந்த அனுபவத்தை பாருங்கள்.

‘அவள் என்னை வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தாள்.அதை ஏற்று வீட்டிற்கு சென்ற போது அவள் அப்பா வரவேற்றார்.வீட்டினுள் அவள் குடும்பமே இருந்தது.அவர்கள் அனைவருக்கு என்னை பற்றி எல்லா விவரங்களும் தெரிந்திருந்தன.அப்பா.அம்மா,தங்கை,அண்ணன்,சித்தி என எல்லோரும் என்னிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தினர்.அது வரை அவள் வெளியே வரவேயில்லை’.

இது ஆணின் புலம்பல் என்றால் இந்த இளம்பெண்ணின் அனுபவம் இப்பைட் இருக்கிறது.முதல் டேட்டிங்கில் சந்தித்த வாலிபர் தன்னுடையை ஸ்பீக்கர் அமைப்பை பார்க்க விருப்பமா என்று கேட்டிருக்கிறார்.இளம் பெண்ணும் ஆர்வத்தோடு ஒப்புகொண்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார்.அங்கே ஒரு ஸ்பீக்கருக்கு பதில் 5 ஸ்பீக்கர்கள் இருந்தன.வாலிபரோ அவளிடம் பாடல் சிடிக்களை கொடுத்து கேட்க சொல்லி ஒவ்வொரு பாட்டிற்கும் ஒவ்வொரு ஸ்பீக்கரில் வரும் ஒலிகளை குறித்து தருமாறு கேட்டிருக்கிறார்.அதனடிப்படையில் பாடல்களை தேர்வு செய்வதாக கூறியிருக்கிறார்.

அந்த பெண்ணின் நிலை பரிதாபமாக தான் இருந்திருக்கும் அல்லவா?

இப்படி விதவிதமான டேட்டிங் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு வாலிபர் முதல் டேட்டிங்கில் 15 வது நிமிடத்தில் உன்னால் குழந்தை பெற்று கொள்ள முடியுமா என கேட்டிருக்கிறார்.

இன்னொரு வாலிபரோ ரெஸ்டாரண்டில் அரை மணி நேரம் பேசிய பிறகு உனது பக்கவாட்டு தோற்றம் நன்றாக இல்லை இந்த பக்கம் பந்து அமர்ந்து கொள் என்று கூறியிருக்கிறார்.

இன்னொரு பெண்ணோ தனது வயது பற்றி பொய் சொல்லி ஏமாற்றி வாலிபரோடு அதை பொருட்படுத்தாமல் பேசி விட்டு திரும்பியிருக்கிறார்.மறுநாள் அந்த நபர் அவளது தோழியிடம் பேசிக்கொண்டிருந்த போது தான் எதிராபார்த்த அளவுக்கு அவள் இல்லை என்றும் டேட்டிங் மிகவும் ஏமாற்றம் தந்தாதாகவும் கூறினாராம்.

வரிசையாக இந்த அனுபவங்களை படித்து பார்க்கும் போது மனிதர்களில் பல நிறங்கள் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

டேட்டிங்கில் ஒருவர் நடந்து கொள்வது அவர்களின் சுயநலத்தையும்,தன்முனைப்பையும்,பக்குவமின்மையையும்,அறியாமையையும் இன்னும் பிற மனித இயல்புகளையும் உணர்த்துகின்றன.

இளசுகளுக்கு இவை ஒரு பாடமாக கூட அமையலாம்.இந்த அனுபவங்கள் மூல ம் காதலில் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் இவற்றுக்கு கருத்தும் தெரிவிக்கலாம்.வாக்களிக்கவும் செய்யலாம்.

யோசித்து பாருங்கள் நம்மூர் பெண் பார்க்கும் படலங்களும் இதே போல சுவாரஸ்யமானவை தான்.அவற்றை எல்லாம் தொகுத்தால் நம்மவர்களின் போதாமைகளையும் அறியாமைகளையும் அதில் காணலாம்.

நமது கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றிய நுட்பமான செய்திகளையும் அவை முன்வைக்கும்.

இணையதள முகவரி;http://www.datingdisasters.me/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s