நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்

திட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே நினைத்து விட வேண்டியதில்லை.செய்ய நினைப்பவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்கள் தரும் ஊக்கத்தோடு அதை சாதித்தும் காட்டலாம்.

கோன்னாஸ்பியர் இணையதளம் இந்த நம்பிக்கையில் தான் துவக்கப்பட்டுள்ளது.செய்ய விரும்பும் செயல்களையும் சமூக மயமாக்க வந்திருக்கும் சேவை இது.

அதாவது பகிர்தலின் மகத்துவத்தை செய்து முடிக்க நினைப்பவற்றிலும் நிகழ்த்தி காட்ட விரும்பும் சேவை!

எதையும் மறக்காமல் இருக்க சிறிய காகிதத்தில் குறித்து வைத்து கொள்வது போல செய்து முடிக்க நினைப்பவற்றை குறித்து வைத்து கொள்வது அவற்றை மறந்து விடாமல் இருப்பதற்கான எளிய வழியாக கருதப்படுகிறது.இப்படி செய்ய நினைப்பவற்றை குறித்து கொள்ள உதவும் குறிப்பேடுகளாக செய்ல்படும் இணைய சேவைகளும் இருக்கின்றன.

ஆனால் செய்ய நினைப்பவற்றை குறித்து வைத்தால் மட்டும் போதுமா?அதற்கான ஊக்கம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் தானே.

அதை தான் கோன்னாஸ்பியர் செய்ய முயல்கிறது.எப்படி என்றால், நாம் செய்ய நினைப்பவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவற்றுக்கான ஊக்கத்தை பெற வழி செய்கிறது.

அந்த வகையில் செய்ய விரும்பும் செயல்களை பகிர்ந்து கொள்வதற்கான பேஸ்புக் என்றும் சொல்லலாம்.

எதை செய்ய நினைக்கிறோமோ அதனை உறுப்பினர்கள் இந்த தளத்தில் வெளியிடலாம்.அதாவது பகிர்ந்து கொள்ளலாம்.

எந்த செயலை வேண்டுமானாலும் வெளியிடலாம்.பேஸ்புக்கில் இருப்பது போன்ற கட்டத்தில் செயல்களை வெளியிட்ட பிறகு அதனை பேஸ்புக் கணக்கு மூலம் நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் மூலம் நண்பர்கள் உங்கள் நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும்.அது குறித்து கருத்து சொல்லி ஊக்குவிக்கவும் முடியும்.

உங்கள் நண்பர்கள் மட்டும் அல்ல,இந்த தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொண்டு அவர்களின் ஊக்கத்தையும் பெறலாம் என்பது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.

நான் செய்ய நினைப்பதெல்லாம் என்று பகிர்ந்து கொண்ட பிறகு நம்மை போல தங்களது திட்டங்களை பகிர்ந்து கொண்ட மற்ற உறுப்பினர்களின் செயல்களை படித்து பார்க்கலாம்.அந்த செயல்களுக்கு ஆதரவாக கருத்தும் தெரிவிக்கலாம்.அவர்களது செயல் பிடித்திருந்தால் அவர்களை பின் தொடரவும் செய்யலாம்.

இதே போலவே நம்மையும் மற்றவர்கள் பின் தொடர முன்வரலாம்.இது புதிய நட்புக்கு வழிவகுக்கும்.செயல்களை மையமாக கொண்ட நட்பு.ஊக்கம் தரக்கூடிய நட்பும் கூட!

மற்ற உறுப்பினர்களின் செயல்களை படித்து பார்ப்பதன் மூலமாக நம்க்கு தோன்றாத புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் நமது நகரில் நடக்ககூடிய சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் கூட இந்த பகிர்வுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நமக்கு நாமே ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு அதனை தனியே அடைய முயல்வதை விட மனதில் உள்ள எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களின் கருத்துக்கள் மற்றும் தோளில் தட்டி கொடுக்கும் ஊக்கத்தோடு அதனை நிறைவேற்ற முயல்வது சுவாரஸ்யமானது தானே.

இந்த தளத்தில் விதவிதமான மனிதர்களை சந்திக்கலாம்.அவர்கள் வாயிலாக புது வகையான செய்லகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.குறிப்பிட்ட செயலின் பின்னே உள்ள சிந்தனை கவர்ந்தால் அந்த எண்ணத்திற்குறியவரோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்ளலாம்.நமக்கும் கூட இத்தகைய நண்பர்கள் கிடைக்கலாம்.

ஒரு கட்டத்தில் இந்த தளத்தில் செய்லகளை வெளியிடும் வழக்கம் தவிர்க்க இயலாத பழக்கமாகவும் மாறிவிடலாம்.அது மேலும் உத்வேகத்தை தரக்கூடும்.

செயல்கள் சார்ந்த இந்த சமுக வலைப்பின்னல் தளம் சுவார்ஸ்யமானது.ஆனால் இதற்கென கணிசமான உறுப்பினர்கள் உருவானால் தான் இது பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி;http://www.gonnasphere.com/

Advertisements

One response to “நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்

  1. Pingback: Welcome all. Gonnasphere beta has released! | Gonnasphere Blog·

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s